Uric Acid Control: யூரிக் அமிலம் என்பது உணவில் உள்ள பியூரின் எனப்படும் புரதத்தின் முறிவால் உருவாகும் ஒரு வகை அழுக்கு ஆகும். பொதுவாக இது இரத்தத்தின் மூலம் சிறுநீரகத்தை அடைந்து, சிறுநீர் வழியாக உடலை விட்டு வெளியேறுகிறது. ஆனால் உடலில் அதன் அளவு அதிகரிக்கும் போது, அது படிகங்களாக மாறி மூட்டுகளில் குவிந்து கீல்வாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
யூரிக் அமிலம் எந்த அளவில் இருந்தால் ஆபத்து இல்லை?
பெண்களின் உடலில் யூரிக் அமிலத்தின் சாதாரண அளவு டெசிலிட்டருக்கு 1.5 முதல் 6.0 மில்லிகிராம் (மிகி/டெசிலிட்டர்) ஆகவும், ஆண்களின் உடலில் 2.5 முதல் 7.0 மிகி/டெசிலிட்டர் ஆகவும் இருக்கும். ஆனால் இது இதை மீறினால் உடனடியாக உணவு முறையில் மாற்றம் செய்வது அவசியமாகிறது. யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காண்லாம்.
இந்த வெள்ளை உணவு யூரிக் அமில அளவை அதிகரிக்கிறது
ஆயுர்வேதத்தில், யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் தயிரு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தயிரில் அதிக அளவு புரதம் உள்ளது. இது யூரிக் அமிலம் அதிகரிக்க காரணமாகிறது. ஆனால் பல சுகாதார நிபுணர்கள் பால் பொருட்கள் யூரிக் அமிலத்தைக் குறைப்பதில் உதவியாக இருக்கும் என்றும் கருதுகின்றனர்.
இந்த உணவுகள் யூரிக் அமிலத்தையும் அதிகரிக்கும்.
உங்கள் யூரிக் அமிலம் இயல்பை விட அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த, சிவப்பு இறைச்சி, மதுபானம், வெண்ணெய், கிரீம், ஐஸ்கிரீம், இனிப்பு பானங்கள், சேப்பங்கிழங்கு, கீரை, கொண்டைக்கடலை, ராஜ்மா, அரிசி, வெல்லம், காளான், காலிஃபிளவர் போன்ற உணவுகளை முடிந்தவரை குறைவாக உட்கொள்ளுங்கள்.
அதிகரித்த யூரிக் அமிலத்தின் அறிகுறிகள்
- மூட்டு வலி அல்லது வீக்கம்
- மூட்டுகளைச் சுற்றியுள்ள தோலின் நிறமாற்றம்
- மூட்டுகளை தொடும்போது சூடான உணர்வு
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- உள்ளங்கால்கள் சிவத்தல்
- கால் விரலில் வலி
நமது உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் மூட்டுகள் பாதிக்கப்படுவது மட்டுமலாம்ல, சிறுநீரகமும் பாதிக்கப்படுகின்றது. இதனுடன் இதய நோய்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. யூரிக் அமிலத்தைக் குறைக்க, மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன், ஆரோக்கியமான, முறையான உணவுப் பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மிக அவசியமாகும். நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, வீக்கம், வலி மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வெங்காய ஜூஸ் – பல நோய்களுக்கு மருந்து! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்கள்!
மேலும் படிக்க | அழகான ஒல்லி பெல்லி வேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









