ஹெட்போன் உபயோகித்தால் காது கேட்காது! எச்சரிக்கும் சுகாதாரத்துறை..

Prolonged Use Of Headphones Cause Hearing Loss : இந்த காலத்தில் இளைஞர்கள் பலர், ஹெட்போன் போடும் பழக்கத்தை உடயவர்களாக இருக்கின்றனர். இதனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 2, 2025, 06:03 PM IST
  • ஹெட்போன் பயன்பாடு..
  • காது கேட்காமல் போகலாம்
  • சுகாதாரத்துறை எச்சரிக்கை
ஹெட்போன் உபயோகித்தால் காது கேட்காது! எச்சரிக்கும் சுகாதாரத்துறை..

Prolonged Use Of Headphones Cause Hearing Loss : தினமும் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஹெட்ஃபோன்கள் மற்றும் ஹெட் செட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது, இதனால், காது கேளாத பாதிப்பும் ஏற்படும் என சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. இதனால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

ஹெட்போன்ஸ்:

இளைஞர்கள் பலர் தங்களது கழுத்தில் ப்ளூடூத் ஹெட்போன்ஸ் மாட்டிக்கொண்டு எங்கு சென்றாலும் அதனுடனேயே இருப்பதை பார்த்திருப்போம். இன்னும் சிலர் வேலை பார்க்கும் போது, புத்தகம் படிக்கும்போது, சாலையில் நடக்கும் போது, பயணம் செய்யும்போது என 24 மணி நேரமும் ஹெட்போன்ஸ் உடனையே சுத்துவர். இதனால் பாதிப்பு ஏற்படும் என்பது சிலருக்கு தெரியும். அது தெரிந்தும் கூட இதனை வாலன்டியராக செய்கின்றனர். இதனால், காது கேளாமை ஏற்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

எத்தனை மணி நேரம் பயன்படுத்த வேண்டும்?

ஒரு நாளைக்கு, 2 மணி நேரத்திற்கு மேல் ஹெட்போன்ஸை உபயோகிக்க கூடாதாம்.  அதிலும், இந்த 2 மணி நேரத்திற்கு தொடர்ந்து ஹெட்போன்ஸை உபயோகிக்க கூடாது என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஒரு நாளில், தகுந்த இடைவேளை விட்டு, 2 மணி நேரம் ஹெட்போன்ஸை உபயோகிக்கலாம் என அந்த அமைச்சகம் கூறியிருக்கிறது. 

சுகாதரத்துறை அதிகாரியின் கடிதம்:

இது குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் அதுல் கோயல் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிக நேரம் ஹெட்போன்ஸ் பயன்படுத்துவதால் என்ன பிரச்சனை ஏற்படும் என்பது போன்ற விவரங்களை அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதில், ஹெட்போன்ஸை நீண்ட நேரம் பயன்படுத்திய பிறகு கேட்கும் திறனில் சில மாற்றங்கள் ஏற்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்த சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி ஏற்படும் மாற்றங்கள் அன்றாட வாழ்வில் எளிதில் கவனிக்கப்படாது என்று கூறியிருக்கும் அவர், இது நிரந்தர காது கேளாமையை ஏற்படுத்தலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். பாதுகாப்பற்ற ஹெட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்திய பின்பு, காதில் ஏதோ சத்தம் கேட்பது போல இருக்குமாம். வளர்ந்து வரும் ஆன்லைன் கேமிங் கலாச்சாரமும், இளைஞர்களின் அதிக பாடல் கேட்கும் பழக்கங்களும் இதற்கு வழிவகுப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

காதுகளை எப்படி பாதுகாப்பது?

இப்போது இருக்கும் நிலைமையில், யாரும் ஹெட்போன்ஸ் இல்லாமல் வாழ முடியாத நிலையில் இருக்கின்றனர். ஹெட்போன்ஸ் போட்டாலும், நம் காதுகளை எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

சத்தம்:

  • எப்போதும் குறைவான வால்யூமில் ஹெட்போன்ஸை உபயோகிக்கவும்
  • உங்கள் டிவைஸில் வால்யூமை கண்ட்ரோல் செய்யும் ஆப்ஷனை ஆன் செய்யவும்
  • உலக சுகாதார மையம், 85 டெசிபலில் ஹெட்போன்ஸ் வால்யூம் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.
  • நாய்ஸ் கேன்சலிங் ஹெட்போன்ஸ்:
  • வாங்கும் போதே நாய்ஸ் கேன்சலிங் ஹெட்போன்ஸை வாங்கிக்கொள்ள வேண்டும். இவை உங்கள் காதுகளை அதிக சத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவும்.

ஓய்வு:

  • 15 நிமிடத்திற்கு அல்லது 30 நிமிடத்திற்கு ஒரு முறை ஹெட்போன்ஸை கழற்றி வைத்து விட்டு ஓய்வு கொடுக்க வேண்டும்
  • காதுகளில் வலி ஏற்பட்டால், உடனே ஹெட்போன்ஸ் பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.
  • அவ்வப்போது இயர்பட்ஸை சுத்தம் செய்ய வேண்டும். 
  • காதுக்குள் புகும் ஹெட்போன்ஸை மட்டும் உபயோகிக்கவும்.

மேலும் படிக்க | ஹெட்போன் அதிகம் பயன்படுத்தினால் என்ன ஆகும்? இதை தெரிஞ்சுக்கோங்க...!

மேலும் படிக்க | Brain Health: மூளையின் ஆற்றலை சத்தமில்லாமல் காலி செய்யும்... சில ஆபத்தான பழக்கங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News