Patanjali Medicines: இன்றைய நவீன உலகில், உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க மக்கள் இயற்கையான, பாதுகாப்பான வழிகளை நாடுகிறார்கள். இதில் பதஞ்சலி ஆயுர்வேத சிகிச்சை ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பதஞ்சலியின் தயாரிப்புகள் பழமையான ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தை நவீன காலத்தின் தேவைகளுடன் இணைத்து வருகின்றன. இந்த பிராண்டு ஆயுர்வேதத்தின் பாரம்பரிய அம்சங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதோடு,இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு அதை மாற்றியமைத்துள்ளது.
ஒட்டுமோத்த ஆரோக்கியத்தை பேணிக்காக்க, பதஞ்சலியின் மருந்துகளை உலகம் முழுவதும் உள்ள குடும்பங்கள் நம்புவதற்கான காரணம் என்ன என்பதை இங்கு புரிந்துகொள்வோம்.
இயற்கையான மற்றும் பாதுகாப்பான மூலப்பொருட்கள்
பதஞ்சலியின் தயாரிப்புகளின் மிகப் பெரிய அம்சம் அதன் இயற்கையான மற்றும் ஆர்கானிக் மூலப்பொருட்களின் பயன்பாடாகும். இங்கு ரசாயனங்களை பயன்படுத்துவதில்லை. இதனால் நமக்கு இயற்கையான மற்றும் பாதுகாப்பான சிகிச்சைகள் கிடைக்கின்றன. ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் இயற்கை பொருட்கள் மூலம் பதஞ்சலி தங்களது தயாரிப்புகளை சக்திவாய்ந்தவையாகவும் பாதுகாப்பானவையாகவும் மாற்றுகின்றன.
அஸ்வகந்தா, கிலோய், துளசி மற்றும் திரிபலா போன்ற பொருட்கள் பெரும்பாலும் பதஞ்சலி மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மூலிகைகள் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த வலிமையை மேம்படுத்துவதற்கு பெயர் பெற்றவை. இவற்றின் மூலம் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பொருட்களை பயன்படுத்த்ம் நம்பிக்கை மக்களுக்கு கிடைக்கின்றன.
பண்டைய பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பித்தல்
ஆயுர்வேதம் என்பது ஒரு பாரம்பரிய சிகிச்சை முறையாகும். இது உடல், மனது மற்றும் ஆன்மாவின் சமநிலையில் கவனம் செலுத்துகிறது. பதஞ்சலி பழமையான ஆயுர்வேத பாரம்பரியங்களை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. பதஞ்சலியின் தயாரிப்புகள் இந்த பழமையான சிகிச்சை முறையை நவீன காலத்தின் வாழ்க்கைமுறை தேவைகளுக்கு ஏற்றபடி மாற்றியுள்ளன. நோய்க்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல் அதைத் தடுக்கவும் உதவும் இயற்கை சுகாதார வழிகளை மக்களுக்கு வழங்குவதே அவர்களின் குறிக்கோள்.
இன்றைய வாழ்க்கை முறையுடன் பழைய ஆயுர்வேத மரபுகளை இணைத்து, பதஞ்சலி ஒரு பிராண்டாக மட்டும் இல்லாமல் அதை விட பெரிய இடத்தை அடைந்துள்ளது. இது பலருக்கு நம்பகமான ஆரோக்கிய துணையாக மாறியுள்ளது.
இந்திய குடும்பங்களில் பதஞ்சலி மீதுள்ள நம்பிக்கை
காலப்போக்கில், பதஞ்சலி அதன் உயர்தர மற்றும் பல செயல்பாட்டு தயாரிப்புகள் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அதன் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள், சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களிலும் எளிதாகக் கிடைக்கின்றன. கூடுதலாக, இவற்றின் மலிவு விலைகள் அவற்றை தினசரி பயன்பாட்டிற்கான ஒரு நடைமுறை தேர்வாக ஆக்குகின்றன.
மூலிகை மாத்திரைகள் முதல் செரிமான டானிக்குகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் வரை - பதஞ்சலி அனைத்து வயதினருக்கும் ஏற்ற பரந்த அளவிலான தீர்வுகளை வழங்குகிறது. பதஞ்சலி தயாரிப்புகள் இயற்கையானவையாக, நம்பகமானவையாக இருப்பதோடு இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், பல குடும்பங்கள் இப்போது பதஞ்சலி தயாரிப்புகளையே வாங்க விரும்புவதாகக் கூறுகின்றன.
மக்களின் நேர்மறையான அனுபவங்களும், வாய்மொழி கருத்துக்களும் இந்த பிராண்ட் வேகமாக வளர உதவியுள்ளன. இன்று, பதஞ்சலி தயாரிப்புகளை கிட்டத்தட்ட அனைத்து இந்திய வீடுகளிலும் காண முடியும் என்றே கூறலாம்.
சுருக்கமாக, பதஞ்சலி நிறுவனம், நவீன காலத்திலும் பண்டைய ஆயுர்வேத மருத்துவத்திற்கு மிகுந்த மதிப்பு உள்ளது என்பதைக் காட்டியுள்ளது. இயற்கை பொருட்கள், பாதுகாப்பான வைத்தியம் மற்றும் பாரம்பரிய அறிவில் கவனம் செலுத்தி, பதஞ்சலி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளது. மேலும் பல தலைமுறைகளாக இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் நம்பகமான ஒரு பெயராக பரிமளிக்கின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









