Kidney Damage Symptoms: சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால், உடல் அதற்கான சில அறிகிறிகளை நமக்கு காட்டும். சிறுநீரக பாதிப்பால் ஏற்படும் வலி மற்றும் அசவுகரியங்களை மக்கள் பொதுவாக சிறிய வலி என கருதி புறக்கணிக்கிறார்கள்.

Kidney Damage Symptoms: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வித உறுப்புகள் பங்காற்றுகின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகங்கள் உடலில் இருந்து அழுக்கை அகற்றி இரத்தத்தை சுத்தம் செய்யும் பணியை செய்கின்றன. ஆனால் சிறுநீரகங்களில் ஏதேனும் பிரச்சனை இருக்கும்போது, அது உடலின் மற்ற பகுதிகளில் வலியாக வெளிப்படும். சிறுநீரக பாதிப்பு உடலின் வழக்கமான செயல்பாட்டை வெகுவாக பாதிக்கின்றது.
ஆரோக்கியமாக இருக்க, சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியம். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால், உடல் அதற்கான சில அறிகிறிகளை நமக்கு காட்டும். அவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். சிறுநீரக பாதிப்பால் ஏற்படும் வலி மற்றும் அசவுகரியங்களை மக்கள் பொதுவாக சிறிய வலி என கருதி புறக்கணிக்கிறார்கள். ஆனால், இது தவறு. இதனால் மருத்துவரை சரியான நேரத்தில் அணுக முடியாமல் போகின்றது. சிறுநீரக பாதிப்பின் சில அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இடுப்பு
சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்போது, பெரும்பாலும் முதல் வலி இடுப்பில் உணரப்படுகிறது. இந்த வலி பொதுவாக விலா எலும்புகளுக்குக் கீழேயும், சிறுநீரகங்கள் அமைந்துள்ள கீழ் முதுகிலும் ஏற்படும். சிறுநீரகங்களில் வீக்கம் அல்லது ஏதேனும் பிரச்சனை இருந்தால், இந்த வலி மிகவும் கடுமையானதாக மாறும்.
உடலின் இரு பக்கங்களிலும் வலி ஏற்படும்
சிறுநீரகத்தில் வீக்கம் அல்லது கல் பிரச்சனை இருந்தால், பக்கவாட்டுப் பகுதிகளிலும் வலி உணரப்படலாம். இந்த வலி உடலின் இருபுறமும் உள்ள விலா எலும்புகளைச் சுற்றி பரவுகிறது. சிறுநீரகத்தில் கடுமையான பிரச்சனை இருந்தால், இந்த வலி உடலின் ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு பரவக்கூடும்.
வயிறு
சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படும் போது, வயிற்று வலியையும் சிலர் அனுபவிக்கிறார்கள். சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டாலோ அல்லது வீக்கம் இருந்தாலோ, கடுமையான வயிற்று வலி ஏற்படக்கூடும். இந்த வலி சில நேரங்களில் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
இடுப்பு
சிறுநீரக கற்கள் இருந்தால், வலி சில நேரங்களில் விந்தணு பகுதிகள் அல்லது இடுப்புப் பகுதிக்கும் பரவக்கூடும். இந்த வலி கடுமையாநதாக இருக்கும். குறிப்பாக சிறுநீரகத்தில் கல் இருந்து அது சிறுநீர் பாதையில் பயணிக்கும்போது இந்த வலி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
தொடை
சிறுநீரக பிரச்சனைகளால் ஏற்படும் வலி தொடைகளுக்கு பரவக்கூடும். இந்த வலி குறிப்பாக சிறுநீரக கல் அல்லது தொற்று காரணமாக ஏற்படுகிறது. சிறுநீரக கற்கள் இருந்தால், தொடை பகுதி உட்பட, உடலின் கீழ் பகுதிக்கும் வலி பரவக்கூடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ