போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போப் பிரான்சிஸ் இரட்டை நிமோனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வாடிகன் நகரில் போப் தனது இறுதி மூச்சை விட்டார். அவரது மறைவுச் செய்தி அறிந்ததும் 1.4 பில்லியன் கத்தோலிக்க சமூகம் துக்கத்தில் மூழ்கியுள்ளது. போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. நிமோனியா என்பது நுரையீரல் தொற்று ஆகும். இதில் நுரையீரலின் காற்றுப் பைகள் (அல்வியோலி) சளி, சீழ் அல்லது பிற திரவத்தால் நிரப்பப்பட்டு, சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
இரட்டை நிமோனியா என்றால் என்ன?
போப் பிரான்சிஸ் இரட்டை நிமோனியாவால் இறந்தார். நிமோனியா என்பதே ஒரு தீவிர நோயாய் தான். அதிலும், இரட்டை நிமோனியா இன்னும் தீவிரமானது. இரட்டை நிமோனியா என்பது தொற்று நுரையீரலின் இரு பகுதிகளையும் பாதிக்கிறது என்பதைக் குறிக்கிறது. இதனால், உடலுக்கு அதிக ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தும் மற்றும் குணமடைய அதிக நேரம் ஆகலாம். இந்த நோய் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளால் பரவுகிறது.
உயிரை பறிக்கும் தீவிரமான நோய்
நுரையீரல் திரவத்தால் நிரம்புவதால், சுவாசிப்பதில் பெறும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இரட்டை நிமோனியா கடுமையானது, எனவே அதன் அறிகுறிகள் மிகவும் கடுமையானதாக இருக்கலாம். சரியான நேரத்தில் சிகிச்சை பெறப்படாவிட்டால், நோய் மிகவும் தீவிரமடையக்கூடும், இதன் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் போகக் கூடும்.
5 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வத்திக்கான் படி, போப் பிரான்சிஸ் பிப்ரவரி 14 அன்று இரட்டை நிமோனியா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போப் நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் குழாயில் பாலிமைக்ரோபியல் தொற்றும் இருந்தது. போப் தொடர்ந்து 5 வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது, அதன் அறிக்கை அவரது சிறுநீரக செயலிழப்புக்கான வாய்ப்புகள் இருப்பதை உறுதிப்படுத்தியது. போப்பிற்கு குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையும் இருந்தது. மேலும், அவரது உடலில் மூச்சுக்குழாய் அழற்சி நோயின் அறிகுறிகளும் காணப்பட்டன.
இரட்டை நிமோனியாவின் அறிகுறிகள்
1. சளி மற்றும் இருமல்.
2. சுவாசிப்பதில் சிரமம்
3. மார்பில் வலி அல்லது அசௌகரியம்
4. காய்ச்சல் மற்றும் குளிர்
5. வியர்வை
6. சோர்வு அல்லது பலவீனம்
7. நடுக்கம்
8. நீல உதடுகள் அல்லது நகங்கள்
இரட்டை நிமோனியாவுக்கான சரியான சிகிச்சை என்ன?
மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின் படி நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வைரஸ் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வது. காய்ச்சல் மற்றும் வலி மருந்துகள் கொடுக்கப்படலாம். நன்றாக ஓய்வெடுங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள். தேவைப்பட்டால், ஆக்ஸிஜன் ஆதரவு அல்லது மருத்துவமனையில் அனுமதி தேவைப்படலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | Pope Francis: போப் பிரான்சிஸ் காலமானார்... சோகத்தில் ஆழ்ந்த கத்தோலிக்க மக்கள்
மேலும் படிக்க | காலை நடைப்பயிற்சி தொடங்குவதற்கு முன் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ