மாம்பழம் பிரியர்களே.. மாம்பழத்தில் எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா!

Mango Health Benefit: மாம்பழம் சுவையாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். எனவே மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2025, 09:42 PM IST
  • உடல் எடையைக் குறைக்க உதவும்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
  • செரிமானம் நன்றாக நடக்கிறது
மாம்பழம் பிரியர்களே.. மாம்பழத்தில் எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா!

Health Benefits of Eating Mango: கோடை காலம் வந்துவிட்டது. மாம்பழ விற்பனையும் துவங்கிவிட்டது. பொதுவாக கோடை கால துவக்கம் முதலே, மக்கள் மாம்பழத்திற்காக காத்திருக்கத் தொடங்குகிறார்கள். பழுத்த அழகான மற்றும் இனிப்பு மாம்பழங்களை சாப்பிட ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது. மாம்பழம் சுவையாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். எனவே இந்த கோடையில் அனைவரும் மாம்பழத்தை உட்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பு இந்த பதிவில் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை என்ன என்பதிகௌ தெரிந்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source

உடல் எடையைக் குறைக்க உதவும்: உடல் எடையைக் குறைக்க மாம்பழம் ஒரு நல்ல மருந்தாக உதவும். ஏனெனில் மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைக்க உதவும். மாம்பழத்தை சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதன் காரணமாக அடிக்கடி தேவையற்ற திண்பண்டங்களை சாப்பிடுவது தவிர்க்கப்படும்.

ஞாபக சக்தி அதிகரிக்கும்: ஞாபக மறதி உள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிடலாம். இந்த பழத்தில் இருக்கும் குளுட்டமைன் அமிலம் என்ற தனிமம் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். மேலும், இதனால், இரத்த அணுக்களும் நன்றாக செயல்படுகின்றன. எனவே மாம்பழம் சாப்பிடுவதால் மூளை மற்றும் உடல் சுறுசுறுப்பு பெறுகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், மாம்பழத்தை கட்டாயம் உட்கொள்ளுங்கள், இதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம். 

சரும அழகு மேம்படும்: மாம்பழத்தை கூழ் வடிவில் செய்து அவற்றை முகத்தில் பேக் போடுவதாலும் அல்லது அதைக்கொண்டு முகத்தை தேய்ப்பதாலும், முகபொலிவு மேம்படுகிறது. மேலும், இதிலுள்ள வைட்டமின் சி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

செரிமானம் நன்றாக நடக்கிறது: மாம்பழத்தில் புரதங்களை உடைக்க வேலை செய்யும் பல நொதிகள் உள்ளன. இதன் காரணமாக உணவு விரைவாக செரிக்கப்படுகிறது. இதனுடன், இதில் உள்ள சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், உடலில் உள்ள காரத் தனிமங்களை சமநிலையில் வைக்கிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது: மாம்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெருங்குடல் புற்றுநோய், லுகேமியா மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களைத் தடுப்பதில் நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மறந்தும் இந்த 7 பேர்கள் இந்த உணவு பக்கம் மட்டும் போகவே போய்டாதீங்க..மீறிச் சாப்பிட்டால் மோசமான ஆபத்து!

மேலும் படிக்க | குழந்தைப் பெற்ற பின் உடம்பு காற்றுபோல் ஊதிவிட்டதா..தினமும் இதை செய்தால் பழைய உடம்பு மீண்டும் வந்துவிடும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News