)
பெரும்பாலான மக்கள் தங்கள் காலைப் பொழுதை காபி அல்லது டீயுடன் தொடங்குகிறார்கள். இது வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில், மூலிகை டீ என்ற பெயரில், பலர் கிரீன் டீ மற்றும் இஞ்சி டீ குடிக்கும் வழக்கமும் உள்ளது. ஆனால், பார்ப்பதற்கு அழகாக மட்டுமல்லாமல், குடிக்க சுவையாகவும், ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தரும் மற்றொரு மூலிகை டீயும் உள்ளது. இந்த டீ அபராஜிதா அல்லது சங்கு பூ டீ. ப்ளூ டீ என்ற அழைக்கப்படும் இந்த டீ அதாவது சங்கு பூவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆயுர்வேதத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றும் கருதப்படுகிறது.
ப்ளூ டீ குடிப்பதன் நன்மைகள்
உடலில் இருந்து அழுக்கு வெளியேறுகிறது
ப்ளூ டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. உடலை சுத்தப்படுத்த இந்த டீயைக் குடிக்கலாம். இந்த டீயைக் குடிப்பதன் மூலம் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் நீக்கப்படுகிறது. வயிறு சுத்தமாகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கிறது
சங்குபூ டீ குடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும். ப்ளூ டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். மனநிலையை மேம்படுத்தவும் மனதை ரிலாக்ஸ் செய்யவும் ப்ளூ டீ உதவுகிறது. தூங்கும் முன் ஒரு கப் ப்ளூ டீ குடித்தால், தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
மூளை ஆரோக்கியம் மேம்படும்
சங்கு பூ தேநீர் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இந்த தேநீரை மூளைக்கு அமிர்தம் என்று அழைக்கலாம். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மூளையின் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவுகின்றன.
இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
ப்ளூ டீ இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இந்த தேநீர் குடிப்பதால் இரத்த சர்க்கரை அதிகரிக்காது. காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை நாள் முழுவதும் சாதாரணமான அளவில் இருக்கும்.
உடல் எடையை குறைக்க உதவும்
உடல் பருமன் குறைய நீல நிற சங்கு பூவில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் சிறந்தது. வளர்சிதை மாற்றத்திய தூண்டி, உடலில் இருக்கும் விடாபிடியான கொழுப்பை கரைக்கும். சூடான சங்கு பூ டீயை தினமும் இரண்டு கப் குடித்து வந்தால், 1 மாதத்தில் இரண்டு கிலோ வரை உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
கண்களுக்கு நன்மை கிடைக்கும்
அபராஜிதா பூ தேநீர் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த தேநீர் குடிப்பது முதுமை காரணமாக ஏற்படும் பார்வை சார்ந்த பிரச்சனைகளை தடுக்கிறது. இதில் உள்ள சேர்மங்கள் கண்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.
மூட்டு வலியிலிருந்து விடுபடலாம்
அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த ப்ளூ டீ, மூட்டு வலியைக் குறைக்கும். தினமும் காலையில் இதை உட்கொண்டால், உடல் வலியிலிருந்து விடுபடும்.
சங்கு பூ தேநீர் தயாரிப்பது எப்படி
5 முதல் 6 உலர்ந்த சங்கு பூக்களின் இதழ்களை ஒன்று முதல் ஒன்றரை கப் தண்ணீரில் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை சமைக்கவும். அதில் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இந்த தேநீரில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்கவும். எதுவுமே அளவிற்கு மிஞ்சினால் நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால் இந்த தேநீரை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும், தேவைக்கு அதிகமாக குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.