அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் சார்பாக, இந்திய வம்சா வழியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் மோர் ஆகிய இருவரும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி பயணம் மேற்கொண்டனர். விண்வெளி வீரர்கள் இருவரும், ஆய்வை முடித்துக் கொண்டு எட்டு நாட்களில் பூமிக்கு வருவதாக திட்டமிட்டு இருந்த நிலையில், அவர்கள் பயணித்த விண்கலம் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதால், திரும்ப முடியாமல் போனது.
விண்வெளி வீரர்கள் இருவரும், பூமிக்கு திரும்ப முடியாமல், சுமார் ஒன்பது மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள வருகின்றனர். அவர்களை மீட்க நாசா மேற்கொண்ட முயற்சிகள், பலனளிக்காத நிலையில், எல்லாம் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியதை அடுத்து, மார்ச் மாதம் 15 ஆம் தேதி அதிகாலை, அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து, க்ரூ-10 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. அதில் ஏழு விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர். மார்ச் 19ஆம் தேதி, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில் மோரை திரும்ப அழைத்துக் கொண்டு விண்கலம் பூமிக்கு திரும்பும் என்று கூறப்படுகிறது.
நீண்ட காலம் விண்வெளொயில் இருப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பல. அங்கே புவியீர்ப்பு விசை இல்லாததால் நடக்க முடியாத நிலை இருப்பதால், கால்களின் அடிப்பகுதி மிகவும் மென்மையாக மாறி குழந்தைகளின் பாதம் போல் இருக்கும். இதனால் பூமிக்கு வந்த பின் அவர்களால் நடக்க முடியாமல் இருக்கும். இந்த நிலையிலிருந்து மேய்வதற்கு சில வார காலம் ஆகலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
விண்வெளியில் நீண்ட காலம் தங்கி இருப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள்
1. எலும்புகள் மற்றும் தசைகள் மிகவும் வலுவிழந்து, எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் பெருமளவு அதிகரிக்கும்.
2. உடலை சமநிலைப்படுத்தி நடக்க முடியாமல் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். பாதங்களை தரையில் வைப்பதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும்.
3. நடக்கும்போது மயக்கம் தலைசுற்றல் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகம் உண்டு.
4. விண்வெளியில் புவியீர்ப்பு சக்தி இல்லாததால், உடல் திரவங்கள் உடலின் மேல் பகுதிக்கு செல்வதால், முகங்கள் பெரிதாக வீங்கியும், கால்கள் மெலிதாகவும் இருக்கும்.
5. உடலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் இருப்பதால், இதயத்தின் வடிவம்
6. கண்களில் உள்ள நரம்புகள் மீது அழுத்தம் அதிகரிப்பதால், பார்வை கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
7. விண்வெளியில் கதிர்வீச்சும் தாக்கம் அதிகமாக இருக்கும்.
உடல் நலன் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வழிகள்:
விண்வெளி வீரர்கள் பூமிக்கு வந்த உடனேயே, அவர்களுக்கு விரிவான சிகிச்சை, உடலை வலுவூட்டும் பயிற்சிகள், கார்டியோவாஸ்குலர் பயிற்சிகள் ஆகியவை தீவிரமாக அளிக்கப்படுகின்றன. தீவிரமான சிகிச்சை கொடுக்கப்படும் நிலையில், அவர்கள் உடல் நிலை மீள சில வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிங்க | தினசரி நடப்பதால் இரத்த சக்கரை அளவு குறையுமா? மருத்துவர்கள் அறிவுரை!
மேலும் படிக்க | மீண்டும் தாமதம் .. சுனிதா வில்லியம்ஸ் இனி எப்படி பூமி திரும்புவார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









