காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்!

Benefits of Drinking Water: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கிறதால் என்னென்ன மாதிரியான மருத்துவ நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி அறிந்துக்கொள்ளுங்கள். உடலின் நீர் சத்தை குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 18, 2025, 09:58 AM IST
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்!

Health Tips In Tamil: தண்ணீர் நம்முடைய உடலுக்கு மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றாகும். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் நமது உடலில் நீர் சத்து குறைந்து பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும். அப்படிப்பட்ட சூழ்நிலையை தவிர்ப்பதற்கு உடலில் ஒருபோதும் நீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

Add Zee News as a Preferred Source

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், நமது உடலில் இருக்கக்கூடிய பல்வேறு பாக்டீரியாக்கள், கிருமிகளை வெளியேற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும். இரவில் நமது வாயில் குவிந்திருக்கக்கூடிய பாக்டீரியாக்கள், நமது குடலுக்குள் போகும். இதனால் நமது உடல் பலவீனமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால், குடல் இயக்கம் மேம்படும். அதன்மூலம் உடலில் இருக்கக்கூடிய பல்வேறு விதமான கிருமிகள் வெளியேற்றப்படுவதால, மெட்டபாலிசம் வளர்ச்சதை அதிகரிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதனால் நமக்கு வரக்கூடிய நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாம். சீசனுக்கு ஏற்ப புதுசா வரக்கூடிய பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்று வியாதிகளை வராமல் தடுத்து நலமோடு வாழலாம். அதுக்கு காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியம். 

கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கிறதும் நமக்கு ஆரோக்கியம் தான். இத்நால் மலம் கழிப்பது எளிதாகும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது வயிற்றிலிருந்து மலம் வேகமாக வெளியேற ஆரம்பிக்கும். சுலபமாக மலம் கழிக்கலாம் சீரற்ற குடல் இயக்கம், கடுமையான மலச்சிக்கல் போன்ற பிரச்சனை எல்லாம் இருக்காது. எனவே மலம் வெளியேறுவது எளிதாகுவதால் உங்களுக்கு குடல் ஆரோக்கியம் மேம்பட ஆரம்பிக்கும். இதன்மூலம் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும். 

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், சருமத்தை பொழிவாக்குகிறது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுக்களை வெளியேற்றுகிறது. அதாவது ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுக்கிருமிகளும், உடல் உறுப்புகளில் இருக்கக்கூடிய கழிவுகளும் கொழுப்புகளும் வெளியேற்றப்படும். இதனால் சருமம் பொலிவாக ஆரம்பிக்கும். கிருமிகள் இல்லாத சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். சருமத்தில் எந்த விதமான தோல் சுருக்கங்கள், முகப்பருக்கள், கரும்புள்ளிகள் என எதுவுமே இருக்காது. 

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கிறது பல் சிதைவை தடுப்பதற்கு உதவியாக இருக்கிறது. பல் துவாரங்கள் அல்லது பல் சொத்தை போன்ற பல்வேறு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. காலையில் எழுந்ததும் பற்களை துலக்கிய பிறகு, வெறும் வயிற்றில் கொஞ்சம் வெதுவெதுவென இருக்கக்கூடிய தண்ணீர் குடிக்கும் போது நன்மைகள் கிடைக்கும். 

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் முன்பாக நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமானது எதுவென்றால், வெறும் வயிற்றில் மிகவும் சூடான தண்ணீரை குடிக்க கூடாது. வெதுவெதுப்பான தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும். 

அதுமட்டுமில்லாமல் தண்ணீருக்கு பதிலாக ஒருவேளை டீ அல்லது காபி குடித்தால், உங்களுக்கு வயிற்று புருணையில் எரிச்சலலை ஏற்படுத்தும். குமிட்டல் உணர்வு தோன்றலாம். அசிடிட்டி தன்மை அதிகமாகி நெஞ்சரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. டீ அல்லது காபி குடிப்பது தவறு இல்லை. ஆனால் அதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம். எனவே காலையில் வெறும் வயித்தில் வெதுவெதுப்பான தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும். இதன்மூலம் பல்வேறு மருத்துவ நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். நீங்களும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

மேலும் படிக்க - அதிகாலை திடீரென தூக்கம் கலைகிறதா? ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை

மேலும் படிக்க - மூளை முதல் இதயம் வரை... வியக்க வைக்கும் பலன்களைத் தரும் ப்ரோக்கோலி

மேலும் படிக்க - குறட்டையால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News