இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், நாம் மனிதர்களுடன் செலவழிக்கும் நேரத்தை விட, எலக்ட்ரானிக் பொருட்களுடன் அதிகமான நேரத்தை செலவிடுகிறோம். இது மன ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான தாக்குதலை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க இயலாது. மன அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு இவை முக்கிய காரணமாக அமைகின்றன. இவை இரண்டையும் கட்டுப்படுத்த, ஜப்பானியர்கள் ஒரு இயற்கையான டெக்னிக்கை கடைபிடிக்கின்றனர்.
பசுமை நிறைந்த பூங்காக்கள் அல்லது தோட்டங்களுக்கு சென்று நேரத்தை செலவிடுதல்
மன அழுத்தத்தை போக்கி மனதிற்கு அமைதியை தர வனக் குளியல் அதாவது Forest Bathing என்ற முறை பெரிதும் கை கொடுக்கும் என்று ஆய்வுகள் பல கூறுகின்றன. இதற்கு நாம் வனப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. நகரத்தில் உள்ளவர்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள பசுமை நிறைந்த பூங்காக்கள் அல்லது தோட்டங்களுக்கு சென்று நேரத்தை செலவிடலாம். அந்த நேரத்தில் மொபைல் போன்கள் மற்றும் இயர்போன்கள் எதுவும் பயன்படுத்தாமல், இயற்கையில் கவனம் செலுத்தி, அதனை ரசிக்க வேண்டும் என்பது மிக முக்கியம். இலைகள் விழும் சத்தத்தை அனுபவித்து கேட்க வேண்டும். மண்ணின் மணத்தை ரசிக்க வேண்டும். இவ்வாறு செய்வது மன அழுத்தத்திற்கு மருந்தாக அமைவதோடு ரத்த அழுத்தமும் பெருமளவு (Health Tips) கட்டுப்படுத்தப்படுகிறது.
வனக் குளியல் குறித்து ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள்
ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளில் வன குளியல் அல்லது காட்டு குளியல் என்னும் இயற்கையுடன் நேரத்தை செலவழிக்கும் டெக்னிக் இதையும் ரத்த அழுத்தத்தையும் சிறப்பாக கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் டீக் டாக் செய்ய பெரிதும் உதவுகிறது. இதனால் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதுடன், உடலும் மனமும் உள்ளிருந்து புத்துணர்ச்சியை பெறுகிறது.
இதயம், நுரையீரல் என அனைத்தையும் வலுவாக்கும் ஆரோக்கியமான பழக்கம்
கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், இயற்கை அழகு நிறைந்த சூழலில், மேற்கொள்ளப்படும் நடைப்பயிற்சி, சைக்கிள் போற்றும் பயிற்சி ஆகியவை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது என்றும், இயற்கை சூழலில் சென்று மேற்கொள்வது, உடலுக்கு அதிக ஆக்சன் கிடைக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் நுரையீரல் வலுப்படுத்துவதோடு, ரத்தத்தில் ஆக்சிஜன் அதிகரிப்பதால் மூளை இதயம் எல்லாம் புத்துணர்ச்சியுடன் செயல்படகின்றன
நோய்கள் மற்றும் தொற்றுக்களை எதிர்த்து போராடும் செல்கள் பெருக உதவும் பழக்கம்
ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் 37 முதல் 55 வயது குட்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காட்டுக்குளியல் அல்லது வனக் குளியல் டெக்னிக்கை பின்பற்றிய நபர்களில், நோய்கள் மற்றும் தொற்றுக்களை எதிர்த்து போராடும் செல்கள் 50% அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை எதிர்த்துப் போராட இது உதவுகின்றன என்று கூறப்படுகிறது. நமது முன்னோர்கள் காட்டில் தியானம் மற்றும் யோகா சாதனை மூலம், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கம்
தினம் காலையில் அரை மணி நேரம், அருகில் உள்ள பூங்கா அல்லது தோட்டத்திற்கு சென்று, மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதும், பசுமை நிறைந்த இடங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதும், மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | காலில் அதிக வலியா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்! ஜாக்கிரதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ