காளான்கள் ஊட்டச்சத்தின் களஞ்சியம் மட்டுமல்லாது மருத்துவப் பண்புகளும் நிறைந்துள்ள அற்புத உணவு. சைவ உணவு மற்றும் அசைவ உணவு பிரியர்கள் இருவருக்கும் காளான் விருப்ப உணவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். கொலஸ்ட்ரால், ரத்த சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்த பிரச்சனை, உடல் பருமன் போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு காளான் சிறந்த டயட் தேர்வாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் ஆற்றல் காளானில் உண்டு.
காளானில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
காளானில் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, துத்தநாகம், செலினியம், அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஏராளமாக உள்ளது. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் வைரஸ் தொற்று முதல் புற்றுநோய் வரை பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
காளானில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற பாதிப்புகள் தடுக்கப்படுவதோடு, இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
மூளை திறனை மேம்படுத்தும் காளான்
காளான்கள் நரம்பிய கடத்தியின் செயல்பாட்டை தூண்டுவதன் மூலம் மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது. அதோடு நினைவாற்றலை மேம்படுத்தும் ஆற்றல் கொண்ட காளான், வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் போன்ற நோய் வராமல் தடுக்கிறது. மேலும் மூளையில் ஏற்படும் வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஆகியவற்றை போக்கி மூளை ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.
எலும்பு ஆரோக்கியம் மேம்படும்
எலும்பு ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி காளானில் நிறைந்துள்ளது. எனவே இது எலும்புகளுக்கு ஏற்ற அற்புத உணவு. ஆஸ்டியோ புரொசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய்முதல், மூட்டு வலி வரை அனைத்திற்கும் தீர்வைத் தரும் அற்புத உணவாக காளான் இருக்கும்.
உடல் எடையைக் குறைக்கும் காளான்
நார்ச்சத்து தவிர, பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் போன்ற பல உயிரியல் கூறுகள் காளானில் காணப்படுகின்றன. இது, உடல் எடையையும் தொப்பை கொழுப்பையும் குறைக்கிறது. இதில் உள்ள கலோரிகளும் மிகவும் குறைவு என்பதால், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
செல்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்கும் காளான்
காளானில் அதிக அளவு செலினியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் செல் சேதத்தை தடுக்க பெரிதும் உதவுகிறது. ஏனெனில், காளானில் உள்ள வைட்டமின் டி சத்து உயிரணு வளர்ச்சிக்கு உதவும். காளானில் உள்ள விட்டமின் பி6 ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது.
மேலும் படிக்க | வயிற்றுப் புண் முக்கிய அறிகுறிகள்..! சரி செய்வது எப்படி? முக்கிய தகவல்
புற்று நோயை தடுக்கும் காளான்
காளானின் நிறைந்துள்ள மருத்துவ பண்புகள் காரணமாக, சீனா, ஜப்பான் போன்ற சில நாடுகளில் இவை புற்றுநோய் சிகிச்சையில் துணைப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. தினமும் காளான் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் 45 சதவீதம் குறைவாக உள்ளது என்பது ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு புற்று நோய்க்கான கீமோதெரபி என்னும் கதிர்வீச்சு சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் குமட்டல், எலும்புகள் வலுவை இழத்தல், தூக்கமின்மை போன்ற பாதிப்புகளை குறைக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... தினம் ஒரு கைப்பிடி முளைகட்டிய கொண்டைக்கடலை...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









