இளமையில் மன அழுத்தம்..முதுமையில் என்னவாகும்? ‘இந்த’ நோய் பாதிப்புகள் வரலாம்! ஜாக்கிரதை..

List Of Illness You Might Face In Old Age : நம்மில் பலர், இளமையாக இருக்கும் காலத்திலும் அதிக மன அழுத்தத்துடன் இருக்கிறோம். இதனால், முதுமையில் என்ன ஆகும் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : May 6, 2025, 05:31 PM IST
  • இளமையில் மன அழுத்தம்..
  • முதுமையில் என்ன ஆகும்?
  • இந்த நோய் பாதிப்புகள் வரலாம்..
இளமையில் மன அழுத்தம்..முதுமையில் என்னவாகும்? ‘இந்த’ நோய் பாதிப்புகள் வரலாம்! ஜாக்கிரதை..

List Of Illness You Might Face In Old Age : குழந்தையாக இருக்கும்போது, நமக்கு பெரிதாக இந்த ஒரு பொறுப்புணர்வும் இருக்காது. காரணம் நம்மிடம் கொடுக்கப்படும் பொறுப்புகள் குறைவானதாக இருக்கும். ஆனால், வளரும் பருவம் அப்படி கிடையாது. வீட்டு பொறுப்புகள், நம்மை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகள், சுற்றியிருப்பவர்களை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்புகள் என அனைத்தும் நம் தலையில் இருக்கும். இதனால்தான் பலர் “நாம் வளராமல் குழந்தையாகவே இருந்திருக்கலாம்” என்று பலர் இன்னும் ஃபீலிங்குடன் பேசுவர். இளமையாக இருக்கும் போதுதான், காதல்-கல்யாணம், கெரியர் என அனைத்தும் செட் ஆகும். 

இளமையில் மன அழுத்தம்:

20களில் பலர் மன அழுத்தில் இருக்க காரணம், அவர்கள் அவர்களே கண்டுகொள்வதும், உறவுகளை உருவாக்குவதும்தான் காரணம். அது மட்டுமல்ல, வேலை மற்றும் தொழில் குறித்து கவலைகள் வரும். குடும்பத்தை விட்டு தள்ளியிருக்க வேண்டும் என்கிற எண்ணம், இந்த உலகில் நமக்கென்று என்ன இடம் இருக்கிறது? என்பது போன்று பல்வேறு குழப்பங்கள் மனதில் தாேன்றும். எனவே, இளமை காலத்தில் அனைவருக்கும் மன அழுத்தம் என்ற ஒன்று வருவது இயல்புதான். ஆனால் இதனால் முதுமையில் என்ன பிரச்சனை வரும்?

உணர்ச்சி சோர்வு:

இளமையில் எப்போதும் உணர்ச்சி பெருக்குடன், ஏதோ ஒன்றை யோசித்து மனக்குமுறலுடன் இருந்தால், வயதான பின்பு, உணர்ச்சி சோர்வு ஏற்படலாம். காரணமே இல்லாமல், சோர்வாக உணர்வீர்கள். மகிழ்ச்சி, சோகம் என அனைத்து உணர்ச்சிகளும் ஏதோ பெரியதாக தோன்றும்.

தனிமை உணர்வு:

இளமையில் நம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக அனைத்தையும் நாமே பார்த்துக்கொள்வோம். ஆனால், வயதான பின்பு, யாரையும் நம்ப முடியாத நிலைக்கு சென்று விடுவோம். இதனால் தனிமை நம்மை வாட்டலாம்.

டிமன்சியா:

நாள்பட்ட மன அழுத்தம், நமது மூளையை பாதிக்கலாம். இதனால், ஹிப்போகேம்பஸ் என்கிற நமது நினைவுகளை ஸ்டோர் செய்யும் மண்டலம் பலவீனம் ஆகலாம். இதனால், டிமன்சியா எனப்படும் மறதி நோய் முதுமையில் வரலாம்.

உடல் ரீதியான மாற்றங்கள்:

இதய நோய்:

இளமையில் அதிக நாட்கள் மன அழுத்தத்தில் இருந்தோமேயானால், நமக்கு உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தங்களின் உணர்வுகளை வெளியில் கூறாதவர்கள், அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகமாக மாரடைப்பு காரணமாக உயிரிழப்பதாக கூறப்படுகிறது.

ஹார்மோன் குறைபாடுகள்:

இளமையில் நாம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை என்றால், பிற்காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக நடக்க வாய்ப்புள்ளதாம். குறிப்பாக பெண்களுக்கு தைராய்டு நோய் வர வாய்ப்புள்ளதாம். மாதவிடாய் குறைப்பாடு, வெகு விரைவிலேயே மாதவிடாய் நிறுத்தம் உள்ளிட்டவை நடைபெறுமாம்.

தலைவலி, தூக்கமின்மை, அசிடிட்டி, அல்சர், உடல் வலி உள்ளிட்டவை இப்படி வரும் நோய்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

இதற்கு தீர்வு என்ன?

இத்தனை நோய் பாதிப்புகள் இருந்தாலும், இவற்றிற்கு தீர்வுகளும் இருக்கின்றது. 

மனநல ஆலோசனை/ஜர்னல்:

மன வலிகளை ஒரு ஜர்னலில் எழுதலாம். மனநல ஆலோசகரிடம் மனம் விட்டு பேசலாம். இது, உங்கள் மூளை இத்தனை ஆண்டுகளாக ஒரு விஷயத்தை எப்படி நினைத்து கொண்டிருந்தீர்களோ, அதை வேறு மாதிரியாக யோசிக்க வைக்கும்.

உணர்ச்சிகள்:

அழுவதற்கு, கோபப்படுவதற்கு, மகிழ்ச்சியாக இருப்பதற்கு என உங்கள் உணர்ச்சிகளை மீண்டும் உயிர்த்தெழ செய்ய வேண்டும்.

உடல் அசைவுகள்:

யோகாசனம், நடனம் ஆடுவது, வாக்கிங் செய்வது உள்ளிட்டவை உங்கள் உடலில் நீங்கள் தேக்கி வைத்திருக்கும் அனைத்து உணர்ச்சிகளையும் ரிலீஸ் செய்ய உதவும். இவற்றை தாண்டி, நல்ல உறவுகள், கலை ஆகியவையும் ஒரு வகையில் உதவும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அட்டகாசமான 8 உணவுகள்: நல்ல கொலஸ்ட்ராலின் பவர்பேங்க், கெட்ட கொலஸ்ட்ராலின் எதிரி

மேலும் படிக்க | டிமென்ஷியா என்னும் மறதி நோய்... ஆரம்ப கால அறிகுறிகள் இவை தான்... அலட்சியம் வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News