மூல நோயை கட்டுப்படுத்த டயட்டில் கவனம் செலுத்துவது மிக அவசியம். சில உணவுகள் மூல நோயின் பிரச்சனைகளை அதிகரிக்கும். பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்கள், தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்து கொள்வது பிரச்சனையை தீர்க்க உதவும்.

Piles Or Hemorrhoids: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக ஏற்படும் பிரச்சனைகளில், ஒன்று மூல நோய். ஆங்கிலத்தில் பைல்ஸ் என்றும் அறியப்படும் இந்த பிரச்சனைக்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று மலச்சிக்கல். இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆசனவாயில் உள்ள நரம்புகள் வீக்கம் அடைவதோடு, ஆசன வாயின் உள்புறத்தில் அல்லது வெளிப்புறத்தில் மருக்களும் உருவாகும். இது மலம் கழிக்கும் போது வெளியேறும். மலம் கழிக்கும் போது அதிக வலி ஏற்படுதல், இரத்தப்போக்கு உண்டாகுதல், ஆசன வாயை சுற்றி வலி அல்லது வீக்கம் ஆகியவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
மூல நோயை கட்டுப்படுத்த டயட்டில் கவனம் செலுத்துவது மிக அவசியம். குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் இதனை சிறப்பாக கட்டுப்படுத்தலாம். மூல நோய்க்கு நார்ச்சத்து மற்றும் ப்ரோபயோடிக் நிறைந்த உணவுகள் நிவாரணத்தை கொடுக்க உதவும் அதே வேளையில், சில உணவுகள் மூல நோயின் பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்கள், தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்து கொள்வது பைல்ஸ் பிரச்சனையை தீர்க்க உதவும்.
மூல நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
காரமான உணவுகள்
அதிக காரம் மற்றும் அதிக அளவில் மசாலா சேர்க்கப்பட்ட உணவுகள் மூல நோய்க்கு எதிரி. இவை செரிமானத்தை பாதிப்பதோடு, குடல் இயக்கத்தின் போது ஆசன வாயில் எரிச்சல் மற்றும் இரத்தப்போக்கை அதிகரித்து, மூலநோய் தீவிரமாக்கும். மேலும் அதிக காரமான உணவுகள் குடல் பாதையில் வீக்கத்தை அதிகரிக்கும் என்பதால், மூலநோய் இருப்பவர்கள் இதற்கு நோ சொல்வது நல்லது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மைதா அதிகம் சேர்த்த துரித உணவுகள் ஆகியவற்றில் நார்ச்சத்து முற்றிலும் இல்லை. இதில் இருப்பதெல்லாம் கல்லூரிகள் மட்டுமே. எனவே இவை மலச்சிக்கலை ஏற்படுத்தி, மூலநோயை தீவிரமாக்கும். இது ரத்தப் போக்கையும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள அதிக அளவிலான உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் வீக்கத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.
ஆல்கஹால் மற்றும் காஃபின் நிறைந்த பானங்கள்
அதிக அளவிலான ஆல்கஹால் மற்றும் காஃபின் நிறைந்த பானங்கள், உடலில் நீர்ச்சத்தை போக்கி வறட்சியை உண்டாக்குகிறது. இது மூலநோயாளிகளுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கக் கூடியது. இதனால் வலி மற்றும் ரத்தப்போக்கு இரண்டும் அதிகரிக்கும். இவை கூடல ஆரோக்கியத்தை பாதித்து, பிரச்சனையை அதிகரிக்கும்.
சிவப்பிறைச்சி மற்றும் பொரித்த உணவுகள்
சிவப்பு இறைச்சி மற்றும் அதிக எண்ணெய் கொண்ட பொரித்த உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்பவை. மலச்சிக்கலை தூண்டும் இந்த உணவுகள், குடல் இயக்கத்தின் போது நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி இரத்தப்போக்கை அதிகரிக்கிறது. எனவே மூல நோயாளிகள் இதனை தவிர்ப்பது நல்லது.
மைதா உணவுகள்
மைதா அதிகரிக்கப்பட்ட மாவு. ஊட்டச்சத்து முழுவதும் நீக்கப்பட்டு வெறும் கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே இதில் எஞ்சியிருக்கும். இதை செரிமானத்தை பெரிதும் பாதித்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக ஓட்ஸ், பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ