மறந்து கூட இந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க

சில உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது என பலருக்கும் தெரியாது. அப்படி சேர்த்து சாப்பிடும்போது பலவித உடல் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 24, 2022, 01:45 PM IST
  • சூடான பொருட்களுடன் தயிர் சாப்பிட வேண்டாம்
  • மீன் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது
  • தயிர் பல நன்மைகளை தருகிறது
மறந்து கூட இந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க title=

கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள மக்கள் பலவற்றைச் சாப்பிடுவதும் குடிப்பதும் வழக்கம். இந்த சீசனில் தயிரின் பயன்பாடு அதிகமாகும். தயிரில் செய்யப்பட்ட லஸ்ஸியாக இருந்தாலும் சரி, ரைதாவாக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடிக்கும். கோடைக்காலத்தில் தயிர் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், நீங்கள் சில உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி சேர்த்து சாப்பிடும்போது பலவித உடல் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

தயிர் மற்றும் மாம்பழம்
தயிரில் வெட்டிய மாம்பழங்களைச் சேர்த்து சாப்பிடுவதை பலரும் விரும்புவர். ஆனால் மாம்பழம் சூட்டை அதிகரிக்கும், தயிர் குளிர்ச்சியை தரும். இதனால் சரும பிரச்னைகள் மற்றும் டாக்ஸின்ஸ் போன்ற பிரச்னைகள் உருவாகும்.

மேலும் படிக்க | வறண்ட கண்களால் வாட்டமா? இவை காரணமாக இருக்கலாம், இப்படி தீர்வு காணலாம் 

சூடான பொருட்களுடன் தயிர் சாப்பிட வேண்டாம்
தயிர் உடலுக்கு குளிர்ச்சியாக செயல்படுகிறது. சூடாக எதையாவது அதனுடன் சேர்த்து சாப்பிட முயற்சித்தால், அதை செய்ய வேண்டாம், ஏனெனில் குளிர்ந்த மற்றும் சூடாக ஒன்றாக சாப்பிடுவது உங்கள் பற்களை சேதப்படுத்தும்.

வெங்காயம் மற்றும் தயிர்
பலர் ரெய்த்தாவை விரும்பி சாப்பிடுவோம். ஆனால் இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், தயிர் குளிர்ச்சியானது, வெங்காயம் சூட்டை அதிகரிக்கும். குளிர்ச்சி மற்றும் சூடு இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது அரிப்பு, தடிப்பு, எக்ஸிமா, சொரியாஸிஸ் போன்ற சரும பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

மீன் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது
தயிர் மற்றும் மீனை ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை உட்கொள்வது உங்கள் உடலுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். நீங்கள் ஒன்றாக சாப்பிட முயற்சித்தால், அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

தயிர் பல நன்மைகளை தருகிறது
தயிருடன் சிலவற்றை கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை ஒதுக்கி வைத்தால், அது உங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். தயிர் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமின்றி பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. மேலும், உங்கள் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Cardamom Benefits: ஏலக்காயை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News