பதஞ்சலியின் ரோஜா சர்பத்: பாபா ராம்தேவ் நிறுவிய ஆயுர்வேத நிறுவனமான பதஞ்சலி, வெட்டிவேர் மற்றும் விளாம்பழ சர்பத்துடன் அதன் ரோஜா சர்பத்தின் விநியோகத்தையும் மீண்டும் அதிகரித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வெப்பத்திற்கு மத்தியில் மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே இதற்கு முக்கிய காரணம். பதஞ்சலி அதன் ஆயுர்வேத உணவு மற்றும் உயர்தர பொருட்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு பிராண்டாக உள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவப்பட்டபோது, பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் நன்மைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் தயாரிப்புகளை உருவாக்க முடிவு செய்தனர். வெறும் லாபம் மட்டும் இவர்களது இலக்காக எப்போதும் இருந்ததில்லை.
முதலில் ஆரோக்கியம், பின்னர் லாபம்
இன்று, பதஞ்சலி FMCG உலகில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பெரிய சந்தைப் பங்கையும் அதிக லாபத்தையும் கைப்பற்ற, இந்த நிறுவனம் கோகோ கோலா போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்றாலும், பதஞ்சலி மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதையே தனது லட்சியமாகத் தேர்ந்தெடுத்தது. இதன் காரணமாக இந்த நிறுவனம் ரோஜா சர்பத், வெட்டிவேர் மற்றும் விளாம்பழ சர்பத் போன்ற பானங்களை அறிமுகப்படுத்தியது. அவை கோடையில் உடலை குளிர்விப்பது மட்டுமல்லாம்ல், மலிவு விலையிலும் கிடைக்கின்றன. மேலும் இவை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கின்றன.
ரோஜா சர்பத்தின் சிறப்பு என்ன?
பதஞ்சலியின் ரோஜா சர்பத் உண்மையான ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மிகக் குறைந்த அளவு சர்க்கரையைக் கொண்டுள்ளது. இந்த சர்பத் மன அமைதியை அளிப்பதாகவும், உடலை குளிர்விப்பதாகவும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறம் மற்றும் நறுமணத்தை மட்டுமே வழங்கும் பிற சந்தை பானங்களைப் போலல்லாமல், பதஞ்சலியின் ரோஜா சர்பத் சுவையானதாக மட்டுமல்லாமல், ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றது. இதை குளிர்ந்த நீர் அல்லது பாலுடன் எளிதாகக் கலந்து குடிக்கலாம்.
ரோஜா சர்பத் குடிப்பதன் நன்மைகள் என்ன?
பதஞ்சலியின் ரோஜா சர்பத் பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ரோஜாக்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுகின்றன. அவை புதியதாகவும் நல்ல தரமாகவும் இருப்பது உறுதி செய்யப்படுகின்றது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உயர்தர சர்பத்துக்கு வழிவகுக்கிறது. ரோஜாவுடன், பிற ஆயுர்வேத மூலிகைகளும் சர்பத்தில் சேர்க்கப்படுகின்றன. இது குளிர்ச்சியான நன்மைகளை வழங்குகிறது, குறிப்பாக வெப்பமான கோடை மாதங்களில் இது உடலை குளிர்விப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.
மேலும் படிக்க | கொளுத்தும் கோடை வெப்பம்.. செயற்கை பானங்களுக்கு சவால் விடுக்கும் பதஞ்சலி பானங்கள்
மேலும் படிக்க | மண் வளம் காத்து... விவசாயிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவும் பதஞ்சலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









