எடை குறைவாக பிறந்த குழந்தையா நீங்கள்? ‘இந்த’ பிரச்சனை வரலாம்..ஜாக்கிரதை!

பிறக்கும் போது, சில குழந்தைகள் உடல் எடை குறைவாக பிறப்பார்கள். இப்போது, உடலில் ஏற்படும் பக்கவாத நோய்க்கு இது காரணியாக இருக்கலாம் என அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Written by - Yuvashree | Last Updated : Apr 7, 2026, 02:20 PM IST
  • குறைவான உடல் எடையுடன் பிறந்தவர்களுக்கு..
  • ஸ்ட்ரோக் வர வாய்ப்புண்டா?
  • அதிர்ச்சியளுக்கும் ஆய்வு..
எடை குறைவாக பிறந்த குழந்தையா நீங்கள்? ‘இந்த’ பிரச்சனை வரலாம்..ஜாக்கிரதை!

பெரும்பாலானோருக்கு பக்கவாதம் வருவதற்கு காரணமாக இருப்பது, அவர்கள் இப்போதைக்கு இருக்கும் உடல் எடையை விட, பிறந்த போது இருந்த உடல் எடை தான் என்ற அதிர்ச்சிகரமான ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. இது  இளம் தலைமுறையினர் மத்தியில், பெரும் பேசி பொருளாக மாறிவரும் நிலையில் இந்த ஆய்வு குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

குழந்தை பிறக்கும்போது இருக்கும் எடை..

மனிதர்களின் உடல்நிலை குறித்து புதிய கோணத்தில் அடிக்கடி சிந்தித்து புதுப்புது மருந்துகளையும், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காரணிகளையும் கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்திய ஆய்வு ஒன்று, நம் உடலைப் பற்றி நமக்கு சந்தேகம் வரும் வகையிலான தகவல் ஒன்றை அடக்கமாக கொண்டுள்ளது. அதாவது, நாம் தற்போது எவ்வளவு எடை கொண்டு இருக்கிறோம் என்பதை காட்டிலும் பிறக்கும் போதும் இருந்த எடை தான் நமக்கு ஸ்ட்ரோக் வருவதற்கான அபாயத்தை அதிகமாக ஆகும் என்பது அந்த ஆய்வின் முடிவில் வெளியாகி இருக்கிறது.

ஸ்வீடன் நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 8 லட்சம் பேரில் மருத்துவ தகவல்களானது ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில், ஒருவர் பிறப்பது முதல் பெரியவர் ஆகும் காலம் வரை அவர்களின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. அதில் தான் முக்கியமான தகவல் ஆனது வெளியானது. 

இந்த ஆய்வு முடிவுகளின்படி, பிறக்கும்போது குறைந்த எடையுடன் இருந்தவர்கள், சாதாரண எடை கொண்டவர்களை விட சுமார் 21 சதவீதம் அதிகமாக ஸ்ட்ரோக் அபாயத்தை எதிர்கொள்ள கூடும் என  தெரியவந்துள்ளது. இதில், பெண்களுக்கு 18 சதவீதமும் ஆண்களுக்கு 23 சதவீதமும் அபாயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இப்போது இருக்கும் உடல் எடை..

இந்த அபாயமானது, பெரிய வயதில் (Young Adults) இருக்கும் உடல் எடையுடன் சம்பந்தப்படாமல் இருப்பது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ராஜேஷ் என்ற நபர் தற்போது தனது உடலுக்கேற்ப ஆரோக்கியமான உடல் எடை கொண்டவராக இருக்கலாம். அவர் பிறக்கும்போது எடை குறைவாக பிறந்தவராக இருந்திருந்தால் அவருக்கு ஸ்ட்ரோக் அபாயம் அதிகமாக இருக்கலாம். 

மருத்துவர்கள் சொல்வது..

இந்த ஆய்வு குறித்து மருத்துவர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அதாவது, கருப்பையில் குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். கர்ப்ப காலத்தில் இருந்த போது தாயின் உடல்நிலை, ஊட்டச்சத்து குறைபாடு அல்லது பிற காரணங்களால் குழந்தையின் உடல் உறுப்புகள், மொத்த நாளங்கள் முழுமையாக வளராமல் போவது இந்த குறைபாடுகள் நீண்ட காலத்தில் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தி பின்னர் ஸ்ட்ரோக் அவாயத்தை அதிகரிக்க கூடும் என்று கூறுகின்றனர். 

அது மட்டும் கிடையாது, இந்த ஆய்வு Ischaemic Stroke (ரத்த நாள அடைப்பு) மற்றும், Hemorrhagic Stroke (இரத்தக்கசிவு) ஆகிய இரண்டு வகையான ஸ்ட்ரோக்குகளிலும் இந்த தாக்கம் இருப்பதாக மேற்கோக் காட்டி இருக்கிறது. இதன் மூலம்தான், பிறக்கும் போது இருக்கும் எடை, இந்த ஸ்ட்ரோக்குக்கான ஒரு அபாயகரமான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ஸ்ட்ரோக் அபாயத்தை நிர்ணயித்தவை..

இதுவரையில், ஸ்ட்ரோக் அபாயத்தை நிர்ணயிக்க உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் உள்ளிட்டவற்றைதான் காரணமாக கூறி வந்தனர். ஆனால் இந்த ஆய்வு, அதில் அவர்கள் கூறி வந்த காரணிகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இதையடுத்து, குறைந்த பிறப்பு எடை கொண்டவர்கள், தங்கள் உடல் நிலையை அதிக கவனத்துட்ன பராமரிக்க வேண்டும் என்று, நிபுணர்கள் பலர் அறிவுறுத்துகின்றனர். இவர்கள், குறிப்பாக ரத்த அழுத்தம், சீரான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் இந்த அபாயத்தை குறைக்க முடியும் என்கின்றனர்.

கவனம்..

அதேன் சமயத்தில், இன்னொரு விஷயத்தையும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். குறைந்த பிறப்பு எடை கொண்ட அனைவருக்குமே ஸ்ட்ரோக் ஏற்படும் என்கிற கட்டாயம் கிடையாது. இவர்கள், சரியான வாழ்க்கை முறை, சீரான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகள் மூலமாக கூட இந்த அபாயத்தை குறைக்க முடியுமாம். 

மொத்தத்தில்..

மனிதர்களின் ஆரோக்கியம், பிறப்பில் இருந்தே உருவாக தொடங்குகிறது என்பதை காட்டும் வகையில், இந்த ஆய்வு முடிவுகளானது வெளியாகியிருக்கிறது. உங்களது பிறப்பு எடை போன்ற சின்னதான தகவல்களும் கூட, எதிர்காலத்தில் உங்களது மருத்துவ பரிசோதனைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கலாம் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

கேள்வி : பிறப்பு எடை என்றால் என்ன?

பதில் : பிறப்பு எடை என்பது ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் உடல் எடை எவ்வளவு இருக்கிறது என்பதைக் குறிக்கும். பொதுவாக 2.5 கிலோவுக்கு குறைவாக இருந்தால் அது “குறைந்த பிறப்பு எடை” (Low Birth Weight) என்று கருதப்படுகிறது.

கேள்வி : குறைந்த பிறப்பு எடை இருந்தால் கண்டிப்பாக ஸ்ட்ரோக் வருமா?

பதில் : இல்லை. இது ஒரு “அபாய காரணம்” மட்டுமே. குறைந்த பிறப்பு எடை கொண்ட அனைவருக்கும் ஸ்ட்ரோக் வரும் என்பது தவறான புரிதல். சரியான வாழ்க்கை முறையால் இந்த அபாயத்தை குறைக்கலாம்.

கேள்வி : எந்த வகை ஸ்ட்ரோக்குகளுக்கு இது பொருந்தும்?

பதில் : இந்த ஆய்வு கூறுவதன்படி, Ischaemic Stroke (ரத்த நாள அடைப்பு) Hemorrhagic Stroke (ரத்தக்கசிவு) இரண்டிலும் இந்த தாக்கம் இருக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 47 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் ஜோதிகா! அவரே பகிர்ந்த சூப்பர் டிப்ஸ்.. இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க

மேலும் படிக்க | உலக சுகாதார தினம் ஏப்ரல் 7 ஆம் தேதி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News