இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறை நமக்கு அளித்த பரிசுகளில் ஒன்று மன அழுத்தம். வேலையில் வீட்டில் என அதிகரிக்கும் பொறுப்புகளும், வேலை சுமையும், இலக்குகளை எட்ட ஓடும் ஓட்டமும் நம்மை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. மனச்சோர்வு, மனப்பதற்றம் என எதுவாக இருந்தாலும், நம் உடல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தும் வகையில் கேடு விளைவிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.
மன அழுத்தம் மற்றும் கவலை, நம்மை மெல்ல கொல்லும் விஷம் என்பதை அறிந்து கொண்டால், பல்வேறு உடல் நல பிரச்சனைகளை நாம் தவிர்க்க முடியும். மன அழுத்தம் காரணமாக, மூளையின் செயல் திறன் பாதித்தல், இதயத்துடிப்பு அதிகரித்தல், தூக்கமின்மை, பதற்றம், மாரடைப்பு அபாயம் அதிகரித்தல் உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் மிகவும் அதிகரிக்கும்.
மன அழுத்தம் மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள்
மூளையின் செயல் திறனில் ஏற்படும் பாதிப்பு
நமது முன்னோர்கள் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியை அடிக்கடி பயன்படுத்துவதை கேட்டிருக்கலாம். ஆம் கோபம் மற்றும் மன அழுத்தம் மூளையின் செயல் திறனை மிகவும் பாதிக்கிறது என்பதை உணர்த்தவே அவர்கள் இந்த பழமொழியை கூறுகின்றனர். மன அழுத்தம் காரணமாக மூளையில் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பதால், அறிவாற்றல் பாதிக்கப்படுவதுடன், கவன சிதறல், எதிலும் மனம் ஒன்றி செயல்பட முடியாத நிலை ஆகியவை உங்கள் ஒட்டுமொத்த செயல் திறனை மிகவும் பாதிக்கும்.
இதயம் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் மன அழுத்தம்
மன அழுத்தம் காரணமாக, இதயத்துடிப்பு ஒரு பக்கம் அதிகரிப்பதோடு, இரத்த அழுத்தமும் அபாயகரமான வகையில் அதிகரிக்கும். இது இதயத் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒழுங்கற்ற இதயத்துடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட அபாயம் பெருமளவு அதிகரிக்க வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
செரிமான அமைப்பில் ஏற்படும் பாதிப்புகள்
அசிடிட்டி நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மன அழுத்தம் முக்கிய காரணமாகிறது என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருவதை நீங்கள் கேட்டிருக்க கூடும். உடல் பருமன் முதல் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு ரத்த அழுத்தம் என உடலின் பலவிதமான சிறிய பெரிய பிரச்சனைகளுக்கு செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படுவது முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலே, 90% உடல் நல பிரச்சனைகளை தவிர்த்து விடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படுத்தும் பாதிப்பு
மனு அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் பலவீனப்படுத்துகிறது என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. இதனால் சாதாரண சளி காய்ச்சல் முதல் பல்வேறு வகையான நோய்களுக்கு உடல் ஆளாகும் அபாயம் உள்ளது. நீண்ட கால மன அழுத்தத்தை அலட்சியம் செய்யாமல், அதனை கட்டுப்படுத்துவது அவசியம். எனவே, யோகா, தியானம் உடற்பயிற்சி தினமும் கடைபிடிப்பது அவசியம். அதோடு நேரம் கடத்தாமல் நல்ல மனநல ஆலோசகரை நாடுவதும் முக்கியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சுகர் லெவல் முதல் டீடாக்ஸ் வரை... நாவல் பழ விதையின் அரிய மருத்துவ குணங்கள்
மேலும் படிக்க | மூளை - நரம்பு ஆரோக்கியம் முதல் செரிமானம் வரை... குடல் நுண்ணுயிரிகளின் முக்கிய பங்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ