ஜிம்முக்கு போகும் முன் மறந்தும் சாப்பிடக்கூடாத உணவுகள்... ஆரோக்கியமான இருந்தாலும் வேண்டாம்!

Health Tips: உடற்பயிற்சிகளை செய்யும் முன் நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இதில் விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 4, 2025, 06:36 AM IST
  • உடல் எடையை குறைப்பதில் உடற்பயிற்சிகள் முக்கியம்.
  • உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.
  • சிறப்பான உணவுப் பழக்கமும் உடல் எடையை குறைக்க உதவும்.
ஜிம்முக்கு போகும் முன் மறந்தும் சாப்பிடக்கூடாத உணவுகள்... ஆரோக்கியமான இருந்தாலும் வேண்டாம்!

Health Tips: உடல் பருமன், உடல்நலப் பிரச்னைகள், நோய்கள் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்க ஒருவர் நிச்சயம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்றால் பீடி, சிகரெட், மது மற்றும் இன்ன பிற போதை பொருள்களை தவிர்ப்பது மட்டுமின்றி ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொள்வது, சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, சரியான நேரத்தில் தூங்குவது, சரியான நேரத்தில் எழுந்திருப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது, சுறுசுறுப்பாக செயல்படுவது என பல்வேறு விஷயங்கள் உள்ளன.

Add Zee News as a Preferred Source

நீங்கள் உடல் எடையை குறைப்பவராக இருக்கும்பட்சத்தில் இவை அனைத்தும் முக்கியமாகும். அதேநேரத்தில், தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதும் அவசியமான ஒன்றாகும். நீங்கள் ஜிம்முக்குச் சென்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம், வீட்டில் இருந்தும் எளிமையான முறையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இருப்பினும், உடற்பயிற்சி பயிற்றுநரிடம் சென்று உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை கற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்படுவதே சரியானதாகும்.

Health Tips: தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்

நீங்கள் தினமும் தொடர்ச்சியாக உடற்பயிற்சியை தொடங்கிவீட்டீர்கள் எனில் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டும். மேலும் முக்கியமாக நீங்கள் உடற்பயிற்சிகளை செய்யும் முன் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கும் ஆற்றல் தேவை. அவை உங்களின் உணவுகளில் இருந்துதான் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க |  நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி? இஞ்சி, தேன், எலுமிச்சை வீட்டு வைத்தியம்

அந்த நேரத்தில், நீங்கள் உடற்பயிற்சிகளுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதாவது நீங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது உங்களுக்கு அசௌகரியத்தை வழங்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவுகளில் கவனம் செலுத்தினால்தான் நீங்கள் செய்யும் உடற்பயிற்சியின் மூலம் தக்க பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இங்குள்ள இந்த உணவுகளை உடற்பயிற்சிக்கு முன் தவிர்த்துவிடுங்கள். இதனை சாப்பிடுவதால் உடற்பயிற்சி செய்யும்போது உங்களுக்கு அசௌகரியம் உண்டாகலாம்.

Health Tips: கொழுப்பு நிறைந்த உணவுகள்

பர்கர், பிட்சா, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பிரஞ்சு ஃப்ரைஸ் போன்ற உணவுகளை உடற்பயிற்சிக்கு முன் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிக கொழுப்புச்சத்து உள்ளன. சிப்ஸ், சமோசா ஆகியவற்றையும் இவற்றுடன் சேர்க்கலாம். இவை உங்களுக்கு உப்புசம், குறைந்த ஆற்றல் மற்றும் அசௌகரியத்தை அளிக்கும்.

Health Tips: யோகர்ட்

இதில் அதிக புரதம் மற்றும் லாக்டோஸ் உள்ளன. இது செரிமானத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். தேவையான ஊட்டச்சத்தை அளித்தாலும் கூட அதன் கிரீம் மற்றும் அடர்த்தி உடற்பயிற்சி செய்யும்போது உப்புசம், சதை பிடிப்பு, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

Health Tips: நட்ஸ் மற்றும் விதைகள்

இது ஆரோக்கியமானவை என்றாலும் உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடுவது நல்லது அல்ல. இதில் அதிக கொழுப்பு மற்றும் நார்ச்சத்து இருக்கின்றன. எனவே இது செரிமானத்திற்கு அசௌகரியத்தை உண்டு பண்ணும், உப்புசம் ஏற்படலாம். அதிக கலோரிகள் கொண்டதால் உங்களின் ஆற்றல் திடீரென குறைந்து, உங்களால் உடற்பயிற்சியை முழுமையாக செய்ய இயலாது.

Health Tips: இனிப்பான உணவுகள், குளிர்பானங்கள்

இனிப்பு நிறைந்த உணவுகளிலும், குளிர்பானங்களிலும் எப்போதுமே ஜீரோ கலோரிகள்தான். அதாவது, ஊட்டச்சத்து என்பதே இல்லை. இதை குடித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி மேற்கொண்டால் ஆற்றல் குறையும், செரிமான பிரச்னை ஏற்படும்.

Health Tips: பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள்

அதிக லாக்டோஸ் அளவும், புரதச்சத்தும் கொண்ட பாலை நீங்கள் உடற்பயிற்சிக்கு முன் எடுக்கவே கூடாது. இது செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும். உடற்பயிற்சிக்கு பின்னர் கூட பால் அருந்தலாம். அதேபோல், அதிக கொழுப்புச் சத்து நிறைந்த பால் பொருள்களான சீஸ் உடற்பயிற்சிக்கு முன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவை ஆகும். இதனை பின்பற்றும் முன் வாசகர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | பழைய சோறு: காலையில் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News