கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்

மருத்துவமனைகள் நிரம்பி வழியும் இந்த கால கட்டத்தில், வீட்டில் சில மருத்துவ கருவிகளுடன் நம்மை நாமே பரிசோதித்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்கலாம். 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 24, 2021, 10:53 AM IST
  • கொரோனா தொற்று ஏற்பட்டாலும், எல்லோருக்கும் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறுவதற்கான தேவை இல்லை.
  • உங்கள் உடலின் ஆக்ஸிஜன் SpO2 அளவை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
  • ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், COVID-19 தொற்றுநோய் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது
கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்

இந்தியாவில், கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து தீயாய் பரவி வரும் நிலையில், நம்மை நாம் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

மருத்துவமனைகள் நிரம்பி வழியும் இந்த கால கட்டத்தில், வீட்டில் சில மருத்துவ கருவிகளுடன் நம்மை நாமே பரிசோதித்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்கலாம். ஏனெனில், கொரோனா தொற்று ஏற்பட்டாலும், எல்லோருக்கும் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறுவதற்கான தேவை இல்லை.  நம்மை நாமே தனிமைபடுத்திக் கொண்டு, டாக்டரின் பரிந்துரைப்படி, மருந்துகள், சத்தான உணவுகள் எடுத்துக் கொண்டாலே போது. 

அந்நிலையில், நம் உடல் நிலையை கண்காணித்துக் கொள்ள சில மருத்துவ கருவிகள் வீட்டில், அவசியம் இருக்க வேண்டும்
உங்களுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்தி உங்கள் SpO2 அளவை சரிபார்க்க வேண்டும். 

ஆக்சிமீட்டர் (Oximeter)
வீட்டில் ஆக்ஸிமீட்டர் வைத்திருப்பது அவசியம். உங்களுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்தி உங்கள் உடலின் ஆக்ஸிஜன் SpO2 அளவை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.  அமேசான், பிளிப்கார்ட்  போன்ற எந்தவொரு இ-காமர்ஸ் வலைத்தளத்திலிருந்தும் நீங்கள் ஒரு நல்ல ஆக்சிமீட்டரை வாங்க முடியும்.  

இரத்த அழுத்த மானிட்டர் (Blood pressure monitor)
இரத்த அழுத்த மானிட்டர் சந்தையில் மிக எளிதாகக் கிடைக்கிறது. கொரோனா காலத்தில் வீட்டில் இருக்க வேண்டிய அத்தியாவசிய மருத்துவ கருவியில் இதுவும் ஒன்று. இது உங்கள் இரத்த அழுத்தத்தை உடனடியாக அளவிடுகிறது. ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், COVID-19 தொற்றுநோய் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது.

ALSO READ | காப்பீடு செய்தும் பணம் கட்டினால் தான் சிகிச்சையா; மருத்துவமனைகளுக்கு ஆணையம் கடும் எச்சரிக்கை

போர்டபிள் ஈ.சி.ஜி மானிட்டர் (Portable personal ECG monitor) 
போர்ட்டபிள் ஈ.சி.ஜி மானிட்டர், வீட்டில் இருக்க வேண்டிய மற்றொரு முக்கியமான கேஜெட்டாகும். உங்கள் இதயம் நன்றாக செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, இதனை உங்கள் ஸ்மார்ட்போனுடன் எளிதாக இணைக்க முடியும். இது ஈ-காமர்ஸ் தளங்களில் அல்லது அருகிலுள்ள கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.

ஐஆர் தெர்மோமீட்டர் (IR thermometer)
கொரோனா தொற்று இருப்பதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்று காய்ச்சல், எனவே வீட்டில் ஒரு ஐஆர் தர்மாமீட்டார் வைத்திருக்க வேண்டும். IR thermometer ஆன்லைன் மற்றும்  கடைகளில் மிக எளிதாக கிடைக்கிறது.

குளுக்கோமீட்டர் (Glucometer)
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்திருந்தால், நீங்கள் உடனடியாக ஒரு கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும். குளுக்கோமீட்டர் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரை அளவை அளவிடுகிறது.

ALSO READ | இந்தியாவில் விரைவில் ட்ரோன்கள் மூலம் தடுப்பூசி விநியோகம்? கை கோர்க்கும் IIT-ICMR

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News