Health Benefits Of Mango Seeds : சம்மர் சீசன் ஆரம்பித்தாலே, அதனுடன் சேர்ந்து மாம்பழ சீசனும் ஆரம்பித்து விடும். மாம்பழத்தின் இனிப்பு/புளிப்பு கலந்த சுவை, அனைவரையும் சுண்டியிழுக்க வல்லது. இதனை ஸ்மூதி, பழச்சாறு, சாலட் உள்ளிட்ட பல வகையாக செய்து சாப்பிடலாம்.
மாம்பழத்தில் இருக்கும் நன்மைகள்:
1.சுவையான மாம்பழத்தில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.
2.மாம்பழத்தில் இருக்கும் என்சைம் மற்றும் அமலீஸ் சத்துக்கள், உடலில் செரிமானத்தை ஏற்படுத்தும் ஃபைபர் சத்துகளை அதிகரிக்க உதவும். எனவே, இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
3.மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் C சத்து, உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இது, உங்கள் உடலில் இருக்கும் இன்ஃபெக்ஷன்கள் குறைய உதவலாம்.
4.வைட்டமின் A சத்தும், மாம்பழத்தில் இருப்பதால், இது கண்களுக்கும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
5.மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை கலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால், சருமத்தின் இளமைத்தன்மை குறையாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
மாம்பழ கொட்டையில் இருக்கும் நன்மைகள்:
நாம் மாம்பழத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளை ஒன்று, தூக்கியெறிந்து விடுவோம். அப்படியில்லை என்றால், மரமாக வளர வேண்டுமென விதை விதைப்போம். ஆனால், இதனால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று, தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
உடல் எடை குறைப்பு:
மாம்பழத்தின் கொட்டைகள், உடல் எடையை குறைக்க உதவும் என்று தேசிய சுகதார மையம் தெரிவித்திருக்கிறது. ஆஃப்ரிக்கன் மாம்பழ கொட்டைகள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதாக கூறப்படுகிறது. இது, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை குறைக்கவும் உதவுமாம்.
ரத்த சர்க்கரை அளவு:
மாம்பழத்தின் கொட்டைகள், உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுமாம். இது, டயாபிட்டீஸ் நோய் வராமலும் தடுக்க உதவுமாம். இன்சுலின் அளவை அதிகரித்து, HbA1c-ன் அளவை இது குறைக்கிறது. இதனால், நெடுங்கால ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சரும பராமரிப்பு:
மாம்பழத்தோடு சேர்த்து, மாம்பழத்தின் கொட்டையும் சரும பராமரிப்புக்கு உதவுமாம். சருமத்தையும் முகத்தையும் அழகாக பராமரிக்க வேண்டுமென நினைப்பவர்கள், இந்த மாம்பழ கொட்டைகளை அதற்காக பயன்படுத்திகொள்ளலாம். அடிக்கடி இதனை உபயோகிப்பதால், முடியின் நுனி முதல் வேர் வரை அனைத்தும் ஸ்டராங்காக இருக்குமாம்.
இதய பராமரிப்பு:
மாம்பழ கொட்டைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் சத்துகளும் இருக்கிறதாம். அதனுடன் சேர்த்து இதில் நார்பொருள் சத்து (Dietry fiber) இருக்கிறது. இவை இரண்டுமே இதயத்திற்கு நன்மை பயப்பவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், மாம்பழ கொட்டை கொலஸ்ட்ரால் குறைப்பிற்கு உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் இதய நோய் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | மாம்பழம் பிரியர்களே.. மாம்பழத்தில் எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









