இன்றைய காலகட்டத்தில், நவீன வாழ்க்கை முறை காரணமாக முதியவர்களை விட இளையவர்கள் அதிக அளவில் ஆரோக்கிய பாதிப்பை கொண்டுள்ள நிலையை காணலாம். முக்கியமாக இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக இறக்கும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாத ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை.
ஜாகிங் என்னும் ஓடும் பயிற்சி
நடைப்பயிற்சி மிகச்சிறந்த உடற்பயிற்சி என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. எனினும் இளைஞர்கள், நடைபயிற்சியை விட ஜாகிங் என்னும் ஓடும் பயிற்சியை மேற்கொண்டால், அதிக கலோரிகள் எரிக்கப்படுவது மட்டுமின்றி, இதயம், கல்லீரல், தசைகள் ஆகியவை வலுவாக இருக்கும். அதற்கு அதிகம் அல்ல தினம் 30 நிமிட ஜாகிங் பயிற்சி போதும் என்கின்றனர் நிபுணர்கள்.
தினம் 30 நிமிட ஜாகிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்
1. ஜாக்கிங் சிறந்த கார்டியோ வாஸ்குலர் பயிற்சியாக கருதப்படுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மாரடைப்பு போன்ற இதய நோய் அபாயத்தை குறைக்கவும், கொலஸ்ட்ராலை எரிக்கவும் தினமும் 30 நிமிட ஜாகிங் பயிற்சி பெரிதும் உதவும்.
2. ஜாகிங் பயிற்சி அதிக கலோரிகளை எரிக்கும் திறன் கொண்டதால், கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் எடை மிக விரைவாக குறையும்.
3. ஜாகிங் பயிற்சி உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்சனைகளின் ஆபத்து பெருமளவு குறையும். ரத்த நாளங்கள் விரிவடைவதால், ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
4. ஜாகிங் பயிற்சி, இதயத்தை மட்டுமல்லாது நுரையீரலையும் வலுப்படுத்துகிறது. சுவாசப் பிரச்சினைகள் குணமாக உதவும் ஜாகிங் பயிற்சி, உடல் முழுவதற்கும் ஆக்ஸிஜனை வழங்கி, ஆற்றலை அதிகரிக்கிறது.
5. எலும்பு ஆரோக்கியம் மேம்பட ஜாகிங் பயிற்சி உதவும். மூட்டுகள் வலுவாவதுடன், வயது ஏறுவது காரணமாக ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் வராமல் தடுக்க உதவும்.
6. தினமும் ஜாகிங் பயிற்சி செய்வதால் தசைகள் வலுவாகும். நாம் ஓடும் போது, உடலில் உள்ள அனைத்து தசைகளும் வேலை செய்கின்றன. இதனால் நமது தசைகள் வலுவாக இருக்கும்.
7. மன ஆரோக்கியம் மேம்படவும் ஜாகிங் பயிற்சி உதவுகிறது. மன சோர்வு, மனப்பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விலக தினமும் ஜாகிங் பயிற்சி செல்வது பயனளிக்கும். ஜாகிங் பயிற்சி மூலம், மூளையில் மகிழ்ச்சி உணர்வை கொடுக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படுவதால், நமது மனநிலை மேம்படுகிறது.
8. ஜாகிங் பயிற்சி மேற்கொள்வதால், ஆற்றல் அளவு அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அதிகரிப்பதால், நாள் முழுவதும் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.
9. செரிமான ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கவும் ஜாகிங் பயிற்சி உதவும். உணவு நன்றாக செரிமானம் ஆகி, ஜீரண பிரச்சனைகளை ஓட விரட்ட தினமும் ஜாகிங் செய்யவும்.
10. தூக்கமின்மை பிரச்சனை நீங்கவும் ஜாகிங் பயிற்சி உதவும். தூக்கமின்மைக்கு முக்கிய காரணமான மனசோர்வு நீங்குவதும் இதற்கு முக்கிய காரணம். அதோடு நல்ல உழைப்பின் காரணமாக ஏற்படும் சோர்வினால், நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | ஒரே சமையல் எண்ணெய் பலமுறை பயன்படுத்துவாரா? இந்த ஆபத்து உங்களை நெருங்கிவிடும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









