வேர்க்கடலையை ஏழைகளின் பாதாம் என்று அழைப்பது போல், வாழைப்பழத்தினை ஏழைகளுக்கான அற்புத பழம் என்று கூறலாம். எல்லா கால நிலைகளிலும் கிடைக்கும் சிறந்த பழங்களில் ஒன்றான வாழைப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் ஏராளம். இதில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து வைட்டமின் பி6 ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மன அழுத்தத்தை போக்குவது முதல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை, இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். இதைப் பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் அடங்கியுள்ள எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்
வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு பழத்திற்கும் தனிப்பட்ட சுவை உண்டு. எல்லோருக்கும் பிடித்த பழங்களில் ஒன்றான வாழைப்பழம், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்பதோடு, இதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களும் ஏராளம். இதனால் தினமும் வாழைப்பழம் சாப்பிடும்படி, மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.
1. வாழைப்பழங்களில் உள்ள டிரிப் டோன், மகிழ்ச்சியை கொடுக்கும் ஹார்மோன்களான செரோட்டானின் உற்பத்திக்கு உதவுகிறது. இது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்து மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.
2. வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் உள்ளதால் மெலடோனின் என்று ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து, தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது. நல்ல ஆழ்ந்த தூக்கம், பல்வேறு நோய்களுக்கான அருமருந்தாக உள்ளது என்பதை மறுக்க இயலாது.
3. செரிமான ஆரோக்கியம் மேம்பட வாழைப்பழம் பெரிதும் உதவும். ஏனெனில் குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாக்டீரியா வாழைப்பழம் உதவுகிறது. இதனால் மலச்சிக்கல், அசிடிட்டி உள்ளிட்ட அஜீரண பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம்.
4. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால் மாரடைப்பு பக்கவாதம் உள்ளிட்ட ஆபத்துக்கள் பெருமரகு குறைகின்றன.
5. வாழைப்பழத்தில் இரும்பு சத்து இருப்பதால் ரத்த சோகை நீங்கவும் இதனை சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
6. வாழைப்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கக் கூடியது. இதனால் உடல் சோர்வு நொடியில் நீங்கும்.
7. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான அபாயத்தை பெருமளவு குறைக்கிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
8. வாழைப்பழங்களில் உள்ள கிளைக்கோஜன், தசை பிடிப்பு நீங்க உதவுகிறது.
நாளொன்றுக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம்?
நாள் ஒன்றுக்கு ஒன்று முதல் மூன்று வாழைப்பழங்களை சாப்பிடலாம். சிறிய அளவிலான பழங்கள் என்றால் நான்கு சாப்பிடலாம். வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து அருந்துவதாலும் நல்ல பலன்களை பெறலாம். இதன் மூலம் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்களையும், வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் ஒருங்கி பெற்று, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். உணவே மருந்து என்ற முன்னோர் பழமொழிக்கு ஏற்ப, தினமும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால், நோயற்ற வாழ்வை எல்லாம் என்பதை மறுக்க இயலாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க... தொப்பை கரைய... கடைபிடிக்க வேண்டிய 7 எளிய கட்டளைகள்
மேலும் படிக்க | மூளையை சூப்பர் கம்ப்யூட்டர் போல் வேலை செய்ய வைக்கும் வால்நட்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









