தினம் வெறும் வயிற்றில் 4 - 5 துளசி இலைகள் போதும்... உச்சி முதல் பாதம் வரை அருமருந்து

இந்து மதத்தில் தெய்வமாக வணங்கப்படும் துளசியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அதனால் தான் ஆயுர்வேதத்தில், துளசி செடி ஒரு வரமாகவும் அருமருந்தாகவும் கருதப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2025, 02:57 PM IST
  • துளசி இலைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
  • துளசியின் மருத்துவ குணங்கள் குறித்த ஆய்வு.
  • ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்.
தினம் வெறும் வயிற்றில் 4 - 5 துளசி இலைகள் போதும்... உச்சி முதல் பாதம் வரை அருமருந்து

இந்து மதத்தில் தெய்வமாக வணங்கப்படும் துளசியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அதனால் தான் ஆயுர்வேதத்தில், துளசி செடி ஒரு வரமாகவும் அருமருந்தாகவும் கருதப்படுகிறது. துளசியின் இலைகள் மட்டுமல்லாது, அதன் பூக்கள், தண்டுகள், வேர்கள் மற்றும் விதைகள் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை.

Add Zee News as a Preferred Source

துளசி இலைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

துளசி இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி, கே, மெக்னீசியம், பொட்டாசியம், கால்ஷியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அதோடு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிப்பு பண்புகள் உள்ள இதனை முறையாக பயன்படுத்தினால், பல நோய்களை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.  துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன, எப்போது, ​​​​எப்படி சாப்பிடலாம் என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

துளசியின் மருத்துவ குணங்கள் குறித்த ஆய்வு

துளசி, பல நோய்களைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பதோடு, சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என விஞ்ஞான ஆராய்ச்சிகள் பல கூறுகின்றன. துளசியின் மருத்துவ குணங்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்

சர்வதேச மருந்து அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, துளசி இலைகளில் யூஜெனால், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் காணப்படுகின்றன, இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். இது தவிர, மன அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவியாக இருக்கும். துளசியில் உள்ள கூறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

வலுவான நோய் எதிர்ப்பு சக்தியுடன், மன அழுத்தத்திலிருந்து நிவாரணம்

துளசி இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைவதோடு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. துளசி உட்கொள்வது உடலில் உள்ள கார்டிசோல் (அழுத்த ஹார்மோன்) அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது உங்கள் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கிறது.

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு

துளசியை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து, ரத்த அழுத்தத்தை சமப்படுத்துகிறது. துளசி சாறு சரும பிரச்சனைகளை நீக்கி முடியை வலுவாக்கும்.

துளசி இலைகளை உட்கொள்ளும் சரியான முறை

துளசி இலைகளை பல வழிகளில் உட்கொள்ளலாம் என்றாலும், காலையில் வெறும் வயிற்றில் 4 முதல் 5 துளசி இலைகளை மென்று சாப்பிடுவது சரியான முறை. இதன் மூலம், முழுமையான பலனை அடையலாம். இது தவிர, துளசி இலையை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயமாக செய்து குடிக்கலாம். துளசி இலைகளை வெந்நீரில் ஊறவைத்து அதனை, வடிகட்டி குடிக்கலாம். துளசி இலை பொடியை தாயாரித்து வைத்துக் கொண்டு தண்ணீரில் கலந்தும் உட்கொள்ளலாம். 

துளசி ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, அறிவியல் பார்வையில் ஒரு வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4-5 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் பல வகையான நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மாதவிடாய்: கோடை வெயிலில் எப்படிச் சமாளிப்பது? பெண்களின் வலியை புரிந்துகொள்ளும் ஒரே பொருள்!

மேலும் படிக்க | வெயில் காலத்தில் சந்திக்கும் 5 முக்கிய பிரச்சனைகள்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News