Quick Weight Loss : காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்! Fitness Trainer-ன் அறிவுரை..

Quick Weight Loss Tips : நம்மில் பலருக்கு, விரைவாக வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கான சில டிப்ஸை, ட்ரெயினர் ஒருவர் கூறுகிறார். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Dec 10, 2025, 07:00 PM IST
  • வெயிட் லாஸ் செய்ய காலையில் செய்ய வேண்டியது
  • கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க
  • ஃபிட்னஸ் கோச் அறிவுரை
Quick Weight Loss : காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்! Fitness Trainer-ன் அறிவுரை..

Quick Weight Loss Tips : விரைவில், 2026ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நாம் உடலை சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் கணக்கு போட்டு வைத்திருப்பாேம். இந்த கணக்கு, பல நேரங்களில் சரியானதாக மாறலாம், பல நேரங்களில் நம் கணக்கு பலிக்காமல் போகலாம். இது குறித்து, ஃபிட்னஸ் ட்ரெயினர் ஒருவர் கொடுத்திருக்கும் டிப்ஸை, இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

வெயிட் லாஸ்:

நம்மில் பலருக்கு, இப்போது இருக்கும் உடலமைப்பை மாற்றி, எப்படியாவது சீக்கிரமாக வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அதற்காக என்ன டயட் இருப்பது, என்ன உடற்பயிற்சி செய்வது என்பது தெரியாமல் இருப்போம். உண்மையில் வெயிட் லாஸ் என்பது நெடுநாளைக்கான ப்ராஸஸ் கிடையாது. இவற்றை, நாம் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சின்ன சின்ன மாற்றங்கள் மூலமாக கூட ஏற்படுத்திக்கொள்ளலாம். 

ஐந்து டிப்ஸ்:

ஃபிட்னஸ் கோச் ஆர்ஜா ஏடி, தான் உடல் எடையை குறைப்பதற்கு தினசரி வாழ்வில் ஏற்படுத்திய சின்ன சின்ன மாற்றங்கள் குறித்து ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில், விரைவில் வெயிட் லாஸ் செய்ய தான் என்னென்ன வழிமுறைகளை பின்பற்றினேன் என்பது குறித்து கூறியிருக்கிறார். காலையில் எழுந்ததும் இந்த சிறிய மாற்றங்களை செய்தாலே, நம்மால் உடல் எடையை குறைக்க முடியும் என்பது இவரது கூற்றாக இருக்கிறது.

1.நீர்ச்சத்து: Hydration:

காலையில் எழும்போது ஒரு பெரிய வாட்டர் பாட்டில் அல்லது ஜக்கில் தண்ணீர் ஊற்றி அதை குடித்து நாளை ஆரம்பிக்க வேண்டும். தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற இலக்குடன் நாம் நகர வேண்டும். எழும்போது ஒரு கிளாஸ் தண்ணீருடன் நாளை ஆரம்பிக்க வேண்டும். ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்தால் அதை முடிக்கும் இலக்குடன் நாம் இருத்தல் நல்லது. 

2. சூரிய வெளிச்சம்+நடைப்பயிற்சி: 

உடல் எடை குறைக்கும் அனைவரும் நடைபயிற்சி செய்வதையும் பார்த்திருப்போம். இதையே இந்த பிட்னஸ் கோச்சும் சொல்கிறார். நாம் காலை சூரிய ஒளியில் நடப்பதால் நமக்குள் இருக்கும் சர்காடியன் ரிதம் சரியாக இயங்குவதாக அவர் தெரிவிக்கிறார். இது நமக்கு நல்ல தூக்கத்தை வரவழைப்பதோடு, தேவையற்ற நேரத்தில் பசிப்பதையும் தடுக்கிறதாம். காலையில் எழுந்த பின்பு 10-15 நிமிடங்கள் நடப்பது 1,000-1,500 ஸ்டெப்ஸ்களுக்கு சமமாக இருக்கிறது. இத்துடன் நம் நாளை தொடங்கினால் அது நமக்கு பிட்னஸ் நோக்கிய சரியான நாளாக அமையும். 

3. காலை உணவு: 

நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை வைத்தும் நமது உடல் எடை அமையும். தினமும் காலையில் 30 - 35 கிராம் புரோட்டின் உடன் நாளை ஆரம்பிக்க வேண்டும். அதேபோல நாம் எடுத்துக் கொள்ளும் உணவில், 10- 15 கிராம் ஃபபர் இருக்க வேண்டுமாம். 

4.சுகர் ஃப்ரீ

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் செய்யும் விஷயம், சாப்பாட்டில் இருக்கும் சர்க்கரையை கட் செய்வது. இதனால், நாம் அதீத உடல் எடை ஏறுவதை தவிர்க்கலாம். அதிக காய்கறிகள், புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுகள், கார்ப்ஸ் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இது, உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு அதிகமாக பசி ஏற்படுவதையும், அதனால் நாம் அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கிறது. 

5.உணவை திட்டமிடுதல்:

உங்கள் உணவை திட்டமிட்டு சாப்பிடுவது நல்லது.  தினமும், மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதன் கூடவே, 2 ஸ்னாக்ஸ்களையும் எடுத்துக்கொள்ளலாம். இது, உங்களின் புரத intake-ஐயும், பிடித்த உணவை சாப்பிடுவதற்கும் திட்டமிடுவதற்கு உபயோகமாக இருக்கும். திட்டமிடாமல் கையில் கிடைப்பதை சாப்பிடுவது அதிக உடல் எடைக்கு வழி வகுக்கலாம். 

மேலும் படிக்க | Year Ender 2025: நோ சுகர் முதல் நோ கார்ப்ஸ் வரை.... 2025 -இன் டாப் 5 Weight Loss டயட் டிப்ஸ்

மேலும் படிக்க | 1 வாரத்தில் 1 கிலோ குறைக்கலாம்! Fitness Trainer கொடுக்கும் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News