ஆளி விதையில் ஒளிந்திருக்கும் ஆயிரம் நன்மைகள்... தினம் ஒரு ஸ்பூன் போதும்

தினமும் ஆளி விதை சாப்பிடுவதால் உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். தோற்றத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பெரியவை. எனவே இதனை சூப்பர் ஃபுட் என்று அழைப்பதில் தவறேதும் இல்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 8, 2025, 09:19 AM IST
  • உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது ஆளி விதை.
  • ஒரு ஸ்பூன் ஆளி விதையில் 1. 3 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது.
  • இதயத்திற்கு இதமானது ஆளி விதைகள்.
ஆளி விதையில் ஒளிந்திருக்கும் ஆயிரம் நன்மைகள்... தினம் ஒரு ஸ்பூன் போதும்

Benefits of Flaxseeds: தினமும் ஆளி விதை சாப்பிடுவதால் உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். தோற்றத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பெரியவை. எனவே இதனை சூப்பர் ஃபுட் என்று அழைப்பதில் தவறேதும் இல்லை.

Add Zee News as a Preferred Source

ஆளி விதையில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள்

ஆளி விதையில் ஆரோக்கிய கொழுப்பு அமிலம் மட்டுமல்லாது, நார்ச்சத்து, புரதம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஒரு ஸ்பூன் ஆளி விதையில் 1. 3 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதாகவும், இரண்டு கிராம் நார்ச்சத்து இருப்பதாகவும் 0.3 மில்லி கிராம் லிக்னான்கள் நிறைந்துள்ளதாகவும் உணவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இது தவிர இதில் தாமிரச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமங்களும் உள்ளன. இவை அனைத்துமே உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு வகையில் ஆளி விதைகள் பயன்களை அள்ளிக் கொடுக்கின்றன. இதய ஆரோக்கியம் முதல் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துதல், உடல் எடையை குறைத்தல் என ஒரு பெரிய பட்டியலில் போடலாம்.

1. இதயத்திற்கு இதமானது ஆளி விதைகள். இதில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கின்றன.

2. ஆளி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், கீழ்வாதம் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருகிறது. மேலும் இதில் நிறைந்திருக்கும் கனிமச்சத்துக்களும், கொழுப்பு அமிலமும், எலும்புகளை வலுப்படுத்த தேவையான பிறவு ஊட்டச்சத்துக்கள்.

3. ஆளி விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அருவருந்தாக இருக்கும். செரிமானத்தை சீர் செய்து, சர்க்கரையை உடல் உறிஞ்சுவதை மெதுவாக்கி, ரத்த சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது.

4. ஆளி விதைகளில் காணப்படும் நார்ச்சத்து, குடலை சுத்தமாக்கி மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கிறது. அதோடு இதில் உள்ள ப்ரீ பயோடிக் தன்மை குடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் அஜீரண பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

5. ஆளிவிதைகளில் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகை போக்குகிறது. மேலும் ஆளி விதைகளை சேர்த்துக் கொள்வதால், ரத்த ஓட்டம் சீராகி, உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைத்து, ஆற்றல் அளவு குறையாமல் இருக்கும்.

6. உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் ஆளி விதைகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து இதற்கு கை கொடுக்கும்.

7. ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்த ஆளி விதைகள் மனச்சோர்வு மன அழுத்தம் ஆகியவற்றை நீக்கி, மூளையை சுறுசுறுப்பாக உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | வெயிட் லாஸ் செய்ய சுகருக்கு பதில் ‘இதை’ எடுத்துக்கோங்க..

மேலும் படிக்க | எடை சட்டுன்னு குறைய அரிசிக்கு பதில் ‘இதை’ சாப்பிடலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News