உடல் எடையை குறைக்க தேவையான 8 விஷயங்கள்! Fitness Trainer பகிறும் டிப்ஸ்..

Things You Should Know For Weight Loss : உடல் எடையை குறைப்பதற்கு தேவையான 8 விஷயங்களை, ஃபிட்னஸ் ட்ரெயினர் பகிர்கிறார். இது குறித்த முழு விஷயங்களை, இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Dec 11, 2025, 06:56 PM IST
  • வெயிட் லாஸ் டிப்ஸ்..
  • ட்ரெயினர் கூறும் விஷயங்கள்..
  • இதோ முழு விவரம்..
உடல் எடையை குறைக்க தேவையான 8 விஷயங்கள்! Fitness Trainer பகிறும் டிப்ஸ்..

Things You Should Know For Weight Loss : நம் அனைவருக்குமே, ஏதாவது ஒரு வகையில் உடலை பத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அதற்கு, நாம் முதலில் ஹெல்தியான உடல் எடையுடன் இருப்பது மிகவும் அவசியம் ஆகும். இது குறித்து இளம் ஃபிட்னஸ் ட்ரெயினர் கூறியிருக்கும் விஷயங்களை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

உடல் எடை குறைப்பு:

உடல் எடையை குறைப்பது என்பது, அனைவரும் நினைப்பது போல மிகவும் சுலபமான காரியம் கிடையாது. இதை செய்ய வேண்டும் என்றால் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அவசியம். ஒரு சிலர், தனக்கு ஏற்ற ரிசல்ட் விரைவில் கிடைக்கவில்லை என்றால் உடனே மனம் தளர்ந்துவிடுவர். இதனால் அவர்கள் எடுத்து வைக்கும் முயற்சியிலும் செய்யும் விஷயத்திலும் தாமதம் ஏற்படலாம். இந்த உடல்எடை குறைப்பு பயணத்திற்கு, நாம் கண்டிப்பாக சில விஷயங்களை மனதில் கொள்வதும் அவசியம் என்கிறார், ஃபிட்னஸ் ட்ரெயினர் ஆர்ஜா பேடி. தற்போது அவர், அனைவருக்கும் உதவக்கூடிய 8 வெயிட்லாஸ் டிப்ஸை பகிர்ந்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

1.ஃபைபர்:

உடல் எடையை குறைக்கும் பலர், புரதச்சத்தின் மீது கவனம் செலுத்தி விட்டு, ஃபைபரை அப்படியே கோட்டை விட்டுவிடுவர். ஆனால், உடல் எடையை குறைக்க புரதம் எவ்வளவு முக்கியமோ, அதே போல ஃபைபரும் முக்கியமாம். புரதம் நம் வயிற்றை முழுமையாக்கி, பசி உணர்வு ஏற்பட விடாமல் தடுக்கும். இருபினும் ஃபைபர்தான் உங்கள் செரிமானத்தை சீராக்கும். ஹார்மோன் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்கோப்பில் வைத்திருக்க ஃபைபர் மிகவும் அவசியம் ஆகும். காய்கறி, பழங்கள் மற்றும் முழு தானியங்களை இதற்கு எடுத்துக்கொள்ளலாம். 

2.தூக்கம்:

உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர், உடற்பயிற்சி செய்கின்றனர், டயட் இருக்கின்றார். ஆனால், உடலுக்கு தேவையான தூக்கத்தில் கோட்டை விட்டு விடுகின்றனர். 7-8 மணி நேரம் நாம் உறங்கவில்லை என்றால், கண்டிப்பாக அதிக சர்க்கரை உணவை சாப்பிட வேண்டும் என்று தோன்றலாம். இதைத்தாண்டி, சரியான உறக்கம் இல்லை என்றால் பிற பிரச்சனைகளும் உடலில் ஏற்படும். 

3.பதற்றம்:

உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதே போல மன ஆரோக்கியமும் முக்கியம். பதற்றம்தான் உங்கள் உடலின் Cortisol, குறைந்த கொழுப்பு குறைவு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும். எனவே மன ஆரோக்கியத்தையும் சரியாக பார்த்துக்கொள்வது முக்கியமாகும்.

4.சுய ஒழுக்கம்:

நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் மட்டுமே, சரியாக உடலை மெயிண்டெய்ன் செய்ய முடியும். நீங்கள் தொடர்ந்து உங்களுக்கு உண்மையாக இருந்தால் மட்டுமே, எடையை குறைக்க முடியும் என்கிறார் ஆர்ஜா பேடி.

5.பொறுப்பு:

உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு, உங்களை தவிர வேறு யாரேனும் உங்களுக்கு உதவினாலும் மிகுந்த நல்லதுதான். யாரேனும் ஒருவர், உங்கள் வெயிட்டை ட்ராக் செய்து, உடற்பயிற்சிகளை கவனித்தால் நீங்கள் இன்னும் நன்றாகவே எடையை குறைக்கலாம்.

6.திட்டமிடுதல்:

நீங்கள் ஒரு நாளில் என்ன சாப்பிடுகிறீர்கள், எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதை சரியாக திட்டமிட வேண்டும். இதை உங்கள் மனதில் வைத்துக்கொள்ளாமல், கண்டிப்பாக இதற்கு ஒரு அட்டவணையையும் போடுங்கள்.

7.பகிர்தல்:

உங்கள் உடல் எடை இழப்பு என்ன என்பதையும், எதை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் கண்டிப்பாக பிறரிடம் நீங்கள் பகிர வேண்டும். உங்கள் நண்பர்கள், நலம் விரும்பிகளிடம் உங்கள் மைல் ஸ்டோனை பகிர்ந்து நீங்கள் ஒரே ட்ராக்கில் பயணம் செய்யலாம்.

8.டயட்:

நீங்கள் எவ்வளவுதான் விழுந்து விழுந்து உடற்பயிற்சி செய்தாலும், இறுதியில் உங்கள் டயட் சரியாக இல்லை என்றால், கண்டிப்பாக எடை குறைய வாய்ப்பில்லை. உங்கள் உடலுக்கும், எடை இழப்பிற்கும் ஏற்ற டயட்டை திட்டமிட்டு, அதை நோக்கி நீங்கள் ஓடுவது நல்லது என்கிறார் ஆர்ஜா பேடி.

மேலும் படிக்க | 1 வாரத்தில் 1 கிலோ குறைக்கலாம்! Fitness Trainer கொடுக்கும் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

மேலும் படிக்க | Quick Weight Loss : காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்! Fitness Trainer-ன் அறிவுரை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News