)
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், மொபைல் போன் கம்ப்யூட்டர் பயன்பாடு வயது வித்தியாசம் இல்லாமல், அனைவரிடத்திலும் காண முடிகிறது. குழந்தைகள் முதல் இளம் தொழில் வல்லுநர்கள் வரை அனைவரும் மணிக்கணக்கில் கணினி திரையில் நேரத்தை செலவழிக்கிறார்கள். அதிலும் கொரோனா காலத்திற்குப் பிறகு, ஆன்லைன் கல்வி, வொர்க் பிரம் ஹோம் கலாச்சாரம் பெருகிவிட்டது. பாட்டு கிளாஸ் முதல் நடன கிளாஸ் வரை எல்லாமே கணினி மயம்தான். இது போதாது என்று ஒரு பக்கம் ஆன்லைன் விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் என கணினியும் மொபைல் போனும் நம் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்து விட்டது.
மொபைல் போனில் வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் வெப்பம் மூளை கட்டியை ஏற்படுத்துமா?
மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதால், குறிப்பாக மொபைலில் காதில் வைத்து நீண்ட நேரம் பேசுவதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் வெப்பம், உடல் நலத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று பல ஆய்வுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இந்த நிலையில், நீண்ட நேர மொபைல் பயன்பாடு மூளைக்கட்டி அபாயத்தை அதிகரிக்குமா என்ற கேள்விக்கான பதிலை கண்டறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மொபைல் பயன்பாடு
உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற உலகளாவிய மருத்துவ அமைப்புகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், மொபைல் அல்லது மடிக்கணினி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கதிர்வீச்சு, மூளையில் கட்டியை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கும் வகையிலான அறிவியல் ஆதாரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இருப்பினும், டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவது மூளையின் செயல்திறனை பாதிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மொபைல்கள் மற்றும் மடிக்கணினிகள் அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சை வெளியிடுகின்றன
புனேவில் உள்ள DPU சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாரங் கோடேச்சா, மொபைல்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற சாதனங்கள் அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சை வெளியிடுகின்றன. DNA என்னும் டிஆக்சி ரைபோநியூக்ளிக் அமிலம் சேதப்படுத்தி கட்டிகளை உருவாக்க போதுமான சக்தி அதனிடம் இல்லை என்று விளக்குகிறார். இதற்கு நேர்மாறாக, புற்றுநோயை உண்டாக்கும் அயனியாக்கம் செய்யும் கதிர்வீச்சு (எக்ஸ்-கதிர்கள் அல்லது UV கதிர்கள் போன்றவை) DNA என்னும் மரபணுக்களை சேதப்படுத்தும்.
இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் பிரச்சனைகள்
இருப்பினும், டிஜிட்டல் திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவது மறைமுகமாக மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து திரையை பார்ப்பதால் தலைவலி, தூக்கமின்மை, எதிலும் கவனம் செலுத்த இயலாமை மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இந்த பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. ’இந்த அறிகுறிகள் மூளைக் கட்டியுடன் நேரடியாக தொடர்புடையவை அல்ல, ஆனால் அவை மெதுவாக நமது மூளையின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும். ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினியின் சரியான பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது’ என முன்னணி நரம்பியல் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்
மொபைல் போனை பாதுகாப்பாக பயன்படுத்த கடைபிடிக்க வேண்டியவை
1. மொபைலில் பேசும்போது ஸ்பீக்கர் பயன்முறை அல்லது இயர்போன்களைப் பயன்படுத்தவும்.
2. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் பிறகு கண்கள் மற்றும் மூளைக்கு ஓய்வு கொடுங்கள்.
3. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 1-2 மணிநேரம் வெளிப்புற விளையாட்டுகளை விளையாட ஊக்குவிக்கவும்.
4. இரவில் தூங்குவதற்கு முன் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ