கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா... ICMR அளித்த முக்கிய தகவல்

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் 40 நாட்களில், 21 பேர் மாரடைப்பால் இறந்த போனதால் பும் பரபரப்பு நிலவியது.  எனவே, மாரடைப்பு காரணமாக ஏற்படும் இறப்புகள் குறித்து  ஆராய மாநில அரசு சிறப்பு குழு ஒன்றை நியமித்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 8, 2025, 08:07 PM IST
  • இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
  • வாழ்க்கை முறை காரணிகள் தான் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கின்றன.
  • ஹார்மோன்கள் மற்றும் மூலிகை மருந்துகளை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்வது சரியல்ல.
கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா... ICMR அளித்த முக்கிய தகவல்

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் 40 நாட்களில், 21 பேர் மாரடைப்பால் இறந்த போனதால் பெரும் பரபரப்பு நிலவியது. எனவே, மாரடைப்பு காரணமாக ஏற்படும் இறப்புகள் குறித்து ஆராய மாநில அரசு சிறப்பு குழு ஒன்றை நியமித்தது. அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவும் திடீர் இறப்புகளுக்கான காரணத்தைக் கண்டறிந்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட இறப்புகளுக்கான காரணம் கொரோனா தடுப்பூசி என்ற கருத்து நிலவியது. இருப்பினும், ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் மாரடைப்புக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது. திடீர் மரணத்திற்கான காரணம் மோசமான வாழ்க்கை முறை தான் எனக் கூறிய கர்நாடக குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் கோவிட்-19 தடுப்பூசிக்கும் இளைஞர்களின் இறப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்

கர்நாடகாவின் குழுவின் சிறப்பு அறிக்கையில், தடுப்பூசிக்கும் மாரடைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை. மாரடைப்பு காரணமாக ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்கள் பல வகைகளில் உள்ளன. இவை வாழ்க்கை முறையுடன் தொடர்புடையவை. எனவே, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு தேவை. இந்த காரணங்களில் வாழ்க்கை முறை, மரபணு மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களும் அடங்கும்.  கோவிட் தடுப்பூசிகள் இளைஞர்களின் திடீர் மரணங்களுடன் தொடர்புடையவை என்ற கூற்றுகளை  ஆய்வு மறுத்துள்ளது. மாறாக, தடுப்பூசிகள் இதயப் பிரச்சினைகளுக்கு எதிராக நீண்டகால பாதுகாப்பை வழங்குகின்றன என்பதற்கான உலகளாவிய ஆதாரங்களை குழு எடுத்துக்காட்டியது.

வாழ்க்கை முறை காரணிதான் மிகப்பெரிய காரணம்

மாரடைப்பு சம்பவங்கள் அதிகரிப்பதற்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், டிஸ்லிபிடீமியா மற்றும் அதிகப்படியான புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை காரணம் என்று குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. இவை அனைத்தும் எப்போதும் சொல்லப்படும் காரணங்கள் தான். ஆனால் ஆபத்தை அதிகரிக்கின்றன என்பதை மறுக்க இயலாது.

நிபுணர்கள் இளைஞர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

வாழ்க்கை முறை காரணிகள் தான் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கின்றன. இது தவிர ஸ்டீராய்டுகள், ஹார்மோன்கள் மற்றும் மூலிகை மருந்துகளை, மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்தகத்தில் வாங்கி எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு ஒருபோதும் சரியானதல்ல என்று கூறியுள்ளனர். குறிப்பாக மருத்துவரை அணுகாமல் இதைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது.

ICMR மருத்துவர்கள் கூறுவது என்ன?

மாரடைப்பு குறித்து, ICMR இன் முன்னாள் DG டாக்டர் பால்ராம் பார்கவா, செய்தி நிறுவனமான ANI உடன் பேசுகையில், பெரும்பாலான இறப்புகளுக்கு காரணம் புகைபிடிப்பதே என்று கூறுகிறார். 18 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் மாரடைப்பினால் இறந்தவர்களில் 50% க்கும் அதிகமானோர் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார். இந்த காரணங்கள் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது மாரடைப்புக்கு வழிவகுக்கிறது என்கிறார்.

மேலும் படிக்க | மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க... கொலஸ்ட்ராலை எரிக்க உதவும்... மிகச் சிறந்த டயட்

மேலும் படிக்க |  மாரடைப்பு ஏற்படுவதை உணர்த்தும்.... சில எச்சரிக்கை அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம்

மேலும் படிக்க | பெண்களே, அடிக்கடி மார்பக வலி வருகிறதா? இதோ கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News