ஆண்மை பிரச்சனை முதல் நரம்பு தளர்ச்சி வரை... தினம் ஒரு கைப்பிடி முருங்கை கீரை போதும்

Superfood Murungai Kerai: பொதுவாகவே அனைத்து வகை கீரைகளுமே ஊட்டச்சத்துக்கள் மற்றுக் தாதுக்களின் சுரங்கம் என்று சொல்லலாம். அதிலும், முருங்கை கீரையில் 46 ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் இருக்கின்றன என  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 26, 2025, 01:03 PM IST
  • முருங்கை கீரையை சாப்பிட்டால் 6 குதிரையின் பலம் கிடைக்கும்
  • முருங்கை கீரையில் உள்ள அழற்சி எதிர்ப்பு கலவைகள் உடல் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
  • உடல் பருமனை குறைக்க விரும்புவோருக்கு முருங்கை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
ஆண்மை பிரச்சனை முதல் நரம்பு தளர்ச்சி வரை...  தினம் ஒரு கைப்பிடி முருங்கை கீரை போதும்

முருங்கையை பற்றி கிராமங்களில் குறிப்பிடும் போது,  'ஒரு எருதும் ஒரு முருங்கை மரமும் இருந்து விட்டால் போதும் எந்த வித வறட்சியையும் சமாளித்துவிடலாம்' என்று கூறுவார்கள். இதன்மூலம் இதன் மகிமையை அறிந்து கொள்ளலாம்.  முருங்கைக்கீரை, சத்துக்கள் அதிகம் கொண்ட கீரைகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. 

Add Zee News as a Preferred Source

பொதுவாகவே அனைத்து வகை கீரைகளுமே ஊட்டச்சத்துக்கள் மற்றுக் தாதுக்களின் சுரங்கம் என்று சொல்லலாம். அதிலும், முருங்கை கீரையில் 46 ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் இருக்கின்றன என  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டி ஆக்ஸிடெண்டுகள், உடலில் உள்ள செல் அழிவை குறைத்து இளமையோடு இருக்க உதவும்.  முருங்கை கீரைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்த்துக் கொண்டால், போதும், நரம்பு தளர்ச்சி முதல் ஆண்மை பிரச்சனை வரை பல விதமான உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வைக் காணலாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மூலிகை மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், வீக்கம் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் சுமார் 90 உயிரியக்க தாவர கலவைகள் இதில் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். முருங்கை கீரையின் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றியும், அதனை தினமும் ஒரு கைப்பிடி உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.

முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள்

முருங்கை கீரையில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, கால்சியம், பொட்டாசியம், இரும்பு, போலிக் அமிலம்,  மெக்னிசியம்,  நுண்ணூட்டச்சத்துக்கள் பீட்டாகரோட்டின், மற்றும் புரதம் உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. 

நரம்பு ஆரோக்கியம்

முருங்கை கீரையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பணபுகள் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மூளையின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. நியூரோடிஜெனரேட்டிவ் நோய்கள் என்னும் நரம்பியல் சார்ந்த நோய்களையும் நரம்பு தளர்ச்சியையும் நீக்க முருங்கை கீரை பெரிதும் உதவும் என ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன.

ஆண்மை பிர்ச்சனை

தினம் ஒரு கை முருங்கை கீரையை சாப்பிட்டால் 6 குதிரையின் பலம் கிடைக்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். உடல் பலவீனத்தால், தாம்பத்திய உறவில் நாட்டல் இல்லாதவர்கள், விந்தணு எண்ணிக்கை மற்றும் தரம் குறைவாக உள்ளவர்கள், உடல் வலுப்பெற முருங்கை கீரையை தினமும் சாப்பிட்டு வருதல் பலன் தரும். 

மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் உணவு

முருங்கை கீரையில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் உள்ளிட்ட அழற்சி எதிர்ப்பு கலவைகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. நாள்பட்ட வீக்கம், யூரிக் அமில பிரச்சனை, கீல்வாதம் போன்ற பல  பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருகிறது. எலும்புகளை வலுப்படுத்தி, கீல்வாதம், மூட்டு வலி, முழங்கால் வலி ஆஸ்டியோபோரோஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட காய்கறி

கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட முருங்கை கீரை, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவும். இவை இரண்டும் கட்டுக்குள் இருந்தால் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.  மேலும் இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களின் இருதய நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை போக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சிறந்த கீரை

முருங்கைக் கீரை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அற்புத உணவு. குளோரோஜெனிக் அமிலம் எனப்படும் நிறமி இதில் இருப்பதால், முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது  சுகர் லெவல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். 

செரிமானத்தை மேம்படுத்தும் உணவு

முருங்கை கீரையில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவும். இது குடல் பாக்டீரியாவை சமநிலைப்படுத்துவதன் மூலம் குடலுக்கு நன்மை அளிக்கிறது மற்றும் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் அஜீரணத்தை குறைக்க உதவுகிறது.

சிறந்த வெயிட் லாஸ் உணவு

உடல் பருமனை குறைக்க விரும்புவோருக்கு முருங்கை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. அதனுடன், இதில் குளோரோஜெனிக் அமிலம் மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், சிறந்த வெயிட் லாஸ் டயட் ஆக இருக்கும்.

உணவில் சேர்க்கும் எளிய முறை

முருங்கை கீரையை பொரியல், கூட்டு வகைகள், குழம்பு என பல வகைகளில் சுவையாக சமைத்து உண்ணலாம். தினமும் பிரெஷ்ஷாக சமைக்க இயலாதவர்கள், முருங்கை கீரையை சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

1. முருங்கை கீரை தூளை புதிய பழச்சாறு, காய்கறி சாறு அல்லது வெற்று நீரில் கூட  எலுமிச்சை கலந்து பருகலாம்.

2. உங்கள் சாலட் அல்லது அரசி அல்லது தானிய உணவுகளில் ஒரு சிறிய அளவு முருங்கை கீரை பொடியை சேர்க்கலாம்.

மேலும் படிக்க | மாதவிடாய்க்குப் பிறகு எந்த நாட்களில் கருத்தரிப்பு வாய்ப்பு அதிகம்? பாதுகாப்பான நாட்கள் எவை?

மேலும் படிக்க | ஏழைகளின் ஆப்பிள் என்னும் பேரிக்காய்... குறைத்து மதிப்பிடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News