கொலஸ்ட்ரால் முதல் ஆஸ்டியோபோரோசிஸ் வரை... முளைகட்டிய ராகியின் வியக்க வைக்கும் பலன்கள்

இந்தியாவின் சிறந்த பாரம்பரிய உணவுகளில் முதலிடம் பிடித்துள்ள ராகி என்னும் கேழ்வரகு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதிலும் இதனை முளைகட்டி பயன்படுத்துவதால், கிடைக்கும் நன்மைகளை பட்டியலாகவே போடலாம். 

Last Updated : Mar 19, 2025, 10:48 AM IST
  • முளை கட்டிய ராகியில் புதைந்திருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்.
  • கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட சிறந்த உணவு.
  • கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும் அற்புத உணவு.
கொலஸ்ட்ரால் முதல் ஆஸ்டியோபோரோசிஸ் வரை... முளைகட்டிய ராகியின் வியக்க வைக்கும் பலன்கள்

கேழ்வரகு என்னும் ராகி சிறு தானியங்கள் என்று ராணி என்று அழைக்கப்படுகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம் வைட்டமின்கள், நார்ச்சத்து என அனைத்தும் நிறைந்துள்ளது. ஊட்டச்சத்தின் களஞ்சியம் ஆன இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள இதில், புரதத்தின் முக்கிய அம்சமான எலோசனின் நிறைந்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

முளை கட்டிய ராகியில் புதைந்திருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்

இந்தியாவின் சிறந்த பாரம்பரிய உணவுகளில் முதலிடம் பிடித்துள்ள ராகி என்னும் கேழ்வரகு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதிலும் இதனை முளைகட்டி பயன்படுத்துவதால், கிடைக்கும் நன்மைகளை பட்டியலாகவே போடலாம். ஏற்கனவே ஊட்டச்சத்தின் களஞ்சியம் தான். அதிலும் முளை கட்டுவதால், அதன் ஊட்டச்சத்தின் மதிப்புகள் இரட்டிப்பாகிறது. அதோடு ஜீரணிக்க எளிதான உணவாக ஆகிறது. 

கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட சிறந்த உணவு

இதய ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம். இதற்கு முளைக் கட்டிய ராகி பெரிதும் உதவும். கொலஸ்ட்ராலை போலவே மிகவும் ஆபத்தான ட்ரைட்ல சார் ரெய்டுகளை நீக்கவும் ஆகி உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, புரதச்சத்து கெட்ட கொழுப்பை எரித்து, மாரடைப்பு மற்றும் இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

எலும்புகளை வலுப்படுத்தும் அற்புத உணவு

மற்ற தானிய மாவுடன் ஒப்பிடும்போது, ​​ராகி மாவில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. இதனுடன், கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுப்பதற்கும் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

இரத்த நாளங்களை சுத்தம் செய்யும் சிறந்த உணவு

உடலில் ரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால், உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும். மூளையும் சுறுசுறுப்பாக வேலை செய்யும். இதற்கு முளைகட்டிராகி பெரிதும் உதவும். இதில் உள்ள அமினோ அமிலங்கள், ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றன. அதிலும் காலை உணவில் இதனை உட்கொண்டால், நாள் முழுவதும் ஆற்றல் குறைவில்லாமல் இருக்கும்

நீரிழிவு என்னும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு

நீரிழிவு நோயாளிகளுக்கு ராகி உணவுகள் சிறந்த தேர்வாக இருக்கும். இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க, ராகி மாவை தினமும் சாப்பிடுவது நல்லது. ராகியில் அதிக அளவில் பாலிபினால்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. காலை உணவு முதல் இரவு உணவு வரை ராகியை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

மன அழுத்தத்தை போக்கும் உணவு

இன்றைய துரித கதியிலான வாழ்க்கையில், மன அழுத்தம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு பொதுவான அங்கமாக மாறி விட்டது. ராகியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மைக்கு முளை கட்டிய ராகி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவு

முளை கட்டிய ராகியில் லெசித்தின் மற்றும் மெத்தியோனின் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. இது கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை நீக்கி கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது மட்டுமின்றி, ராகியில் உள்ள அமினோ அமிலமான த்ரோனைன் கல்லீரலில் கொழுப்பு உருவாவதை தடுக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது.

இரத்த சோகையை போக்கும் உணவு

முளை கட்டிய ராகியில் நிறைந்திருக்கும் இரும்பு சத்து இரத்த சோகையை போக்கும். உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் ராகியை அடிக்கடி சாப்பிடுங்கள். ராகியை முளை கட்டி சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி அளவு அதிகரிக்கும். வைட்டமின் சி சத்து, உடல் இரும்புச்சத்தினை அதிக அளவில் கிரகித்து கொள்ள உதவும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | தினமும் இதை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

மேலும் படிக்க | குழந்தைக்கு இன்னும் ஒரு வயதாகவில்லையா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News