கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், ஆற்றலை வழங்கி, சுறுசுறுப்பாக இருக்க உதவும் உணவுகளை கட்டாயம் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுமையான கோடை காலத்தில், உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் உணவுகளை உட்கொள்வது நன்மை பயக்கும். சில உணவுகள் உங்கள் உடலை குளிர்விப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஆற்றலையும் அள்ளி வழங்கும்.
கோடையில் உடலை குளிர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க, இந்த பழங்களை நிச்சயமாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். கோடையில் உட்கொள்ள வேண்டிய 7 சிறந்த உணவுகளை பற்றி (Health Tips) அறிந்து கொள்ளலாம்.
கோடையில் உடலை குளிர்விக்கும் சில சிறந்த உணவுகள்
1. தர்பூசணி
தர்பூசணியில் சுமார் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. அதோடு சருமத்தை இளமையாக, ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. நீரிழப்பைத் தடுக்கிறது. தர்பூசணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கின்றன.
2. வெள்ளரிக்காய்
கோடைகாலத்தில் அதிகம் உட்கொள்ளப்பட வேண்டிய காய்கறிகளில் ஒன்று வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இது உடலுக்கு உடனடி குளிர்ச்சியைத் தரும். இது செரிமானத்தை மேம்படுத்தி உடலில் உள்ள நீர்ச்சத்து குறைபாட்டை நீக்குகிறது.
3. தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர்
உடலை குளிர்ச்சியாகவும், இயற்கையாகவே நீரேற்றமாகவும் வைத்திருக்க எலக்ரோலைட்டுகள் கொண்ட இளநீர் அல்லது தேங்காய் நீர் ஒரு சிறந்த வழியாகும். கோடையில் சோர்வைப் போக்கும். இது உடலின் நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.
4. ஆரஞ்சு
ஆரஞ்சு வைட்டமின் சி ஊட்டச்சத்தின் சிறந்த மூலமாகும். இது உடலை குளிர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கோடையில் புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதை உட்கொள்வதன் மூலம் உடல் நீரேற்றத்துடன் இருக்கும். நீரிழப்பு பிரச்சனையும் இருக்காது.
5. முலாம்பழம்
தர்பூசணியைப் போலவே, முலாம்பழத்திலும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் அற்புத உணவான இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்கிறது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு, உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்பட அனுமதிக்காது.
6. பப்பாளி
பப்பாளி செரிமானத்தை மேம்படுத்தவும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் உடலிலை ஆற்றல் குறையாமல் வைத்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. கோடையில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பப்பாளி உதவுகிறது.
7. லிச்சி
லிச்சி பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. இது வெப்பத்தால் ஏற்படும் பலவீனத்தை நீக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | இளமையை காக்கும் கொலாஜன் என்னும் புரதம்... உடலில் குறையாமல் இருக்க செய்ய வேண்டியவை
மேலும் படிக்க | 145 கிலோவில் இருந்த இன்ஸ்டா பிரபலம்... 75 கிலோவுக்கு குறைத்தது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









