விந்தணு பிரச்சனையால் பாதிக்கப்படும் பாலியல் ஆரோக்கியம்... தீர்வை விளக்கும் மருத்துவர்

ஆண்கள் மத்தியில் விந்தணுக்களின் தரம் குறைவது கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைப்பதோடு, திருமண வாழ்க்கையையும் பெரிதும் பாதிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 27, 2025, 06:14 PM IST
  • விந்தணுக்களின் தரம் குறைவது கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைக்கும்
  • மாசு மற்றும் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படும் பாலியல் ஆரோக்கியம்
  • ஆண்களின் மத்தியில் மலட்டுத் தன்மை அதிகரிப்பதற்கான காரணங்கள்
விந்தணு பிரச்சனையால் பாதிக்கப்படும் பாலியல் ஆரோக்கியம்... தீர்வை விளக்கும் மருத்துவர்

சமீபகாலமாக, மோசமான வாழ்க்கை முறை காரணமாக ஆண்களிடம் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.  ஆனால், இதில் மன ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால், 30-40 வயதுடைய ஆண்கள் பலர் தங்கள் விந்தணு ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புடன் இருக்கிறார்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் விந்துணுக்கள் குறித்த  பரிசோதனை செய்து, நிலைமையை அறிந்து வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source

விந்தணுக்களின் தரம் குறைவது கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைக்கும்

சுற்றுச்சூழல் தாக்கங்கள், மோசமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணிகள் காரணமாக, அதிக அளவில் விந்தணு பிரச்சனை இருப்பது, விழிப்புணர்விற்கு முக்கிய காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் (Health Tips) நம்புகின்றனர். ஆண்கள் மத்தியில் விந்தணுக்களின் தரம் குறைவது கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைப்பதோடு, திருமண வாழ்க்கையையும் பெரிதும் பாதிக்கிறது.

ஆண்களின் மத்தியில் மலட்டுத் தன்மை அதிகரிப்பதற்கான காரணங்கள்

மருத்துவ நிபுணர் டாக்டர் சன்ஸ்கா பாட்டீல் கூறுகையில், ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்கள் விந்தணு எண்ணிக்கை குறைதல், மோசமான விந்தணு இயக்கம்,  மற்றும் அசாதாரண உருவ அமைப்பு போன்ற காரணிகளாகும். கடந்த சில தசாப்தங்களாக ஆண்களின் விந்தணுக்களின் தரம் குறைவதற்கான முக்கிய காரணங்கள் மன அழுத்தம், மாசுபாடு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் வயது அதிகரிப்பு ஆகியவையும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கின்றன.

மாசு மற்றும் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படும் பாலியல் ஆரோக்கியம்

சுற்றுச்சூழல் மாசுபாடுகள் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். உணவில் மூலம் உடலுக்குள் செல்லும், கன உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள், தொழில்துறை இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் உள்ள எண்டோகிரைன் சீர்குலைக்கும் இரசாயனங்கள் (EDCs) விந்தணு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ஆண்களுக்கு விந்துணு பரிசோதனை ஏன் செய்யப்படுகிறது?

பெரும்பாலான ஆண்கள் விந்துணு பரிசோதனை  செய்வதன் மூலம் தங்கள் பாலியல் ஆரோக்கியத்தை மதிப்பிடுகின்றனர். இது ஒரு எளிய, சோதனை, இது விந்தணுவின் அளவு, இயக்கம், அளவு மற்றும் டிஎன்ஏ தரத்தை பகுப்பாய்வு செய்கிறது. இந்த விந்துணு பரிசோதனையினால் பல நன்மைகள் உள்ளன:

சிக்கலை முன்கூட்டியே கண்டறிதல்: விந்தணுக்களின் தரம் குறைவது சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு, சரியான சிகிச்சை சாத்தியமாகும்.

பயனுள்ள சிகிச்சை: சோதனையில் ஏதேனும் அசாதாரணம் கண்டறியப்பட்டால், மருத்துவர் வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள் அல்லது IUI மற்றும் IVF போன்ற இனப்பெருக்க தொழில்நுட்பங்களை பரிந்துரைக்கலாம்.

கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்: விந்துப் பரிசோதனை ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை துல்லியமாக மதிப்பிடவும், சரியான திசையில் சிகிச்சை பெறவும் உதவுகிறது.

மேலும் படிக்க | Preventing Cancer: புற்றுநோய் வராமல் இருக்க தினமும் நடங்க... டாக்டர் கூறும் அட்வைஸ்

மேலும் படிக்க  | தினமும் காலையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகளின் பட்டியல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News