Weight Loss Journey: தொடர்ந்து உணவுப்பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடாக இருப்பதும், தீவிர உடற்பயிற்சி செய்வதும்தான் உடல் எடை குறைப்பில் முக்கிய அம்சங்களாகும். இருப்பினும், ஒவ்வொருவரின் உடல் அமைப்பை பொறுத்து உடல் எடையை குறைக்கும் முயற்சியும், பயிற்சியும் வேறுபடும் எனலாம். இதற்காகவே, உடல் எடை குறைப்பு செயல்பாட்டுக்கு முன்னர் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என கூறப்படுகிறது.
Weight Loss Journey: 22 கிலோவை குறைத்த மெலிசா கார்ட்னர்
அதேபோல், ஒவ்வொருவரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் முயற்சியை தெரிந்துகொள்வது நிச்சயம் உங்களுக்கு பெரியளவில் கைக்கொடுக்கும். அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த மெலிசா கார்ட்னர் என்பவர் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து பெண்மணி 22 கிலோ உடல் எடையை குறைத்த தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.
Weight Loss Journey: வைரலான உடல் எடை குறைப்பு வீடியோ
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக அறியப்படும் மெலிசா இதுகுறித்த வீடியோவில்,"நான் மீண்டும் 22 கிலோ உடல் எடையை குறைக்க வேண்டும் என முயன்றால், இவற்றையெல்லாம் தான் நான் செய்வேன்" என பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவியது. மெலிசாவின் உடல் எடை குறைப்பு குறித்து பகிர்ந்த வீடியோக்களை இங்கு காணலாம்.
Weight Loss Journey: கலோரிகளை கணக்கிடுவது அவசியம்
உங்கள் எடை, உயரம், வயது ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்படும் BMI குறியீட்டின்படி நீங்கள் எவ்வளவு கலோரிகளை உட்கொள்கிறீர்கள் என்பதுதான் உங்கள் உடல் தேவையை சிறப்பாக கணிக்க உதவும். மேலும் நீங்கள் உண்ணும் உணவின் கலோரி குறித்து நீங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் மெலிசா. இதை யூ-ட்யூப் மூலம் கற்றுக்கொள்வதற்கும் சில டிப்ஸ்களை மெசிலா அதில் குறிப்பிட்டுள்ளார்.
Weight Loss Journey: உடற்பயிற்சியில் விடாப்பிடியாக இருங்கள்
அதேபோல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். ஒரு நாள் கூட விடாமல் நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதை செய்ய ஊக்கமும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு அதிகம் வேண்டும். நேர மேலாண்மையும் முக்கியமானது. உடற்பயிற்சி செய்யும் நேரத்தை எக்காரணம் கொண்டும் வேறு வேலைகளுக்காக மாற்றாதீர்கள். உடற்பயிற்சி செய்ய உடன் ஒருவரை பார்ட்னராக வைத்துக்கொள்வதும் நல்ல பலனை அளிக்கும் என்கிறார்.
அவர் ஒரு வாரத்திற்கு 3 நாள்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வாராம், அதில் இரண்டு செஷன்கள் சிறிதாகவும், ஒரு செஷன் நீண்டதாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி வாரம் மூன்று முறை வெயிட் டிரெயினிங்கும் எடுத்துக்கொள்வாராம்.
Weight Loss Journey: உணவுப்பழக்கத்தில் அதிக கவனம்
அவர் புரதச்சத்து நிறைந்த உணவுகளில் அதிக கவனம் செலுத்துவாராம். இதனால் அவருக்கு நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைவு ஏற்படுகிறது என்கிறார், மேலும் வேகமான இயக்கத்திற்கும் அதுவே உதவுகிறது என்கிறார். மேலும் வயிறு நிறைவுக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் நார்ச்சத்து நிறைந்த உணவையும் எடுத்துக்கொள்வாராம்.
மேலும் எதிர்பார்ப்பை குறைவாக வைத்திருக்கும்படி அவர் அறிவுறுத்துகிறார். இயல்பான, எதார்த்தமான எதிர்பார்ப்புகளை வைத்திருப்பதே உடல் எடை குறைப்புக்கு கைக்கொடுக்கும் என்கிறார். இதுகுறித்து அவர் அந்த வீடியோவில்,"6 மாதங்களில் நான் எப்படி எடை அதிகரிக்கவில்லை என்பதையும், அதில் இருந்து உடல் எடையை குறைக்க 6 மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதையும் நான் எனக்குள் நினைவுபடுத்திக்கொள்வேன்.
Weight Loss Journey: உடல் எடை செயல்பாட்டை ரசித்து செய்யுங்கள்
இது ஒரு வாழ்க்கைமுறை என்றும், நான் ஒரு புதிய, ஆரோக்கியமான, உடற்தகுதியுடன் மாறுவதற்காக அடியெடுத்து வைக்கிறேன் என்றும் இது வழக்கமான ஒன்று என்றாலும் முக்கியம் என்றும் எனக்கு நானே நினைவூட்டிக் கொள்வேன்" என்கிறார். அதாவது, ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கம், தொடர்ச்சியான மற்றும் திட்டமிட்ட உடற்பயிற்சிகள், நேர்மறையான மனநிலை ஆகியவற்றுடன் எவ்வித அழுத்தமும் இன்றி மகிழ்ச்சியாக மெலிசா கார்ட்னர் 22 கிலோவை குறைத்துள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
மேலும் படிக்க | 34 கிலோவை குறைத்த 26 வயது இளைஞன்! கொழுப்பை குறைக்க உதவிய டயட் என்ன?
மேலும் படிக்க | 23 கிலோவை குறைத்த இன்ஸ்டா பிரபலம்... கொழுப்பை கரைக்க உதவிய இந்த 3 விஷயங்கள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









