Pregnancy Mental Health Problems : கர்ப்பகாலம் என்பது, தாய்மார்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் காலமாக இருக்கும் என்பது, பலரது நம்பிக்கையாக இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், இது பல்வேறு உடல் மற்றும் மன பிரச்சனைகளையும் உண்டாக்கலாம் என சில ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன.
கர்ப்பகாலத்தில், பெண்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சனை குறித்து ஜெய்பூரில் இருக்கும் நாராயணா மருத்துவமனையின், மகளிர் மருத்துவரான இந்திரா சரின் பேசுகிறார். அவர், இந்த சமயத்தில் பெண்களின் உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள், எதிர்காலம் குறித்த கவலைகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் உள்ளிட்ட பல மாற்றத்தை நினைத்து யோசிப்பதாகவும். இதனால் அவர்களுக்கு மனநல பிரச்சனை வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மனநல பிரச்சனைகள்:
கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள், எந்த மாதிரியான மனநல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம்.
மனச்சோர்வு:
கர்ப்பகாலத்தில் இருக்கும் சில பெண்கள், தங்கள் மனதில் நீடித்த அனுபவிக்கிறார்களாம். இவர்கள், தங்களுக்கு பிடித்த செயலை செய்வதற்கு கூட ஆர்வம் இழக்கின்றனர். இந்த கர்ப்பகால மனச்சோர்வு என்பதை புறக்கணிப்பது பல பெண்களுக்கு கடினமானதாக இருக்குமாம்.
பதட்டம்:
கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களுக்குமே பதட்டம் ஏற்படுமாம். இதற்கு காரணம், பெண்கள் பொதுவாக தங்களின் குழந்தை குறித்த ஆரோக்கியம், பிரசவம் மற்றும் தங்களின் எதிர்கால பொறுப்புகள் குறித்து அச்சம் கொள்கின்றனர். இது, பலவித பதட்டங்களுக்கு வழிவகுக்கிறது. சில சமயங்களில், இந்த பதட்டம் மிகவும் தீவிரமாகி அது தூக்கத்தை கூட கெடுக்க நேரிடும்.
மனநிலை மாற்றங்கள்:
கர்ப்பகாலத்தில், பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அவர்களின் மனநிலையையும் பாதிக்கக்கூடும். சில சமயங்களில், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணரலாம். சில சமயங்களில் ‘ஓ’வென அழ வேண்டும் என்று தோன்றலாம். இது இயல்பானதுதான் என்று கூறும் மருத்துவர்கள், இதுவே அளவுக்கு மீறினால் அதில் கவனம் செலுத்துவது அவசியம் என்கின்றனர்.
OCD பிரச்சனை:
கர்ப்பகாலத்தில் இருக்கும் பல பெண்கள், தங்களின் சுத்தம் குறித்து அதிகமாக கவலை கொள்கின்றனர். இவர்கள், சுத்தம் அல்லது பாதுகாப்பு குறித்து அதிகம் கவலை கொள்கின்றனர். இதற்கு OCD - Obsessive Compulsive Disorder என்று பெயர். இதற்கு அறிகுறியாக அவர்கள், அடிக்கடி கை கழுவுவார்கள், தன்னை சுற்றி ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என சுற்றி சுற்றி பார்ப்பார்கள்.
மனநலத்தை மேம்படுத்துவது எப்படி?
கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜொஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் வேகமாக மாறுவதால், அவை மூளையில் இருக்கும் வேதிப்பொருட்களை பாதிக்கலாம். இந்த பிரச்சனைகளோடு சேர்த்து, குடும்ப சிக்கல்கள், நிதி நெருக்கடிகள், ஆதரவின்மை போன்றவை இந்த நிலையை மேலும் மோசமாக்கலாம்.
விழிப்புடன் இருக்க வேண்டியது எப்போது?
பதட்டம், சோகம் போன்ற உணர்வுகள் இரு வாரங்களுக்கு மேல் நீடித்தாலோ, உடலில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணங்கள் மீண்டும் மீண்டும் தோன்றினாலோ அதை புறக்கணிக்காமல் உதவி பெறுவது அவசியம் ஆகும்.
மனநலத்தை எப்படி மேம்படுத்துவது?
கர்ப்ப காலத்தில், எந்த உணர்ச்சியையும் உள்ளுக்குள் அடக்கிக்கொள்ள கூடாது. உங்கள் எண்ண ஓட்டங்களை, உணர்ச்சிகளை குடும்பத்தினரிடம் கூற வேண்டும். உங்கள் மனநிலைஅயை மேம்படுத்தும் சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
உங்களுக்கு தேவையான மென்மையான உடற்பயிற்சி, யோகா அல்லது தியானம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இது மன அழுத்தத்தை குறைக்கலாம். உறக்கத்தையும் மேம்படுத்தும்.
கர்ப்பிணிகள் சத்தான உணவை சாப்பிட வேண்டும், உடலுக்கு தேவையான ஓய்வை எடுக்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு, உணரச்சி ரீதியாக குடும்பத்தினர் ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். உடல் ஆரோக்கியமாக இருப்பது, இந்த சமயத்தில் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே சமயத்தில் மன ஆராேக்கியத்துடன் இருப்பதும் முக்கியம் ஆகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 90 நாட்களில் 10 கிலோ எடை குறைத்த தமன்னா.. எப்படி தெரியுமா? சூப்பர் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









