பப்பாளி பழம் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோல பப்பாளிக்காயிலும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொட்டி கிடக்கின்றன. இதனை வாரத்தில் இருமுறையாவது சேர்த்துக் கொள்வதால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். மேலும் பப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது.
இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, சர்க்கரை நோய் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளால், அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையை மாற்ற ஆரோக்கியமான உணவுப் பழக்கம் அவசியம். காய்கறிகள் பழங்கள் அனைத்துமே ஊட்டச்சத்தின் களஞ்சியங்கள். அவற்றில் இன்று பப்பாளிக் காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி (Health Tips) அறிந்து கொள்ளலாம்.
நீரழிவு நோய்
சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு பப்பாளிக்காய் பெரிதும் நன்மை அளிக்கும் காய்கறிகளில் ஒன்று. பப்பாளியில் உள்ள பாப்பைன் என்ற நொதி, ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நீரழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் சிறுநீரகம், கணையம், கல்லீரல், கண்கள் ஆகியவை பாதிக்கப்படும் என்பதால் டயட்டில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
செரிமான ஆரோக்கியம்
செரிமானம் சிறப்பாக இருந்தால் தான் நோயற்ற வாழ்வு சாத்தியம். ஏனெனில் பெரும்பாலான உடல்நல பிரச்சனைகளுக்கு, செரிமான பிரச்சனை தான் காரணமாகிறது. பப்பாளியில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களுமே குடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் பப்பாளிக்காய் செரிமானம் சிறப்பாக இருக்க உதவும். மலச்சிக்கல் வாயு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, பப்பாளி காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
உடல் பருமன்
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், உடல் எடை எப்போதும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும், பப்பாளிக்காய் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, வளர்ச்சிதை மாற்றத்தையும் தூண்டுகிறது. மிகக் குறைந்த கலோரி கொண்ட இது, சிறந்த வெயிட் லாஸ் டயட் ஆக இருக்கும். பப்பாளிக்காய், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பதால், அடிக்கடி பசி எடுக்காது. இதனால் உணவு அதிகம் எடுத்துக் கொள்ளும் நிலையை தவிர்க்கலாம்.
பப்பாளிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் எளிய வழிகள்
பப்பாளிக்காயை பொரியல் கூட்டு என பல வகைகளில் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். பப்பாளி காயை பொடியாக நறுக்கி, வேக வைத்து தேங்காய் துருவல் சேர்த்து பொரியலாக தயாரித்தால் மிகவும் சுவையாக இருக்கும். பாசிப்பருப்பு அல்லது பாசி பயறு சேர்த்து, கூட்டாக தயாரிக்கும் சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









