கர்நாடகாவின் 8 மாவட்டங்களில் ‘நிபா’ வைரஸ் எச்சரிக்கை...

கேரளாவை மிரட்டி வரும் நிபா வைரஸ் காய்ச்சல் கர்நாடகத்தில் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளளப்பட்டு வருகிறது!

Updated: Jun 6, 2019, 07:09 AM IST
கர்நாடகாவின் 8 மாவட்டங்களில் ‘நிபா’ வைரஸ் எச்சரிக்கை...
Representational Image

கேரளாவை மிரட்டி வரும் நிபா வைரஸ் காய்ச்சல் கர்நாடகத்தில் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளளப்பட்டு வருகிறது!

கடந்த ஆண்டு மே மாதம் கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தாக்கி 17 உயிர்களை பலி வாங்கியது (கோழிக்கோடு மாவட்டத்தில் 14 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 3 பேர்). கேரளாவரை தாக்கிய இந்த நிபா வைரஸ் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுவதாக கூறப்படுகிறது. 

வவ்வால்கள், அணில்கள் ஆகியவை கடித்துப்போடும் பழங்களை எடுத்து சாப்பிடும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இந்நோய் பரவுவதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிபா வைரஸ் தாக்கியவர்களுக்கு கடுமையான காய்ச்சல், தசை வலி, தலைவலி, வாந்தி, தொண்டை வலி, தலை சுற்றல் போன்ற அறிகுறிகளுடன் மூளை வீக்கம் போன்ற நரம்பியல் பிரச்சினைகளும் ஏற்படும். கடுமையான பாதிப்பு ஏற்பட்டவர்கள், கோமா நிலையை அடைவார்கள். இறுதியில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வுகள் கூறுகின்றது.

இதற்கிடையே தற்போது கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் மீண்டும் தாக்கி உள்ளது. பாதுகாப்பு நலன் கருதி தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் 6 பேர் அடங்கிய மத்திய குழு, கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில், ‘நிபா’ வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என, எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. சாம்ராஜ்நகரா, மைசூரு, குடகு, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, ஷிவமொகா, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொருத்தவரையில் நிபா வைரஸ் காய்சல் பாதிப்பு இல்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளர்.