Ramadan Fasting 2025: ரமலான் மாதம் தொடங்கியிருக்கும் நிலையில், நோன்புக்கு முன்னரும், நோன்புக்கு பின்னரும் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை இங்கு காணலாம்.

Ramadan Fasting 2025: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன் நோன்பு இருக்க தொடங்கி, சூரிய அஸ்தமனத்தின்போது நோன்பை முடிப்பார்கள்.
இது மதம் சார்ந்த நம்பிக்கை என்றாலும் இது உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. உடலின் நச்சுக்களை வெளியேற்ற ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும் கைக்கொடுக்கும் என்கிறார்கள்.
Ramadan Fasting 2025: சுஹூர் மற்றும் இஃப்தார்
இஸ்லாமியர்கள் நோன்புக்கு முன் அதிகாலையில் உண்ணும் உணவுகளை சுஹூர் என்றழைப்பார்கள், நோன்புக்கு பின் மாலையில் உண்பதை இஃப்தார் என்பார்கள். நோன்பு இருப்பது மட்டுமின்றி சுஹூர் மற்றம் இஃப்தாரின்போது நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுதான் உடல் ஆரோக்கியத்திற்கு முழுமையான நன்மையை அளிக்கும் என்கிறார்கள்.
Ramadan Fasting 2025: உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்
நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பதால் உடலில் நீர்ச்சத்து இருக்காது, அதிக தாகம் எடுக்கும். நீர்ச்சத்து குறைவதால் உடலில் சோடியம் உள்ளிட்ட எலக்ட்ரோலைட்ஸ்களில் அளவும் குறையும். எனவே, இதை தடுக்க நோன்பை ஆரம்பிக்கும் முன்னரும், நோன்பை முடிக்கும்போதும் அதிக எலக்ட்ரோலைட்ஸ் சேர்க்கப்பட்ட நீரை அதிகம் குடிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, அதில் சிறிதளவு சாதாரண உப்பு அல்லது பின்க் உப்பு ஆகியவற்றை சேர்க்கலாம். மேலும் உப்புடன் தண்ணீரில் எலுமிச்சை கலந்தும் குடிக்க வேண்டும்.
Ramadan Fasting 2025: நோன்புக்கு முன் என்ன சாப்பிடலாம்?
அதுமட்டுமின்றி, மைதா சேர்க்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், இனிப்புகள், டீப் பிரைடு உணவுகளை தவிர்த்துவிடுங்கள். அதற்கு பதில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் காய்கறிகளுடன் கொண்டைக்கடலை, நட்ஸ் மற்றும் விதைகள், முளைக்கட்டிய பயிர்கள் ஆகியவற்றை சாப்பிடலாம். யோகர்ட் உடன் நட்ஸ் மற்றும் விதைகளை எடுத்துக்கொள்ளலாம். வைட்டமிண்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மற்றும் பெரீஸ்களை சாப்பிடலாம்.
வெள்ளை அரிசி, மைதாவால் செய்யப்பட்ட ரொட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் முழு தானியங்கள், சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் இவற்றில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து உங்களுக்கு அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும்.
ஆரோக்கியமான கொழுப்புகளும் சுஹூர் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாம். தேங்காய், தேங்காய் எண்ணெய், ஆல்மண்ட் மில்க்கை எடுத்துக்கொள்ளலாம். இவை எல்லாம் சுஹூர் உணவுகளுக்கான பரிந்துரைகள்.
Ramadan Fasting 2025: நோன்பை முடித்து என்ன சாப்பிடலாம்?
நோன்பு முடிந்து இஃப்தார் திறக்கும்போது, உடனே வறுத்த உணவுகளுக்கு போக வேண்டும். சமமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, மெலிந்த இறைச்சிகள், முட்டை, பருப்புகள் ஆகியவற்றை புரதச்சத்திற்காக எடுத்துக்கொள்ளலாம். சிறுதானியங்கள், பயிர்கள் ஆகியவற்றில் உள்ள கார்ப்போஹைரேட் உங்களுக்கு ஆற்றலை அளிக்கும். அதிக காய்கறிகளையும், எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆலிவ் ஆயில், வெண்ணை, நட்ஸ் மற்றும் விதைகளை சாப்பிடுவதும் அவசியம். கொஞ்சம் குறைவாக வறுக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளை, இனிப்பு வகைககளை சாப்பிடலாம். ஆனால், உங்களின் இஃப்தார் உணவின் பெரும்பகுதி புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், கார்ப்போஹைட்ர்ஸ், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் ஆகியவை இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் உங்களின் விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன் உரிய மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ