Is Milk Good Or Bad For Health : நடுத்தர மக்கள், ஏழை எளியோர் மற்றும் பண்ணை வீட்டில் வசிப்பவர்கள் என அனைவராலும் வாங்க கூடிய, எளிய பொருளாக இருப்பதுதான் பால். அனைவரது வீட்டிலும் அத்தியாவசிய உணவு பொருளாக இருக்கும் இந்த பாலை, சிலர் அப்படியே காய்ச்சி குடிப்பர், இன்னும் சிலர் டீ-காபி அல்லது பூஸ்ட், ஹார்லிக்ஸ் சேர்த்து குடிப்பர். இன்னும் சிலருக்கு இரவில் பால் குடிக்கும் பழக்கமும் இருக்கும். ஆனால், இப்படி பால் குடிக்கும் அனைவருக்கும் பகிர் கிளப்பும் வகையில் சில மருத்துவர்கள் பேச ஆரம்பித்தனர். அதாவது, “பால் குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும்” என்பதுதான் அது. இதற்கு, பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் விடையளிக்கிறார்.
மருத்துவரின் வீடியோ:
“பால் பெண்களுக்கு ஆகாது. அதை குடிக்கவே கூடாது. பால், அந்தந்த விலங்குகளின் குட்டிகளுக்காக சுரக்கப்படுவது. அதை மனிதர்கள் குடித்து என்ன செய்ய போகிறீர்கள்” என்று ஒருவர் வேறு ஒரு வீடியோவில் பேசியிருந்தார். இதற்கு டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் ரிப்ளை செய்திருக்கிறார்.
பால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் வெவ்வேறு விதமான விளைவுகளை தருகிறது என்று கூறுகிறார் சந்தோஷ். இதில் இருக்கும் சர்க்கரையை லேக்டோஸ் என்றும், இதில் இருக்கும் புரதம் வே மற்றும் கேசின் என்றும் கூறும் அவர், இதை வருடக்கணக்காக சாப்பிடும் ஒருவருக்கு செரிக்கிறது என்றால் அவர்கள் பாலை குடிக்கலாம் என்கிறார்.
பாலில் இருக்கும் சத்துகள்:
பாலில், எலும்புக்கு தேவையான ஊட்டச்சத்து இருப்பதாக கூறும் அவர், ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் பால் குடிப்பது சிறந்தது என்கிறார்.
பால் நல்லதா கெட்டதா?
பால் நல்லதா கெட்டதா என்கிற விவாதமே கிடையாது என்று கூறும் அவர், அது ஒரு உணவு பொருள்தான் என்கிறார். அது உடலுக்கு செட் ஆகவில்லை என்றால், அதே ஊட்டச்சத்து இருக்கும் வேறு பொருளை சாப்பிடுங்கள் என்கிறார்.
உங்கள் ஒட்டுமொத்த உணவுமுறை மிகவும் முக்கியமானது:
நீங்கள் அரை லிட்டர் பால் (300 கிலோகலோரி) குடித்தாலும், உங்கள் 1,700 தினசரி கலோரிகளில் மிச்சமிருக்கும் கலோரிகள் மிகவும் முக்கியமானவை என்கிறார். புரதம், நார்ச்சத்து, கொழுப்புகள் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் என்று கூறும் இவர், அதுதான் உங்கள் ஆரோக்கியத்தை உண்மையில் தூக்கி நிறுத்தும் என்கிறார்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை:
Lactose Intolerance எனப்படும் பாதிப்பு இருப்பவர்கள் குறித்து பேசும் இவர், இப்படி இருப்பவர்கள் பாலையும் அதிகமாக குடித்து, பிற ஊட்டச்சத்து இருக்கும் சாப்பாடுகளை சாபிடவில்லை என்றால், அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார். இந்த அலர்ஜி இருப்பவர்கள் பால் குடித்தாலும், அதற்கு ஏற்ற பிற ஊட்டச்சத்துகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.
ஹார்மோன்:
பாலில் ஹார்மோன் இருப்பதாக கூறும் அவர், அதன் அளவு மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கிறார். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு லிட்டர் குடித்தால்தான் அது நம்மை தாக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுவதாக தெரிவித்துள்ளார். மொத்தத்தில், பாலை எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பதை வைத்தும், சூழ்நிலை மற்றும் வாழ்க்கை முறையை வைத்து பால் அருந்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள், மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் பேசிய வீடியோவை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை ஆகும். இதற்கு ZEE TAMIL NEWS பொறுப்பேற்காது என்பது குறிப்பிடத்தக்கது.)
மேலும் படிக்க | அடாவடி கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் சூப்பர் பொடி: ட்ரை பண்ணி பாருங்க
மேலும் படிக்க | திருமணத்திற்கு முன் வெயிட் லாஸ் செய்ய..30 நாள் இதை செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









