)
Why We Should Not Drink Water After Eating Watermelon : வெயில் காலம் முடிய இன்னும் கொஞ்ச காலம் மீதமிருக்கிறது. இந்த காலத்தில் அதிகம் கிடைக்கும் பழங்களுள் ஒன்று, தர்பூசணி. வெளியில் பச்சை, உள்ளே சிகப்பு என்றிருக்கும் இந்த பழத்தை ஜூஸ் போட்டு சாப்பிட்டால் ருசி, அப்படியே சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப ருசி. உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள இந்த பழத்தை நாம் சாப்பிடலாம். ஆனால், இதை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்காதே என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். இது, அறிவியல் ரீதியாக எந்த அளவிற்கு உண்மை தெரியுமா?
தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது..
பிரபல மருத்துவர் தீபாலி ஷர்மா இது குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில், தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால், வயிற்றுக்கு உபாதை வரும் என்பதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும், தர்பூசணியில் 92% தண்ணீர்தான் இருக்கிறது. எனவே, தர்பூசணி சாப்பிட்ட பின் மேற்கொண்டு தண்ணீர் குடித்தால் அது உங்கள் செரிமான சக்தியை குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஏன் என்றால், தர்பூசணி சாப்பிட்ட பின்பு அதன் சாறு, ஏற்கனவே நம் குடலில் தங்கிவிடுகிறது. இதற்கு மேற்கொண்டு தண்ணீர் குடிக்கும் போதுதான் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்?
தர்பூசணி சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிப்பதால் வயிறு உபாதை வரும் என்று பெரியவர்கள் கூறுவதற்கு அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்றும் கூற முடியாது என மருத்துவக்ரள் கூறுகின்றனர். அப்போதுதான் நம் மனதில், “சரி அப்போ தர்பூசணி சாப்பிட்டு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்?” என்ற கேள்வி வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் மருத்துவர்கள், தர்பூசணி சாப்பிட்ட பின், 15-20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம் என்கின்றனர்.
சர்க்கரை நிறைந்த மாக்டெயில்கள்:
வெயில் காலத்தில் நாம் பல சமயங்களில் தர்பூசணியை வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். இதனால், சுகர் சிரப், சோடா கலந்த மாக்டெயில்களை (பானம்) குடிப்போம். ஆனால் இது குறித்து அட்வைஸ் செய்யும் ஊட்டச்சத்து நிபுணர்கள், இதில் அதிகளவு கலோரிக்கள் நிறைந்திருப்பதாக கூறுகின்றனர். எனவே, நீங்கள் தர்பூசணி சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதனை எளிமையாகவும் தூய்மையான முறையிலும் சாப்பிட வேண்டும். தண்ணீர், சர்க்கரை, சோடா என எதையும் கலக்காமல் அப்படியே பழமாகவோ, சாறாகவோ சாப்பிடலாம்.
சாட் மசாலா போட்டு சாப்பிடுவது:
இப்போது உருவாகியிருக்கும் புது ட்ரெண்ட்: தர்பூசணியில் ஏதேனும் ஒரு சாட் மசாலாவை தூவி சாப்பிடுவது. இனிப்பான ஒரு பொருளில் கொஞ்சமாக உப்பு அல்லது மிளகுத்தூள் போன்ற எதிர்விணையாற்றும் பொருட்களை தூவினால், அதன் இனிப்பு சுவை அதிகரிக்கும். இதற்காக தர்பூசணியில் சிலர் இப்படி சாட் மசாலாக்களை சேர்ப்பதுண்டு. ஆனால், இப்படி சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால், அந்த பழத்தில் இருக்கும் நீர்ச்சத்து குறையுமாம். அது மட்டுமன்றி, செரிமான கோளாறும் ஏற்படும் என கூறப்படுகிறது. இதை சாப்பிடும் போது சுவை நன்றாக இருந்தாலும், வயிற்றுக்கு உபாதையை ஏற்படுத்தும் என்பதை மறவாதீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ