பப்பாளி விதை என்னும் சிறந்த ஆயுர்வேத மருந்து... இதை அறிந்தால் தூக்கி எறியவே மாட்டீங்க

Papaya Seeds Benefits: பப்பாளி பழம் பல வகைகளில் ஆரோக்கிய நலன்களை அள்ளித் தரக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று பப்பாளி விதையிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 13, 2025, 12:27 PM IST
  • கல்லீரல் ஆரோக்கியம் முதல் ஆரோக்கியம் வரை பல வகைகளில் பலனளிக்கும் பப்பாளி விதை
  • பப்பாளி விதையின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்.
  • மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவும் பப்பாளி விதை.
பப்பாளி விதை என்னும் சிறந்த ஆயுர்வேத மருந்து... இதை அறிந்தால் தூக்கி எறியவே மாட்டீங்க

பப்பாளி பழம் பல வகைகளில் ஆரோக்கிய நலன்களை அள்ளித் தரக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று பப்பாளி விதையிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பொதுவாக நாம் பப்பாளி பழத்தை சாப்பிட்டு விட்டு அதனை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் இந்த செய்தியை முழுமையாக படித்தால், இனி பப்பாளி பழம் சாப்பிட்ட பிறகு, அதன் விதையை தூக்கி எரிய நீங்கள் தயங்குவீர்கள் என்பது நிச்சயம்.

Add Zee News as a Preferred Source

பப்பாளி விதையின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்

கல்லீரல் ஆரோக்கியம் முதல் ஆரோக்கியம் வரை பல வகைகளில் பலனளிக்கும் பப்பாளி விதையின் ஆரோக்கிய நலன்களை பற்றியும், அதை உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை குறித்தும், இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கல்லீரலுக்கு புத்துயிர் கொடுக்கும் பப்பாளி விதை

பப்பாளி விதைகளில் அடங்கியுள்ள பல மருத்துவ குணங்கள், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் பெற்றவை. மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், ஃப்ரீரேடிக்கல்களால் கல்லீரலில் ஏற்படும் சேதத்தை தடுத்து பாதுகாப்பதுடன், புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது என்கின்றனர் (Health Tips) ஆயுர்வேத நிபுணர்கள்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் பப்பாளி விதை

பப்பாளி விதைகளில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் மற்றும் ஃப்ளவநாய்டுகள் இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சுகர் லெவலை கட்டுப்படுத்த செரிமானம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவும் பப்பாளி விதை

ஆளி விதைகளில் உள்ள ஒலிக் அமிலம், இதயத்திற்கு நன்மை பயக்கும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து பெருமளவு குறைகிறது. மேலும் கொழுப்பை எரிக்கும் ஆற்றலும் உண்டு. இதனால் உடல் பருமனும் கட்டுக்குள் இருக்கும்.

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் பப்பாளி விதை

பப்பாளி விதைகள் ஒரு இயற்கையான டேட் ஆஃப் பண்பு நிறைந்தவை என நிபுணர்கள் கூறுகின்றனர். சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் நீக்கப்பட்டு, சிறு செயல் திறன் மேற்படுவதோடு, கிட்னியில் ஏற்படும் தொற்று, வீக்கம் ஆகியவற்றைப் போக்கவும் மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக இது இருக்கும்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பப்பாளி விதை

பொதுவாக குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலே, உடல்நல பிரச்சனைகள் பலவற்றை தவிர்த்து விடலாம். பப்பாளி விதைகளில் உள்ள கார்பீன் என்ற தனிமம், குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் பெருக உதவுகிறது. இதனால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.

மலச்சிக்கலுக்கு மருந்தாகும் பப்பாளி விதை

பப்பாளி மட்டுமல்ல பப்பாளி விதைகளும் மலச்சிக்கலுக்கு மருந்தாகின்றன. இதில் உள்ள மலமிளக்கி பங்குகள் மற்றும் பப்பேன் என்னும் கரையும் நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறது.

மூட்டு வலியை போக்கும் பப்பாளி விதைகள்

மூட்டு வலி முழங்கால் வலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நபர்கள் பப்பாளி விதைகளை எடுத்துக் கொள்வதால் நிவாரணம் பெறலாம். எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பிளவனாய்டுகள், பாலிஃபினால்கள், அல்கலாய்டுகள் ஆகியவை அதிகம் இருப்பதே இதற்கு காரணம்.

பப்பாளி விதையை உணவில் சேர்த்துக் கொள்ளும் சில எளிய வழிமுறைகள்

1. பப்பாளி விதைகளை நன்றாக சுத்தம் செய்து காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை கஞ்சி ஜூஸ் போன்ற பானங்களில் கலந்து சாப்பிடலாம்.

2. நீர்மோர் போன்ற பானங்களிலும் பப்பாளி விதை பொடியை கலந்து சாப்பிடலாம்.

3. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் பப்பாளி விதைகளை கலந்து மருந்தை போல் உட்கொள்ளலாம். இதில் சிறு சிறிதளவு கசப்பு தன்மை காணப்படுவதால், ஜூஸ் கஞ்சி போன்றவற்றில் கலப்பதை விட, தனியாக சாப்பிடுவது ஒரு வகையில் நல்லது.

பப்பாளி விதை பக்க விளைவுகள்

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். இதற்கு பப்பாளி விதையும் விதிவிலக்கு அல்ல. இதனை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. சில சமயங்களில் கல்லீரலுக்கும் சேதம் ஏற்படலாம். அதோடு கர்ப்பிணிகள் இதனை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மாம்பழ பிரியர்கள் கவனத்திற்கு... மாம்பழத்துடன் சாப்பிட கூடாத சில உணவுகள்...

மேலும் படிக்க |இந்தியாவில் ஆண்களுக்கு அதிகம் வரும் டாப் 5 கேன்சர்! என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News