தென் கொரியாவின் தலைநகரமான சியோலை சேர்ந்த ஃப்ரீலான்ஸ் மாடல் ஷெர்ரி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பின்பற்றும் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி குறித்து பகிர்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 23) அவர் வெளியிட்ட வீடியோவில், 6 நாட்களில் 4 கிலோ உடல் எடையை குறைக்க தனது உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை விவரங்களை பகிர்ந்து உள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நான் எந்த வகையிலும் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்தும் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற சிந்தனையை குறித்தும் உங்களுக்கு ஊக்குவிக்கவில்லை. நான் நிபுணர் அல்ல. நான் என்னுடைய சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
நான் 6 நாட்களில் 4 கிலோ எடையை குறைத்தேன். முதலில் 'ஸ்விட்ச் ஆன் டயட்' குறித்து பேசுகிறேன். இது உண்மையில் எனது உடல் எடையை குறைக்க உதவியது. இது ஒரு கொரிய மருத்துவரால் உருவாக்கப்பட்ட 4 வார திட்டமாகும். இது வளர்சித்தை மாற்றத்தை அதிகரிப்பதோடு தசை இழப்பை தடுக்கிறது மற்றும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துகிறது.
மேலும் படிங்க: ஆபத்தில் முடிந்த உடல் எடை குறைப்பு... 104 கிலோவில் இருந்து 30 கிலோ... மீண்டது எப்படி?
- அதன்படி, முதல் வாரத்தில், நீங்கள் புரத ஷேக்குகள், காய்கறிகள் மற்றும் அதிக புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
- இரண்டாவது வாரத்தில் தசை மீட்புக்காக அதிக புரதம் நிறைந்த உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் சாப்பிடாமலும் இருக்க வேண்டும்.
- மூன்றாவது வாரத்தில், சாப்பிடாத நாட்கள் அதிகமாக இருப்பதோடு புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது அதிகப்படியாக கொழுப்பை எரிவதற்கு வழிவகுக்கிறது.
என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது
- முதல் 3 நாட்கள் காலை உணவு, மதிய உணவு, ஸ்னாக் மற்றும் இரவு உணவிற்கு புரதம் நிறைந்த ஷேக் மீல்ஸ் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதையடுத்து மல்டி கிரேன் ரைஸ், வேக வைத்த கோழி, மீன், நட்ஸ், முட்டை, பெர்ரி, வாழைப்பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இந்த உணவுமுறை திட்டத்தில் காஃபின், ஆல்கஹால் (alcohol), பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகியவை எடுத்துக்கொள்ள கூடாது.
ஸ்விட்ச் ஆன் டயட் உங்கள் தசைகளை பாதுகாக்கும். நான் இதை கடந்த ஆண்டு செய்தேன். இது எனது கொழுப்பு சதவீதத்தை குறைக்க உதவியது. சரியாக சொன்னால் அது குளிர்காலம். இது நிச்சயமாக எனது ஹார்மோன்களை பாதித்தது. குடல் உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது. அதனால்தான் நான் எனது ஸ்விட்ச் ஆன் டயட்டை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு 3 நாட்கள் சாப்பிடாமல் எல்லாவற்றையும் மீட்டமைத்தேன். ஆனால் இம்முறை நான் சில மாற்றங்களை செய்தேன். பால் பொருட்களை தவிர்த்தேன். நான் அதை அதிக அழற்சி எதிர்ப்பு சக்தியாக மாற்றினேன். மேலும் நான் நார்ச்சத்தில் அதிகம் கவனம் செலுத்தினேன் என கூறினார்.
ஸ்விட்ச் ஆன் டயட் என்றால் என்ன?
இது தென்கொரிய நாட்டின் ஒரு பிரபலமான நடைமுறை ஆகும். மருத்துவர் பார்க் யோங்-வூ என்பரால் ஸ்விட்ச் ஆன் டயட் உருவாக்கப்பட்டது. எடை குறைப்பு மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கான ஒரு நடைமுறை. ஸ்விட்ச் ஆன் டயட் என்பது தசை இழப்பு இல்லாமல் கொழுப்பை எரிப்பதை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட 4 வார திட்டமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









