Makarasanam Benefits: சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால், நோயற்ற வாழ்வை வாழலாம். அதற்கு கைகொடுக்கும் முக்கிய விஷயங்களில் யோகாசனமும் ஒன்று.

உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்ட இந்த டிஜிட்டல் காலகட்டத்தில், உடல் ஆரோக்கியம் என்பது அரிய விஷயமாக மாறிவிட்டது. மோசமான உணவு பழக்கமும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், நமது உடலை நோய்களின் கூடாரமாக ஆக்கிவிட்டது. ஆரோக்கியத்தை மீட்க வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால், நோயற்ற வாழ்வை வாழலாம். அதற்கு கைகொடுக்கும் முக்கிய விஷயங்களில் யோகாசனமும் ஒன்று.
கடுமையான நோய்களை கூட குணப்படுத்தும் யோகாசனம்
யோகாசனங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் வியக்கத்தக்க வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி, கடுமையான நோய்களை கூட குணப்படுத்துகிறது என்பதை மறுக்க இயலாது. அந்த வகையில் பலர் எளிதாக செய்யும் யோகாசனங்களில் ஒன்று மகராசனம். மகர என்றால் முதலை என்று பொருள்படும். இது மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஆசனம் என்பதால் அனைவரும் இதனை செய்யலாம்.
ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி
சமீபத்தில் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தியில், மகராசனம் உடலின் தசைகளை தளர்த்தி, விறைப்பை போக்கி, முதுகு இடுப்பு வலிகளை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் உதவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த யோகாசனம் மன ஆரோக்கியத்தையும் மிகவும் மேம்படுத்துகிறது என்றும் ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.
முதுகுத்தண்டை வலுப்படுத்த உதவும் மகராசனம்
கல்வி பயிலும் மாணவர்கள் முதல், அலுவலக வேலை செய்பவர்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் கணினியில் அதிக நேரம் செலவிடுவதால், முதுகு வலி கழுத்து வலி இடுப்பு வலி ஆகிய பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. அதிலும் கழுத்து வலி இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் கடினம் என்ற நிலை தான் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதுகுத்தண்டை வலுப்படுத்த மகராசனம் பெரிதும் உதவும். முதுகுத்தண்டு வளைதல், முதுகெலும்பில் ஏற்படும் அழுத்தங்கள் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெற பெரிதும் உதவும்.
நுரையீரலை வலுவாக்கும் மகராசனம்
மகராசனம் செய்யும் போது, நுரையீரலுக்குள் காற்று அதிக அளவில் செல்வதால், சுவாசப் பாதை வலுவடைவதோடு, ஆஸ்துமா மற்றும் சுவாச நோய்கள் அல்லது சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் இருக்கும். நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள், மகராசனத்தை தினமும் 10 நிமிடங்கள் செய்வது நல்ல பலன் கொடுக்கும். நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் அதிகரிப்பதால், நிவாரணம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செரிமான ஆரோக்கியம்
மகராசனம் வயிற்றில் உள்ள தசைகளுக்கு வேலை கொடுத்து, செரிமான அமைப்பை வலுவாக்குகிறது. இந்த ஆசனம் செய்யும் போது வயிற்றில் ஏற்படும் அழுத்தம் செரிமான உறுப்புகளை ஆக்டிவேட் செய்து, வாயு மலச்சிக்கல் அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
மன அழுத்தத்தை போக்கும் மகராசனம்
மகராசனம் மன அழுத்தத்தையும் மன பதற்றத்தையும் குறைத்து உடலை தளர்வாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இன்றைய டென்ஷன் மிகுந்த வாழ்க்கையில், தினமும் மகராசனம் செய்வதால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
மகராசனம் செய்யும் முறை
தரையில் யோகா விரிப்பை பரப்பி, குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கால் வானத்தைப் இருக்கும் நிலையில், உங்கள் தாடை பகுதி தரையை தொட்ட படி இருக்க வேண்டும். இப்போது கால்களை பரப்பி வைத்துக் கொண்டு, கைகளை நீட்டி கால்களையும் தூக்கி உங்கள் உடலை வளைக்க வேண்டும். இந்த நிலையில் சிறிது நேரம் நீடித்திருக்கலாம். பின்னர் உங்கள் தலையின் பின்புறம் கைகளை கோர்த்தபடி கால்களை தூக்கி இதனை செய்யலாம் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் முதுகுப் பகுதி தசைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். இது தசைகளுக்கான சிறந்த நீட்சி பயிற்சியாகவும் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ