)
நவீன யுகத்தில் நம்மை ஆட்டிப்படைக்கும் பல வித நோய்களில் சிறுநீரக கற்களும் அடங்கும்.ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரக கற்கள் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இது மிகவும் வேதனையான நிலை. சிறுநீரில் உள்ள சில இரசாயனங்கள் படிகங்களாக மாறி படிப்படியாக திடமான கற்களின் வடிவத்தை எடுக்கும்போது அவை ஏற்படுகின்றன.
மரபியல், போதுமான நீர் உட்கொள்ளாத நிலை மற்றும் சில மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட பல காரணிகளால் சிறுநீரக கற்கள் ஏற்படலாம் என்றாலும், நமது உணவுமுறை அவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் மறுக்க இயலாது. சில உணவுகளை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது சிறுநீரக கற்களின் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கும்.அத்தகைய 5 உணவுகளைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
சிறுநீரக கற்கள் ஏற்பட காரணமாக இருக்கும் சில உணவுகள்
1. ஆக்சலேட் நிறைந்த உணவுப் பொருட்கள்
ஆக்சலேட் என்பது பல தாவரங்களில் காணப்படும் இயற்கையாகவே நிகழும் ஒரு கலவை ஆகும். இது கால்சியத்துடன் இணைந்தால், கால்சியம் ஆக்சலேட் படிகங்களை உருவாக்குகிறது. அவை சிறுநீரக கற்களின் மிகவும் பொதுவான வடிவமாகும். கீரை, பீட்ரூட், சாக்லேட், நட்ஸ் வகைகள் (பாதாம், முந்திரி போன்றவை), சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் சோயா பொருட்கள் ஆக்சலேட்டின் வளமான ஆதாரங்கள். சிறுநீரக கற்கள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், இந்த உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துவது நன்மை (Health Tips) பயக்கும்.
2. விலங்கு புரதம்
விலங்கு புரதம் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் மற்றும் சிறுநீரை அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாற்றும், யூரிக் அமில கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். இது தவிர, சிறுநீரில், கல் உருவாவதைத் தடுக்க உதவும் சிட்ரேட்டின் அளவைக் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பு இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை மற்றும் கடல் உணவு போன்ற விலங்கு புரதத்தை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும் என்பதால், இதற்கு பயறு, பீன்ஸ் மற்றும் டோஃபு போன்ற சைவ புரத மூலங்களுக்கு முன்னுரிமை அளிப்பது நன்மை பயக்கும்.
3. அதிகப்படியான உப்பு (சோடியம்)
நமது உணவில் அதிகப்படியான உப்பு சிறுநீரகங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சோடியம் அதிகமாக உட்கொள்வது சிறுநீரில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கும். இது கால்சியம் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி டு ஈட் வகை உணவுகள், துரித உணவு, சிப்ஸ் மற்றும் ஊறுகாய்களில் பெரும்பாலும் அதிக உப்பு இருக்கும். புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த உதவும்.
4. சோடா மற்றும் இனிப்பு பானங்கள்
சோடா, எனர்ஜி பானங்கள் மற்றும் பிற சர்க்கரை சார்ந்த பானங்களை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இவற்றில் பெரும்பாலும் அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் உள்ளது. இது சிறுநீரில் கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், கல் உருவாவதைத் தடுக்கவும் உதவும் சிறந்த பானம் தண்ணீர் ஆகும்.
5. பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவு
பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளில் பெரும்பாலும் அதிக அளவு உப்பு, சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் செயற்கை சேர்க்கைகள் உள்ளன. இவை அனைத்தும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். இந்த உணவுப் பொருட்களுக்குப் பதிலாக, முழு தானியங்கள், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவை உட்கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ