வயதுக்கு ஏற்ப நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. குறிப்பாக 40 வயதிற்கு பிறகு பெண்களின் உடலில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. 40 வயதிற்குப் பிறகு, பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், எலும்புகள் பலவீனமடைதல் மற்றும் வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸம் மந்தமாதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பெண்கள் 40 வயதிற்குப் பிறகு, தங்கள் உடல்நலப் பரிசோதனைகளை அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும். இதனால் கடுமையான நோய்களைத் தவிர்க்கலாம். 40 வயதிற்குப் பிறகு பெண்கள் என்னென்ன பரிசோதனைகளை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
எலும்பு அடர்த்தி சோதனை
பொதுவாக, இன்றைய 40 வயதிற்குப் பிறகு, உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறையத் தொடங்குகிறது, இதனால் எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. எலும்பு அடர்த்தி பரிசோதனையின் உதவியுடன், எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவு சரியாக உள்ளதா இல்லையா என்பதை அறியலாம். இதனால் ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோயை தவிர்க்கலாம். எலும்புகள் உடைந்து பலவீனமடைவதைத் தடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில், எலும்புகளை வலுப்படுத்த உணவு மற்றும் மருந்துகளின் உதவியை எடுத்துக் கொள்ளலாம்.
மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராம் சோதனை
வயதுக்கு ஏற்ப மார்பக புற்றுநோயின் ஆபத்து அதிகரிக்கிறது. 40 வயதிற்குப் பிறகு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக 40 வயதிற்கு பிறகு பெண்கள் கண்டிப்பாக மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேமோகிராம் என்பது இமேஜிங் சோதனைகள் ஆகும். இது மார்பகத்தின் கட்டிகள் மற்றும் திசுக்களின் உள்ள அசாதாரண நிலைகளை ஆரம்ப கட்டங்களில் கண்டறிய முடியும். இதனால், சரியான நேரத்தில் சிகிச்சையின் உதவியுடன் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களைத் தடுக்கலாம்.
பிபி மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனை
இன்றைய டென்ஷன் மிகுந்த வாழ்க்கை குறை மற்றும் மோசமான உணவு முறை காரணமாக, 40 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பிபி மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்வது அவசியம். லிப்பிட் ப்ரொஃபைல் பரிசோதனை செய்துகொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
மேலும் படிக்க | எகிறும் பிபியை அசால்டாக கட்டுப்படுத்தும்... சில சூப்பர் உணவுகள்
40+ பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
அளவிற்கு அதிக உப்பு
பொதுவாகவே, எந்த வயதிலும் உப்பு அதிகம் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக 40 வயதிற்குப் பிறகு, பெண்கள் உப்பு அளவிற்கு அதிகமாக உட்கொள்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவு உப்பு இருந்தால் இரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படும். தைராய்டு பிரச்சனையும் வரலாம். இது தவிர, இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள்
40 வயதிற்குப் பிறகு, பெண்களின் வளர்சிதை மாற்றம் மந்தமாகிறது. எனவே, பெண்கள் மைதாவில் தயாரிக்கப்பட்ட வெள்ளை பிரெட், பரோட்டா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். இவற்றை அளவிற்கு அதிகமாக உட்கொள்வதன் மூலம் உடல் பருமன் அதிகரிப்பதோடு, இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதோடு சரும ஆரொக்கியம் மிகவும் பதிக்கப்படும்.
அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள்
அளவுக்கு அதிகமாக சர்க்கரை கொண்ட இனிப்புகளை உட்கொள்வது எந்த வயதிலுமே நல்லதல்ல. அதிலும் 40 வயதிற்குப் பிறகு, முடிந்தவரை இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை உட்கொள்வதால், முகத்தில் பருக்கள், சுருக்கங்கள், புள்ளிகள் போன்றவை தோன்றுவதற்கு வழிவகுக்கிறது. மேலும், வளர்சிதை மாற்றம் படிப்படியாக மந்தமாகத் தொடங்குகிறது. இதன் காரணமாக உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் ஆபத்து முன்பை விட பல மடங்கு அதிகரிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 22 கிலோவை குறைத்த 2 குழந்தைகளின் தாய்... உடல் எடையை குறைத்தது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









