close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

மின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை!

மின்சாரம் தாக்கி எரிந்து போன ஆணுறுப்பை 8 மணி நேரம் சிகிச்சை செய்து வேலை செய்ய வைத்தமருத்துவர்கள்!!

Updated: Jul 5, 2019, 03:32 PM IST
மின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை!

மின்சாரம் தாக்கி எரிந்து போன ஆணுறுப்பை 8 மணி நேரம் சிகிச்சை செய்து வேலை செய்ய வைத்தமருத்துவர்கள்!!

மத்திய பிரதேசம் பத்வானி மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதுடைய ஆண் ரமேஷ். இவருக்கு சுமார் 9 வயது இருக்கையில் இவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதன் காரணமாக இவரின் உடலில் உள்ள பல பகுதிகள் பாதிப்படைந்தது. அதில், அவர் ஆண்குறியும் முற்றிலும் பாதிக்கபட்டது. இதன் காரணமாக இவர் பல ஆண்டுகள் அவதிப்பட்டுள்ளார். ரமேஷ் சிறுநீர் கழிக்கும் போது வழக்கமாக மற்ற ஆண்கள் போல் நின்று கொண்டே கழிக்க முடியாத நிலை. இதனால், இவரின் நண்பர்கள் இவரை கேலி செய்துள்ளனர். 

இதனால், இவர் பெரும் மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளார். இவரது பெற்றோரும் தன் மகளனை ஒரு ஆண் மகன் என இந்த உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். இந்நிலையில், தற்போது 25 வயதாகும் ரமேஷிற்கு அவரது ஆண்குறியில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்ய மருத்துவரை அனுகினார். அப்பொழுது அவருக்கு ஆண்குறியில் அறுவை சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். 

இருந்தாலும் மிக கடினமாக சிகிச்சையாக இது இருந்ததால் டாக்டர் தீவிர ஆலோசனை நடத்தி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். சுமார் 8 மணி நேரம் டாக்டர் அவரது கையில் இருந்த சதையை எடுத்து அவரது ஆண்குறியில் வைத்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமான செய்து முடித்தனர். மேலும் இது குறித்து டாக்டர் கூறும்போது தற்போது நடந்தது முதற்கட்ட ஆப்ரேஷன் தான் எனவும் இன்னும் 18 மாதங்களுக்கு பிறகு இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை செய்த பின்பு தான் இவரது ஆண் உறுப்பு 100 சதவீதம் இயக்கத்திற்கு வரும் என கூறினார்.