பப்பாளி சூப்பர் புட் தான்... ஆனால் இந்த பிரச்சனை இருந்தால் அளவோடு சாப்பிடுங்க

பப்பாளியில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. எனினும், பப்பாளி பழம் அனைவருக்கும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. சிலருக்கு அது பக்க விளைவுகளை கொடுக்கலாம்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 9, 2025, 12:14 PM IST
  • தொப்பை கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட பழங்களில் பப்பாளி முதல் இடத்தில் உள்ளது.
  • பப்பாளி பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்.
  • பப்பாளி பழம் அனைவருக்கும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை.
பப்பாளி சூப்பர் புட் தான்... ஆனால் இந்த பிரச்சனை இருந்தால் அளவோடு சாப்பிடுங்க

பழங்கள் அனைத்துமே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது தான். சூப்பர் ஃபுட்டாக கருதப்படும் பழங்கள் என்றதும் நம் மனதில் சில பழங்கள் தோன்றும். அதில் ஒன்று பப்பாளி. இதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. எனினும், பப்பாளி பழம் அனைவருக்கும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. சிலருக்கு அது பக்க விளைவுகளை கொடுக்கலாம்.

Add Zee News as a Preferred Source

இன்றைய கட்டுரையில், பப்பாளி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதனால் ஏற்படும் சில பக்க விளைவுகள், பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளும் சரியான முறை, சரியான நேரம் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பப்பாளி பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்

1. பப்பாளி செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. அதிலும் மலச்சிக்கல் இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டாலே போதும். இதைவிட சிறந்த தீர்வு எதிலும் இல்லை எனலாம்.

2. பப்பாளியில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். அதிலும் இது கலோரி அளவுகளிலும் மிகவும் குறைவு. இதனால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். பசி எடுக்காமல் இருப்பதால் அதிகம் சாப்பிடும் நிலையை தவிர்க்கலாம். உடல் பருமன் தொப்பை கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட பழங்களில் பப்பாளி முதல் இடத்தில் உள்ளது.

3. இதய ஆரோக்கியம் சிறப்பாக பப்பாளி பெரிதும் உதவும். இதில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

4. உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட பப்பாளி, சரும செல்களை சீர் செய்து, சரும சுருக்கங்களை நீக்கி, இளமையை பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள லைக்கோபின், சுருக்கங்களைப் போக்கும் அருமருந்து. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து உடலை காய்கிறது.

மேலும் படிக்க | வயிற்றுப் புண் முக்கிய அறிகுறிகள்..! சரி செய்வது எப்படி? முக்கிய தகவல்

பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் சில பக்க விளைவுகள்

பப்பாளி ஆரோக்கியமான காய் என்றாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள், இதனை தவிர்க்க வேண்டும்.

1. ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உள்ளவர்கள் பப்பாளியை அளவோடு சாப்பிடுவது நல்லது. அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் போது இதில் உள்ள சயனோஜெனிக் கிளைகோசைடுகள், ஹைட்ரஜன் சயனைடாக மாறி, இதய அசௌகரியம் மற்றும் பாதகமான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

2. வயிற்றுப்போக்கு

குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது என்றாலும், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளியை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கலுக்கு மருந்தாக பயன்படும் பப்பாளி, வயிற்றுப் போக்கை அதிகரித்து பிரச்சனையை தீவிர படுத்தலாம்.

3. அலர்ஜி பிரச்சனை

பப்பாளி அனைவருக்கும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். இதனால் சுவாசத்தில் பிரச்சனை, சுவாசக் கோளாறுகள், சருமத்தில் அரிப்பு ஆகியவை ஏற்படலாம்.

4. கர்ப்பிணிகள்

கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் அதிக அளவில் பப்பாளி சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். பொதுவாகவே கர்ப்பிணிகள், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப உணவுகளை உண்பது நல்லது. எனவே நீங்கள் எந்த அளவிற்கு பப்பாளி எடுத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ள, மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... தினம் ஒரு கைப்பிடி முளைகட்டிய கொண்டைக்கடலை...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News