Mounjaro: இந்தியாவில் அறிமுகமான புதிய வெயிட் லாஸ் மருந்து.... விலை உள்ளிட்ட பிற விபரங்கள் இதோ

Weight Loss Drug: உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது எடை குறைக்கும் நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்புகளைத் திறந்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 25, 2025, 05:15 PM IST
  • நகரங்களில் அதிகரிக்கும் உடல் பருமன் பிரச்சனை.
  • மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி பயன்படுத்தக்கூடாது.
  • மருந்தின் விலை விரைவில் குறைய வாய்ப்புள்ளது.
Mounjaro: இந்தியாவில் அறிமுகமான புதிய வெயிட் லாஸ் மருந்து.... விலை உள்ளிட்ட பிற விபரங்கள் இதோ

உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் இளைஞர்கள்  பலர் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆண்களும் பெண்களும் அடங்குவர். இளம் வயது குழந்தைகளும் உடல் பருமனுக்கு ஆளாகின்றனர். அதிகப்படியான நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதும், ஒழுங்கற்ற தினசரிப் பழக்கவழக்கங்களுமே உடல் பருமன் அதிகரிப்பதற்குக் காரணம்.

Add Zee News as a Preferred Source

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தல்

இளைஞர்கள், குழந்தைகள் எதிர்கால இந்தியாவின் தூண்களாக உள்ள நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி  கூட சமீபத்தில் கவலை தெரிவித்துள்ளார். தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உடல் பருமன் பற்றி குறிப்பிட்டு, பொரித்த உணவுகளை குறைவாக சாப்பிடுமாறு பிரதமர் அறிவுறுத்தினார். 
 
எடை இழப்பு மாத்திரை

உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது எடை குறைக்கும் நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்புகளைத் திறந்துள்ளது. அமெரிக்க மருந்து நிறுவனமான எலி லில்லி என்ற நிறுவனம், மௌஞ்சரோ என்ற பெயரில் எடை குறைக்கும் மருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எடை குறைக்கும் மருந்தின் சந்தை வாய்ப்புகள், அதன் விலை மற்றும் அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் உள்ள ரூ600 கோடி சந்தை

இந்தியாவில் உடல் பருமன் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் உடல் எடையை குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தற்போது வரை பணக்காரர்கள் மட்டுமே எடை குறைக்கும் மருந்தை பயன்படுத்துகின்றனர். எனவே இதன் சந்தை அளவு சுமார் 600 கோடி ரூபாய். இருப்பினும், எடை இழப்பு மருந்து சந்தை கடந்த 5 ஆண்டுகளில் சரசரியாக  30% க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனையால் உடல் எடையை குறைக்கும் மருந்துகளின் தேவை அதிகரித்து வருவதாக மருத்துவர் கூறுகிறார். இருப்பினும், இந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

இந்தியாவில் இதற்கான விலை என்ன

இந்தியாவில், மௌஞ்சரோ (Mounjaro)2.5mg மற்றும் 5mg குப்பிகளின் விலை முறையே ₹3,500 மற்றும் ₹4,375. இது ஒரு ஊசி வடிவில் கிடைக்கும். இது வாரத்திற்கு ஒரு முறை போடப்பட வேண்டும். இதன் விலை மாதத்திற்கு ₹14,000 முதல் ₹17,500 வரை இருக்கும்.  இந்தியாவில் இந்த மருந்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதன் நன்மையை மௌஞ்சரோ பெற்றாலும், இன்னும் பல நிறுவனங்கள் இந்தப் பிரிவில் விரைவில் நுழையத் தயாராகி வருகின்றன. இதைத் தொடர்ந்து, மருந்தின் விலை விரைவில் குறைய வாய்ப்புள்ளது.

மருந்து எப்படி வேலை செய்கிறது?

எடை இழப்புக்கு, மவுஞ்சரோ உடலில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. பசியைக் குறைக்கிறது மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. இதன் காரணமாக, ஒரு நபர் நீண்ட நேரம் பசி எடுக்காது. இதன் காரணமாக, உடல் எடை படிப்படியாக குறையத் தொடங்குகிறது.

நகரங்களில் அதிகரிக்கும் உடல் பருமன் பிரச்சனை

இந்திய நகரங்களில் உடல் பருமன் பிரச்சனை மிகவும் தீவிரமானது. நகர்ப்புறங்களில், 29.8% ஆண்கள் பருமனாக உள்ளனர், கிராமங்களில் இது 19.3% ஆகும். பெண்களைப் பொறுத்தவரை, நகர்ப்புற விகிதம் 33.2% ஆகவும், கிராமப்புறங்களில் இது 19.7% ஆகவும் உள்ளது. நகரங்களில் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் துரித உணவுகளை அதிகம் உண்பது ஆகியவை நிலைமையை மோசமாக்குகின்றன.

நீரிழிவு மற்றும் உடல் பருமன் பிரச்சனைகள்

இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடிக்கும் மேல். நாட்டில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சர்வதேச நீரிழிவு சம்மேளனம் அளித்த தகவலில், இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2021 இல் 7.42 கோடியிலிருந்து 2045 இல் 12.4 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2019 முதல் 2021 வரையிலான அரசாங்க கணக்கெடுப்பில் 24% பெண்களும் 23% ஆண்களும் (வயது 15-49) பருமனாக உள்ளனர். இது 2015-2016 அளவை விட கணிசமாக அதிகமாகும் (20.6% பெண்கள், 19% ஆண்கள்).

மேலும் படிக்க | பிரிட்ஜில் இருந்து நேரடியாக குளிர்ந்த நீரை குடிப்பீங்களா? இந்த பிரச்சனைகள் வரலாம்!

மேலும் படிக்க | மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க... தேவையான ஊட்டச்சத்துக்களும்.... உணவுகளும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News