சிக்கன் - மட்டனை விட அதிக புரதம் இதில் இருக்காம்... பாசிபயறை தவறாமல் டயட்டில் சேருங்க

சைவ உணவு உண்பவர்களுக்கு பாசிப்பயறு புரதச் சுரங்கம் எனலாம். தினமும் இதனை சாப்பிடுவதன் மூலம் புரோட்டீன் குறைபாட்டைப் போக்கலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 3, 2025, 04:35 PM IST
  • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்த உணவு பாசிப்பயறு.
  • பருப்பு வகைகள் அனைத்துமே நமக்கு ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பவை
  • மலச்சிக்கல் மற்றும் கொலஸ்ட்ராலில் இருந்து நிவாரணம்.
சிக்கன் - மட்டனை விட அதிக புரதம் இதில் இருக்காம்... பாசிபயறை தவறாமல் டயட்டில் சேருங்க

நமது பாரம்பரிய உணவுமுறைகளில் முக்கிய இடம் பெற்றுள்ள பருப்பு வகைகள் அனைத்துமே நமக்கு ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பவை தான். அதிலும் பாசிப்பயறுக்கு முக்கிய இடம் உண்டு. ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்கும் இதில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைடிரேட் மற்றும் இரும்புச்சத்தும் ஆகியவை அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் நிறைந்துள்ள பாசிப்பயறு, எளிதாக செரிமானம் ஆகும் என்பதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்த ஊட்டச்சத்து உணவாக இருக்கும். 

Add Zee News as a Preferred Source

புரதச் சுரங்கம் என அழைக்கப்படும் சைவ உணவு

சைவ உணவு உண்பவர்களுக்கு இது புரதச் சுரங்கம் எனலாம். தினமும் இதனை சாப்பிடுவதன் மூலம் புரோட்டீன் குறைபாட்டைப் போக்கலாம். சிக்கன் மற்றும் மட்டனை விட பாசிபயறில் அதிக புரதம் உள்ளது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிக அளவு புரதச்சத்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ஆரோக்கியமாக (Health Tips) வைத்திருக்கிறது.

அசைவத்தை விட புரதம் அதிகம் கொண்ட பருப்பு

பஞ்சாப், பாபா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பி.ஏ.எம்.எஸ்., டாக்டர் பிரமோத் ஆனந்த் திவாரி, பாசிப்பயறில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் அதில் உள்ள சத்துக்கள் குறித்து விளக்கும் போது, ​​பாசிப்பயறை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை உட்கொள்ள வேண்டும் என்றார். அசைவத்தை விட இந்த பருப்பில் அதிக புரதம் உள்ளது என்கிறார்.

தசைகளுக்கு நன்மை பயக்கும் பாசிப்பயறு

டாக்டர் திவாரி மேலும் கூறுகையில், " பாசிப்பயறை உட்கொள்வதால் தசைகள் மட்டுமின்றி எலும்புகளும் வலுவடையும். போதுமான அளவு புரதம், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி, பி6, ஃபோலேட், தாமிரம், துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதில் உள்ளன, இது உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார்

திசுக்களில் ஏற்படும் பாதிப்பை சீர் செய்யும்

"பச்சைப்பருப்பை உட்கொள்வது பாதிப்பை திசுக்களை விரைவாக சரிசெய்ய உதவுகிறது. அதில் உள்ள நார்ச்சத்து காரணமாக, செரிமான அமைப்பு சரியாக வேலை செய்கிறது. உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இது செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்காது, அதேசமயம் நாம் சிக்கன் மற்றும் மட்டன் சாப்பிட்டால், ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்."

மலச்சிக்கல் மற்றும் கொலஸ்ட்ராலில் இருந்து நிவாரணம்

பாசி பயறை உட்கொள்வதன் மூலம், பல பிரச்சனைகளுக்கு விடை கொடுக்க முடியும் என்று டாக்டர் பிரமோத் ஆனந்த் திவாரி நம்புகிறார். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், இதயத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பருப்பு வகைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன, அவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க அனுமதிக்காது. அதன் நுகர்வு மிகவும் எளிமையானது. காலை உணவாக எடுத்துக் கொள்வதைத் தவிர, எல்லா நேரங்களிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

உடல் எடை குறைய உதவும் பாசிப்பயறு

பாசிப்பயறு அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் கொண்டதால் உடல் பருமனை குறைக்க சிறந்த தேர்வு. இதனை தோசை, இட்லி, கூட்டு, பொரியல் என பல வடிவில் சமைத்து சாப்பிடலாம். முளை கட்டிய பாசி பயறு இதை விட சிறந்தது. ஏனெனில் அதன் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகிறது. 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | கார்போஹைட்ரேட்: வில்லனாக பார்க்காதீங்க... இவரும் ஹீரோ தான்... 5 நன்மைகள் இதோ

மேலும் படிக்க | மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, வயிறு வீக்கம் அனைத்துக்கும் இந்த ஒரே மருந்து நிவாரணம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News