Weight Loss Tips: இந்த நவீன உலகில் பலர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். உடல் எடை மிக வேகமாக அதிகமாகி விடுகின்றது. ஆனால், அதை குறைப்பது மிக கடினம்.
மனிதர்களின் ஆரோகியமற்ற உண்வுமுறை மற்றும் அதிக செயல்பாடற்ற வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் ஒரு தொற்றுநோய் போல பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகமாகும் இந்த பிரச்சினை குறித்து சுகாதார நிபுணர்களும் பெரும் கவலையில் உள்ளனர். குறிப்பாக இளைஞர்களிடையே உடல் பருமன் பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது.
உடல் எடையை குறைக்க, பொதுவாக மக்கள் உடற்பயிற்சி முதல் உணவுமுறை வரை பல முறைகளை பின்பற்றுகிறார்கள். எனினும், உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு அவசியமோ, என்ன செய்யக்கூடாது என்பதை அறிவதும் அதே அளவு முக்கியமாகும்.
சமீபத்திய ஒரு ஆய்வில், ஒரு உணவுப் பொருளை டயட்டிலிருந்து நீக்கினால், 4 கிலோ வரை எடையைக் குறைக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
ஒபெசிடி சயின்ஸ் அண்ட் ப்ரேக்டிஸ் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சி, எடை அதிகரிப்பிற்கு பதப்படுத்தப்பட்ட உணவு மிகப்பெரிய காரணம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு அமெரிக்காவின் உணவு முறையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இது உலக அளவிலும் பொருத்தமாக இருக்கும் என்று கூறினால் அது தவறாகாது. ஒருவர் தனது உணவில் இருந்து அதிக பதப்படுத்தப்பட்ட அல்ட்ரா ப்ராசஸ்ட் உணவை நீக்கினால், 4 கிலோ வரை எளிதாக எடை இழக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Ultra Processed Food என்றால் என்ன?
அல்ட்ரா ப்ராசஸ்ட் ஃபுட், அதாவது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள், இயற்கையாக கிடைக்கும் உணவுகளிலிருந்து மிகவும் வேறுபட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அவற்றில் ஊட்டச்சத்து குறைவாகவும் ரசாயனங்கள், சுவையூட்டும் பொருட்கள், பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் பிற செயற்கை பொருட்கள் அதிகமாகவும் இருக்கும். இந்த உணவுகள் மிகவும் சிக்கலான செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இவற்றை வீட்டில் தயாரிப்பது சாத்தியமில்லை.
Ultra Processed Food: இந்த வகையான உணவுகளின் சில உதாரணங்கள்
- பேக் செய்யப்பட்ட ரொட்டி மற்றும் பேக்கரி பொருட்கள்
- உறைந்த உணவுகள் (சாப்பிடத் தயாராக உள்ள உணவுகள்)
- மிட்டாய், சாக்லேட் மற்றும் இனிப்புகள்
- குளிர்பானங்கள் மற்றும் சோடா
- கேக்குகள், குக்கீகள் மற்றும் உப்பு நிறைந்த சிற்றுண்டிகள்
- சீரியல்ஸ் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு தானியங்கள்
எடை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
எடை இழக்க விரும்பும் நபர்கள், உங்கள் உணவில் இருந்து மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீக்க முயற்சிக்கவும். அதற்கு பதிலாக, ஃப்ரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், வீட்டில் சமைத்த உணவுகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒரு நபர் நீண்ட நேரம் இயற்கையான மற்றும் முழுமையான உணவை உட்கொண்டால், அவரது எடை விரைவாகக் குறைகிறது. மேலும் அவரது ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மூளையை சூப்பர் கம்ப்யூட்டர் போல் வேலை செய்ய வைக்கும் வால்நட்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









