மாரடைப்பு வருவதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம்

மாரடைப்பு ஏற்படுவதற்கு 10 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு முன்பாகவே சில அறிகுறிகள் மூலம் அதனை அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 25, 2025, 02:24 PM IST
  • இதயத்திற்கு போதிய ரத்தம் கிடைக்கவில்லை என்றால் இதயத்துடிப்பு அதிகரிக்கும்.
  • மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம்.
  • மாரடைப்பு அறிகுறிகளை சரியாக கவனித்தால் பலர் உயிரை காப்பாற்றலாம்.
மாரடைப்பு வருவதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும் இளைஞர்கள் மாரடைப்பால் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது உண்மையில் கவலை அளிக்கும் விஷயமாகும். பொதுவாக, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், தவறான உணவுப் பழக்கமும் இதற்குக் காரணம் என்றால் மிகையில்லை. மாரடைப்பு ஏற்படுவதற்கு 10 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு முன்பாகவே சில அறிகுறிகள் மூலம் அதனை அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Add Zee News as a Preferred Source

தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புடன் இருப்பவர்கள் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவையும் இதற்கு காரணமாகிறது. எனவே, இதய நோயை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சரியான தகவல் பலரின் உயிரை காப்பாற்றும். மாரடைப்பு அறிகுறிகளை அறிந்து கொண்டு, அதனை சரியாக கவனித்தால் பலர் உயிரை காப்பாற்றலாம் என்கின்றனர் மருத்துவர்கள். 

மாரடைப்பு  ஏற்படுவதற்கான காரணம்

டில்லி ஐஎச்பிஏஎஸ் மருத்துவமனையின் முன்னாள் வசிப்பவர் டாக்டர் இம்ரான் அகமது  இது குறித்து கூறுகையில், எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிட்டு, உடல் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் இருந்தால், தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக நரம்புகளில் அடைப்பு ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இரத்தம் இதயத்தை அடைய அதிக சக்தியை செலுத்த வேண்டும். இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு ஏற்படுகிறது. சரியான நேரத்தில் அதன் ஆபத்தை கண்டறிந்து எவ்வாறு தடுப்பது என்பதை அறிந்து கொள்வோம்

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

இதயத்திற்கு போதிய ரத்தம் கிடைக்கவில்லை என்றால் இயற்கையாகவே இதயத்துடிப்பு அதிகரிக்கும். நரம்புகளில் அல்லது இதய தமனிகளில், கொலஸ்ட்ரால் காரணமாக கொழுப்பு கட்டிகள் அல்லது இரத்தக் கட்டிகள் உருவாகத் தொடங்கும் போது, ​​இரத்த ஓட்டம் பாதிக்கிறது. பொதுவாக, ஆரோக்கியமான வயது வந்தவரின் இதயம் ஒரு நிமிடத்தில் 70 முதல் 72 முறை துடிக்கிறது.  இது அதிகமாகும் போது, மாரடைப்பு ஏற்படக்கூடும் என்பதை புரிந்துகொள்வது அவசியம்.

சோர்வு

வேலை பளு அதிகம் இருந்தால் சோர்வாக உணர்கிறோம். ஆனால் வேலைப்பளு இல்லாத நிலையிலும் நீங்கள் சோர்வாக உணரத் தொடங்கினால், நிச்சயமாக ஏதோ தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதாவது, நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால், உடலின் பல பாகங்களுக்கு ரத்தம் ஓட்டம் சரியாக இருக்காது. இதனால் உடலுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் சோர்வு ஏற்படும்.

நெஞ்சு வலி

வயிற்றில் வாயு, பதற்றம் காரணமாக அமைதியின்மை  ஆகியவற்றினால் மார்பு வலி ஏற்படலாம். ஆனால் இது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால், அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. மார்பு வலி தோள்கள், கைகள் மற்றும் முதுகில் பரவுகிறது. இதுபோன்ற அறிகுறிகள் உங்கள் உடலில் தோன்றும் போதெல்லாம், அவற்றைப் புறக்கணிக்காமல் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | அதிக கொழுப்பை கரைக்க, நரம்புகளில் படிந்துள்ள கொழுப்பை நீக்க... இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க போதும்

மேலும் படிக்க | மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க... தேவையான ஊட்டச்சத்துக்களும்.... உணவுகளும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News